கர்ப்பமுற்ற தாயின் குடும்பத்தில் அந்தப் பத்து
மாதங்களும் ஒரு தெய்வீகக் குடும்பமாக இருந்து எல்லோரும் ஒன்று சேர்ந்து வேறு
எந்தக் குறைகளையும் எண்ணாதபடி அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ
நட்சத்திரமான அந்த பேரருள் கருவிலே வளரும் சிசுக்களைப் பெறச் செய்தல் வேண்டும்.
அகஸ்தியனின் பார்வையில் சர்வ நஞ்சுகளையும்
அடக்கியது போன்று கருவிலே வளரும் அந்தச் சிசு
1.நஞ்சுகளை நீக்கும் சக்தியும் அகண்ட
அண்டத்தையும் அறிந்திடும் ஆற்றலும்
2.விஷத்தை வென்று ஒளியாக மாற்றும் ஆற்றலும்
பெறவேண்டும் என்று
3.குடும்பத்தில் உள்ளோர் ஏகோபித்த நிலையில் 10
மாதங்களும் இப்படிச் செயல் படுத்த வேண்டும்.
1.துருவநட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
இந்த உலகம் முழுவதும் படரவேண்டும்
2.உலகில் உள்ள அஞ்ஞானம் அகல வேண்டும்
அசுர உணர்வுகள் அழிந்திடவேண்டும்
3.அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள்
பேரொளி பெறவேண்டும் என்ற உணர்வை
4.எந்தக் கர்ப்பமுற்ற தாய் எண்ணி எடுத்ததோ
5.அப்படி உருவான அந்தச் சிசு நம்மையும்
காப்பான்…!
6.அகஸ்தியனைப் போன்ற மெய் ஞானியாக உலகையும்
காக்கும்
சக்தியாக வருவான்….!
சக்தியாக வருவான்….!
நமது பூமியில் பிரளயம் போன்று 2004ல் ஆனபின்
2014க்குள் அசுர உணர்வுகள் அழிந்து விடும். 2014க்கு மேல் தான் நாம் “தென்னாடுடைய
சிவனே போற்றி..” என்று சொல்கின்றோம் அல்லவா…!
அவன் உணர்வைக் கருவில் பெற்று வளர்ந்த
சிசுக்கள் ஞானிகளாகத் தோன்றுவார்கள்.
இப்படி உருவாகும் ஞானக் குழந்தைகள் திசைக்கு
ஒரு 100 பேர் இருந்தால் போதும். அவர்கள் இடும் மூச்சலைகள் வெளி வரும் பொழுது நஞ்சை
அகற்றும் ஆற்றலாகப் பரவத் தொடங்கும்.
இன்று எப்படி அணுக் கதிரியக்கப் பொறிகள்
ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது அது சூறாவளியாக மாறுகின்றதோ அதே போல அந்தக்
குழந்தைகள் விடும் மூச்சலைகள்
1.கடும் விஷத்தை ஒதுக்கித் தள்ளும் தன்மை
வருகின்றது.
2.உங்கள் வாழ்க்கையிலே நீங்கள் இதைச்
சந்திக்கலாம்.
ஏனென்றால் இப்போது (உபதேசம் செய்த வருடம் 2002)
40 வயது 50 வயதில் உள்ளவர்கள் எல்லாம் இருக்கின்றீர்கள். 20 முதல் 30 வயது
உள்ளவர்களும் இருக்கின்றீர்கள்.
நான் (ஞானகுரு) சொன்னதைப் பதிவு செய்து வைத்து
கொள்ளுங்கள். இதையெல்லாம் நீங்கள் பார்க்கலாம்.
கருவில் வரும் சிசுக்களை ஞானிகளாக (குழந்தைகளை)
உருவாக்கும் தன்மை பெற்றுத் தான் நாளை வரும் கொடூர அரக்க உணர்வுகளிலிருந்து
மீட்டுத் தரும் நிலை வரும்.
இது நிச்சயம்…!