ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமையை நீக்கி மகிழ்ந்திடும்
உணர்வாக இருப்பதை “மகிழ்வாகனா…!” என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.
“வேலும் மயிலும் துணை…” என்று காட்டி மயிலின் காலடியில்
பாம்பைக் காட்டுவார்கள் ஞானிகள். விஷமான பாம்பை மயில் விழுங்கினாலும் அதனின் மகிழ்ச்சியின்
தன்மையில் மகிழ்ந்து ஆடுகின்றது.
ஆறாவது அறிவு கொண்ட நாம் இயற்கையில் உருவான பல
பொருள்களை மாற்றி அதைச் சமைத்து சுவையானதாக ஆக்கி உட்கொண்டு மகிழ்ச்சியான நிலைகளில்
நாம் வாழுகின்றோம்.
இந்த நிலையை உணர்த்துவதற்குத்தான்
1.ஆறாவது அறிவின் கூர்மையைச் “சக்தி வேல்…”
2.அந்த வேலின் தன்மை - அடி பெருத்தும் நுனி
சிறுத்தும் காட்டினார்கள்.
1.ஆறாவது அறிவை “அகண்ட நிலைகள்..” என்ற நிலையைக்
காட்டி
2.அந்த எண்ணத்தின் நிலையில் வளர்ச்சி எதுவோ
3.அகண்ட (அண்டத்தின்) நிலையையும் மனிதன் நாம் அடைந்திட
முடியும் என்று காட்டுவதற்காகத்தான்
4.முருகனுக்கு வேலைப் போட்டுக் காட்டினார்கள் ஞானிகள்.
நம் எண்ணங்கள்
எவ்வளவு கூர்மையாக எதன் மீது பாய்ச்சப்படுகின்றதோ அதன் தன்மை கொண்டு அகண்ட நிலைகள்
“பின்…” வருகின்றது. (கூர்மை – நுனி. அகண்ட நிலைகள் அடைவது – வேலின் அடிப்பாகம்
பெரிது)
அகண்ட அண்டத்தில் ஒளியின் சரீரமாக நாம் அடைய முடியும்.
அகண்ட பேரண்டத்தில் இருக்கும் நாம் எல்லாவற்றையும் அடைய முடியும் என்ற காரண விளக்கங்களைக்
காட்டி கந்த புராணத்தில் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.
ஒரு பொருளைக் காட்டினாலும் அதனின் “மூல இயக்கங்கள்…
எவ்வாறு…?” என்றுதான் காரணப் பெயர்களை அவ்வாறு வைத்தார்கள்.
1.காரணங்களுக்குள் “காரணம்..”
2.அதாவது "ஓமுக்குள் ஓம்" என்பார்கள்.
நம் உயிர் ஓம் என்று இயக்கினாலும் நாம் எண்ணிய உணர்வுகள்
அனைத்தும் நம் உடலுக்குள் இருந்து அதுவும் ஓம் என்று இயக்குகின்றது.
1.பல கோடிச் சரீரங்களில் ஒன்றை ஒன்று காத்திடும்
உணர்வுகளை எப்படி விளைய வைத்ததோ
2.ஒன்றை ஒன்று விழுங்கி ஒன்றைக் காத்திடும் உணர்வுகள்
எப்படி வந்ததோ
3.இவை எல்லாம் ஒருக்கிணைந்து
4.ஒரு உணர்வின் தன்மையாக எண்ணங்களாகக்
குவிக்கப்படும் பொழுது
5.இதில் ஒன்றிலிருந்து எடுத்துக் கொண்டது -
"ஓமுக்குள் ஓம்...." ஓமுக்குள் ஓம்...." ஓமுக்குள் ஓம்...." ஓமுக்குள்
ஓம்... என்று
6.ஒன்றினை ஒன்று இணைத்து - ஒன்றின் நிலைகள் எவ்வாறு
செயல்படுகின்றது..? என்ற நிலையைத் தெளிவாக்குவதகற்குத்தான்
7.ஓமுக்குள் ஓம் என்று இதைக் காட்டினார்கள் ஞானிகள்.