ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 16, 2017

அருள் ஞான “வளைகாப்பு…”

கருவுற்றிருக்கும் பொழுது குடும்பத்தில் வெறுப்போ வேதனையோ சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ இதைப் பேசத் தொடங்கினால் கருவுற்றிருக்கும் தாய் நுகர நேர்ந்தால் இந்த உணர்வின் தன்மை அணுக்கருக்களாக விளைந்து கருவில் இருக்கும் அந்தக் குழந்தைக்கும் அது இணைந்து விடுகின்றது.

அதன் வாழ்க்கையில் அது வளர வளர வளர்ந்த பின் தனக்கு வேறு சிந்தனை இல்லாது தவறு செய்யும் நிலையோ வேதனைப்படும் உணர்வோதான் வளைகாப்பாக அமைகின்றது.

ஆகவே இதிலிருந்து விடுபட “வளைகாப்பு…” என்றால் என்ன என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

கர்ப்பமான அந்தக் குடும்பத்தில் நாம் எத்தகைய வளைகாப்பு கொடுக்க வேண்டும்? இதனை நாம் சற்று சிந்தித்துச் செயல்படுத்துதல் வேண்டும்.

கருவுற்றிருக்கும் காலங்களில் அந்தக் குடும்பத்தில் ஒற்றுமையும் சகோதரதத்துவத்தையும் நாம் தொழில் வளம் பெறுவதையும் ஒன்றுபட்டு வாழும் நிலைகளையும் பண்புடன் வாழும் நிலைகளையும் எப்படி என்ற ஞானிகள் கண்ட அந்த அருள் ஞான நூல்களை நாம் எடுத்துப் படிக்கவேண்டும். அந்தக் கர்ப்பிணிப் பெண் அதையெல்லாம் கேட்கும்படி செய்ய வேண்டும்.

கருவில் குழந்தை வளரப்படும் போது
1.மகரிஷிகளின் அருள் சக்தி என் கருவில் வளரும் குழந்தை பெறவேண்டும்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் குழந்தைக்குப் பெறவேண்டும்.
3..இருள் நீக்கிப் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.
4..உலகையே காத்திடும் உணர்வுகள் என் குழந்தைக்கு விளையவேண்டும் என்று
5.இந்த உயர்ந்த ஞானத்தைக் கருவில் விளையும் அந்தக் குழந்தைக்கு வினையாகச் சேர்க்க வேண்டும்.
6.இதை நுகர்ந்தறிந்தால் கருவில் வளரும் குழந்தைக்கு வளைகாப்பாகின்றது. பாதுகாப்பாகின்றது.

கருவுற்ற தாய் இவ்வாறு பிரார்த்தனை செய்யவேண்டும். இது குழந்தைக்குக்குப் பூர்வ புண்ணியமாக அமையும்.

அதே தாய் உலக மக்கள் அனைவருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று அதை எண்ணும் போது அந்த உணர்வுகள் தாய் கருவில் வளரும் அந்தச் சிசுவிற்கு பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

அன்னை தந்தையருக்கும் இந்தச் சக்திகள் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று இதைச் செய்யச் சொன்னான் அன்று ஞானி.

கர்ப்பமுற்ற தாய் இதை அடிக்கடி எண்ணும் பொழுது ஆன்மாவில் தீமைகள் புகாது வலிமையாகின்றது.

சாங்கியப்படி ஏழாவது மாதம் நாம் செய்கின்றோம்.

ஞானிகள் சொன்னது கர்ப்பம் என்று தெரிந்துவிட்டாலே ஒன்றிலிருந்து அந்தத் தொண்ணூறு நாளைக்கு
1.அருள் ஞான வளைகாப்பாக
2.ஞானிகளின் அருள் சக்திகளைத் தாய்கும் சேய்க்கும் ஊட்ட வேண்டும்.
3.இதைத்தான் ஞானிகள் “வளைகாப்பு…” என்று சொன்னார்கள்.