ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 1, 2017

மற்றவர்களை ஞானிகளாக வளர்த்தால் தான் “நாம் ஞானியாக” முடியும்

குருநாதர் காட்டிய அருள் வழியில் உயிரே கடவுள்...” என்று நாம் சொன்னால் கடவுள் தான்... உயிர்..” என்று எழுதி  வைத்து விடுகின்றார்கள்.

காப்பி அடித்தாலும் உயிரே கடவுள் என்றால் அந்த உண்மைப் பொருளைத் தெரிவதற்கு இல்லை. ஆனால் கடவுள் தான் உயிர் என்ற நிலைக்கு மாற்றிச் சில நிலைகளை வெளிப்படுத்துகின்றார்கள்.

உட் பொருளைக் கண்டு தனக்குள் அறிந்தோ தன் உணர்வின் தன்மையை அந்தக் குரு மூலமாகவோ அறிந்தோ அதைச் சொல்வதில்லை.

ஏனென்றால அதை
1.முதலில் தனக்குள் படைத்துப் பார்க்க வேண்டும்.
2.அதனின் இயக்கத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
3.பின் அது சொல்லாக வர வேண்டும்.

இதையேல்லாம் பனிரெண்டு வருடங்கள் யாம் அனுபவித்தபின் தான்
1.புற நிலைகள் இருப்பது அக நிலைகளுக்குள் எப்படி இயக்குகின்றது என்றும்
2.இந்த உடலுக்குள் எப்படி விளைகின்றது என்றும்
3.அதை எப்படி மாற்ற வேண்டும் என்றும் குருநாதர் உணர்த்தினார்.

ஆரம்பத்தில் நானும் (ஞானகுரு) உங்களை மாதிரி நன்றாகச் சாப்பிட்டு நண்பர்களுடன் மகிழ்ச்சியாகச் சுற்றிக் கொண்டு இருந்தவன் தான்.

பின்னாடி இதை எடுத்துக் கஷ்டப்படச் செய்து எல்லாம் தெரிந்து கொண்ட பிற்பாடு தான் எனக்குள் விளைந்த அந்த மெய் உணர்வுகளை இப்போது நான் உங்களிடம் சொல்வது.

அதே சமயத்தில்
1,இதை எல்லாம் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணினால்தான்
2.”எனக்கே சத்து...!” என்று குருநாதர் சொல்லி விட்டார்.

எதை?

நீங்கள் எல்லாம் அந்த மெய் ஞானிகள் பெற்றது போல ஆற்றல்கள் பெற்றால் தான் எனக்குச் சத்து என்றார் குருநாதர்.

உன்னைச் சந்திப்போர் அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் அறியாத இருள்கள் நீங்கி மெய் ஒளிகள் பெற வேண்டும் என்று
1.இதை நீ ஜெபித்துக் கொண்டிரு - அவர்களைப் பிரார்த்தனை செய்
2.அவர்களுக்குப் பெற வேண்டும் என்று எண்ணு
3.அப்போது அந்த உணர்வு தான்... உனக்குள் விளையும்...!” என்று குருநாதர் சொன்னார்.

அதையே தான் யாம் உங்களிடமும் சொல்வது.

இதை
1.நீங்களும் இதே மாதிரி சொல்லிக் கொண்டு வாருங்கள்
2.என்னைச் சந்திப்போர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
3.உலகைக் காத்திடும் உத்தம ஞானிகளாக வளரவேண்டும் என்று
4.இதைச் சொல்லிக் கொண்டே வரப்போகும் போது நிச்சயம் நீங்களே ஞானியாக விளைகின்றீர்கள்.
5.நாமும் மகரிஷிகள் சென்ற எல்லையை அடைகிறோம்

நாம் இடக்கூடிய ஞானிகளின் மூச்சலைகள் இந்த உலகம் படரும். உலக மக்களைக் காக்கும் சக்தியாக அது மலரும்.