இன்று விஞ்ஞான உலகம் மிகுந்த விஷத் தன்மையாகப் போய்க் கொண்டிருக்கிறது.
நாம் எவ்வளவு தான் சம்பாதித்து வைத்திருந்தாலும்
நாளைக்கு இது “என் பணம் தான்…!” என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
வலு கொண்டவர்கள் என்ன செய்கிறார்கள்?
அவர்களிடமிருக்கும் வலு கொண்டு நம்மிடமிருந்து தட்டிப் பறித்து
விடுகிறார்கள். ஓரளவு வசதியாக இருப்பவர்கள் பக்கத்தில் வசதி இல்லாதவர்கள் இருக்கின்றார்கள்
என்று வைத்துக் கொள்ளுங்கள்.
வீட்டு நிலத்தை கொஞ்சம்
தள்ளிப் போட்டு “இது என் இடம்..!" என்று ஆக்கிரமிப்பார்கள்.
ஏதாவது கேட்டால் உடனே சண்டைக்குப் போகிறார்கள். அதையும் தாண்டி…
“நீ என்ன செய்கிறாயோ செய்…” என்று கோர்ட்டுக்குப் போகிறார்கள்.
கோர்ட்டுக்குப் போனால் அவருக்குப் பணம் வேண்டும். வக்கீலுக்குக்
காசு கொடுத்தால் பணத்திற்காக நீதியைப் பேசி விடுவார். இப்படித் தான் நீதி இருக்கிறது.
நீதி எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது என்றால் வலு இருக்கும்
பக்கம் போய்க் கொண்டிருக்கிறது.
எனவே பணம் இல்லாதவர்கள் வேதனைப்படுகிறார்கள். பணம் வைத்திருப்பவர்கள்
அடுத்தவரை அடித்துத் தட்டிப் பறிக்க வேண்டும் என்ற உணர்வுகள் வருகிறது.
இந்த உணர்வு இராட்சச உணர்வாக அவர்களுக்குள் போகிறது.
“இப்படிச் செய்கிறானே…! என்று வசதி இல்லாதவர்கள் எண்ணும் போது
இராட்சச உணர்வு இங்கே இவர்களுக்குள் தோன்றி அவர்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
ரொம்ப ஏதாவது மீறிக் கேட்டால் “இருடா உன்னைப் பார்க்கிறேன்…
சுட்டுப் பொசுக்கி விடுகிறேன்…!” “நீ என் வழியிலே வா பார்க்கலாம்…!” என்று சொல்லும்
நிலைக்குப் போகிறது.
அசுர குணத்தை வளர்த்து முதலில் அங்கே வேதனையானாலும் அதே அசுர
குணங்களாக மாற்றி அவர்களை அழிக்கும் நிலையே வருகிறது.
1.அவன் உடலில் விளைய வைத்த அதே உணர்வு
2.இங்கே வந்ததும் ஓ…ம் நமசிவாய சிவாயநம ஓ…ம் என்று இந்த இயக்கத்தில்
மாற்றி விட்டுவிடும்…!
3.இதையெல்லாம் அன்று தெளிவாகச் சொல்லி இருக்கிறார்கள்.
இதை நாம் மாற்ற வேண்டும் அல்லவா…! அதனால் தான் நம்மைப் பாதுகாத்துக்
கொள்ளும் வழி அவசியம் தேவைப்படுகிறது.
1.இந்த உடலிலிருக்கும்போது தான் சக்திகளைக் கூட்ட முடியும்
2.இந்த உடலை வைத்துத்தான் அந்த மெய் ஒளியைப் பெற முடியும்.
3.அந்த மெய் வழியைப் பெறுவதற்காகத்தான் மகரிஷிகளும் ஞானிகளும்
அத்தனை பாடுபாடுபட்டனர்.
இதை நாம் எண்ணி எடுத்தால் இரண்டு பயன்களும் விளையும்.
1.இந்த மனித வாழ்க்கையில் செல்வமும் நமக்கு இணைந்து வரும்.
2.நம் மனமும் அமைதி பெறும்.
3.உடலை விட்டுப் பிரியும் பொழுது விண்ணுக்குப் போகிறோம்.
இந்த உடலில் நோயோ மற்ற துன்பமோ வந்தால் துன்பத்திற்கு இடம்
கொடுக்காதீர்கள்.
1..அது பாட்டுக்கு வரும் போகும்.
2.அந்த நேரத்தில் துன்பம் வந்தது…! அது அது பாட்டுக்குப் போகும்
நாங்கள் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் பரவ வேண்டும்
என்று
3.இதை நமக்குள் கூட்டிக் கொள்ள வேண்டும்.
4.எனக்குள் இந்த அழுக்குச் சேராத நிலை பெற வேண்டும்
5.என் சொல் கேட்பவர்களுக்கு இனிமையாக இருக்க வேண்டும்
6..என் பார்வை எல்லோருக்கும் நல்லதாக இருக்க வேண்டும்
7.இந்தச் சக்திகள் அனைத்தும் என்னுள் விளைந்து கொண்டே இருக்க
வேண்டும் ஈஸ்வரா.. என்று
8.உயிரிடம் சொல்லி முறையிட வேண்டும்.
9.இந்த உணர்வை நாம் ஆழமாக பதியச் செய்து இயக்கமாக மாற்ற வேண்டும்.
வித்தை (ஒரு செடி) மண்ணிலே பதியச் செய்தபின் எந்தச் சத்து
வித்தில் இருக்கின்றதோ அதே சத்தைக் காற்றிலிருந்து இழுத்து செழிப்பாக வளர்கின்றது.
அதைப் போல இந்த மனித வாழ்க்கையில் நாம் பல உணர்வுகளைச் சந்திக்க
நேர்ந்தாலும்
1.அடிக்கடி அந்த ஞானிகளை எண்ணிச் சுத்தப்படுத்திவிட்டு
2.ஞானிகளைப் பற்றி இந்த மாதிரி எண்ணிக் கொண்டு இருந்தால்
3.ஞானிகளின் உணர்வின் சத்து நம் எல்லா உணர்வுகளிலும் விளையும்.
துன்பத்தை எண்ணாது துன்பத்திலிருந்து
விடுபட்ட ஞானிகளின் உணர்வைச் சேர்க்கச் சேர்க்க ஞானிகளின் ஒளி உயிராத்மாவில் பெருகி
இந்த
உடலை விட்டுப் போகும் போது நாம் அங்கே அவர்களுடன் ஐக்கியமாகலாம்.
மாறாகத் துன்பங்களை எண்ணி எண்ணி வேதனையை வளர்த்தால் மீண்டும்
மனித உடல் கூட இனிமேல் பெற முடியாது.