ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 28, 2017

இனிமேல் அணு குண்டுகளை வெடிக்கச் செய்தாலும் அல்லது அவைகளாக வெடித்தாலும் நம் (உயிர்) நிலை என்ன ஆகும்? இந்தப் பிரபஞ்சம் என்ன ஆகும்?

1.இன்று விஞ்ஞான அறிவால் ஏற்பட்ட நிலைகளில்
2.அணு குண்டுகள் திடீரென வெடிக்க நேர்ந்தால் புகை மண்டலமாகி
3.அந்தப் பகுதிகள் அனைத்தும் இருள் சூழும் நிலை வந்துவிடும்.

அந்தப் பகுதிகளில் சூரியனுடைய ஒளிக்கதிர்கள் இல்லை என்றால் உறை பனியாக மாறி
1.நமது பூமி திசை திரும்பி விடும்.
2.நாம் எங்கே இருப்போம் என்று தெரிய முடியாது.

இதனின் உணர்வின் அழுத்தங்கள் சூரியனுக்குச் சென்றால் சூரியனும் சிதைந்துவிடும். நமது பிரபஞ்சமும் சிதைந்து போகும் நிலை வருகின்றது.

இதிலே மற்ற உயிர் அணுக்களும் மனிதனாக உருவான நம் உயிரும் இந்த விஷத் தன்மைகள் பெற்ற பின் மீண்டும் ஏகாந்த நிலை கொண்டு பரந்த அண்டத்தில் தான் படர வேண்டும்.

அடுத்து எந்தப் பிரபஞ்சத்தின் நிலைகளில் இந்த உயிரணுக்கள் ஈர்க்கப்படுகின்றதோ அங்கே செல்லும். சென்றாலும் புது விதமான உணர்வுகளாகத்தான் உருவாகும்.

விஷத்தின் தன்மை கொண்டு வளர்ந்து மற்றதைக் கொன்று புசிக்கும் உணர்வு கொண்ட உடல் தான் பெற முடியும். அதிலிருந்து மீண்டும் மனிதனாக வளர வேண்டும் என்றால் அதற்குத்தக்க ஒரு பூமி வேண்டும்.

ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் நம் பூமியைப் போல் உண்டு.

அங்கே கடந்து சென்று இந்த உயிரணு செல்வதற்கு முன் இந்த உடலிலே மடியும் போது எத்தகைய வேதனைப்பட்டோமோ
1.அதே வேதனையுடன் துடித்து
2.நரகலோகத்தை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டி வரும்.
3.உணரலாம். வேதனையை அனுபவிக்கலாம்.
4.ஆனால் மாற்றிடும் உடல் இல்லை.

இதைப் போன்ற நிலைகள் மாறிக் கொண்டு இருக்கும் இந்த நிலையில் நமது குரு காட்டிய அருள் வழியில் நமக்குச் சொந்தமாக்க வேண்டியது எது?

நம் உயிருடன் ஒன்றி என்றுமே ஒளியின் உடலாகப் பெறும் அதைச் சொந்தமாக்குதல் வேண்டும்.

உயிருடன் ஒன்றி ஒளியின் உடல் பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பெறச் செய்யும் பயிற்சியைத்தான் இப்பொழுது கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
1.எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
2.எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று
3.நம் எண்ணத்தில் தெரிந்து கொண்ட உணர்வுகளுக்கெல்லாம்
4.அந்த ஒவ்வொரு அணுக்களுக்கும் கண்ணின் நினைவைச் செலுத்தித் தியானிக்க வேண்டும்.

எங்கள் சிறு குடல் பெரும் குடல்; கணையங்கள்; கல்லீரல் மண்ணீரல்; சிறுநீரகங்கள்; நுரையீரல்; இருதயம்; கண்களில் உள்ள கருமணிகள்; நரம்பு மண்டலம்; எலும்பு மண்டலம்; விலா எலும்பு குறுத்தெலும்புகள்; எலும்புக்குள் இருக்கும் ஊன்; தசை மண்டலம்; தோல் மண்டலம் இதைப் போன்ற எல்லா உறுப்புகளுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் செலுத்திப் பழக வேண்டும்.

இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எல்லா அணுக்களிலும் கலக்கும் பக்குவத்திற்கு வரவேண்டும்.

நம் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் அனைத்தும் ஒளியின் அணுக்களாக உருப்பெறத் தொடங்கும். இவ்வாறு விளைந்த ஒளியின் உணர்வுகள் உயிராத்மாவில் பெருகினால் நாம் ஒளியின் சரீரம் ஆகின்றோம்.

எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் வலுவாக்கிக் கொண்டோமோ உயிராத்மா பிரியும் பொழுது அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து என்றும் பதினாறு என்ற நிலையில் வாழலாம்.