நம் உயிரை நாம் நம்பிப் பழக வேண்டும். அம்மா
அப்பாவைக் கடவுளாக மதிக்க வேண்டும். உயிரைக் கடவுளாக மதிக்க வேண்டும். உடலை அவன்
வீற்றிருக்கும் ஆலயம் என்று எண்ண வேண்டும்.
தீமை வந்தால் உடனடியாக அந்த மகரிஷிகளின் அருள்
சக்தியை எடுத்து நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
1.ஒவ்வொரு நாளும் அருள் உணர்வைப் பெருக்கிக்
கொண்டே வர வேண்டும்
2.நமக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளை நாம்
பார்க்கலாம்
3.பார்க்கும் சந்தர்ப்பம் கண்டிப்பாக வரும்.
4.அகண்ட அண்டத்துடன் (2000 சூரியக் குடும்பம்)
தொடர்பு கொண்ட உணர்வையும் நாம் உணர முடியும்.
5.எங்கே போக வேண்டும்…! என்ற உணர்வும் வரும்.
6.அதை வைத்து (நம் எண்ணத்தால்) நாம் செல்ல
வேண்டிய இடத்தை நிச்சயம் அடைய முடியும்.
1.எண்ணியதை உருவாக்குவது நம் “உயிரே”.
2.எண்ணியதை உடலாக்குவதும் “உயிரே”.
3.எண்ணியதை ஆண்டு கொண்டிருப்பதும் ஆண்டவனாக
இருப்பதும் நம் “உயிரே”.
நாம் எதை எண்ணுகின்றோமோ அதை வைத்து… அடுத்து…,
“அவன் ஆட்சியும் நம்மை ஆளுவதும் அவனே”.
ஆகவே அவன் நமக்குள் இருக்கும் பொழுது அவனை
மதித்துப் பழக வேண்டும்.
1.“அவனை மதிக்காதபடி…!”
2.உடல் தான் பிரதானம் என்று எண்ணினால்
3.உடலுக்குள் விளைந்த உணர்வின் செயலாக நாம்
எண்ணியது உருவாக்கப்பட்டு
4.முடிவில் வேதனைப்படும் நிலை தான் வரும்.
இதிலிருந்து நாம் அனைவரும் மீண்டு அழியா
ஒளியின் சரீரம் பெறுவோம்.