ஓம் ஈஸ்வரா குருதேவா என்று புருவ மத்தியிலிருக்கும்
உயிரை எண்ணி 27 நட்சத்திரங்களின் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
27 நட்சத்திரங்களையும் நமது குருநாதர் மாமகரிஷி
ஈஸ்வராய குருதேவர் எமக்குக் (ஞானகுரு) காட்டும் பொழுது
1.அந்த 27 நட்சத்திரத்தையும் எப்படித் தொட வேண்டும்
என்று
2.எனக்கு அந்தப் பக்குவத்தைக் கொடுத்தார்கள்.
3.இதை எதனுடன் இணைக்க வேண்டும்.
4.அதை எடுத்தால் அந்தக் கதிரியக்கங்கள் உன்னை எப்படிச்
சுடாதிருக்கும்
5..அந்தக் கதிரியக்கங்கள் உன்னைத் தொடாதிருக்கும்
என்பதையும் காட்டினார் குருநாதர்.
அதன் வழி கொண்டு பிரார்த்தனை செய்து விட்டுத் தான்
குருவின் துணை கொண்டு 27 நட்சத்திரங்களின் சக்திகளை நான் கவர்கின்றேன்.
கவர்ந்த அந்த நிலை கொண்டு தான் 27 நட்சத்திரத்தின்
சக்தி நீங்கள் பெறவேண்டும் என்று நான் எண்ணும் பொழுது
1.உங்களை எண்ணச் சொல்லி - இந்த இணைப்புடன்
2அதை ஊழ் வினையாக உங்களுக்குள் சிறுகச் சிறுகப்
பதியச் செய்கின்றேன்.
அதை உங்களுக்குள் கிடைக்கப் பெறச் செய்வதற்கும்
அந்த 27 நட்சத்திரங்களின் ஆற்றல்களையும் சமப்படுத்தும் நிலைக்கும் கொண்டு வருகின்றோம்.
ஏனென்றால் மகரிஷிகள் அனைவவருமே
1.அந்த 27 நட்சத்திரத்தினுடைய உணர்வுகளை எடுத்துத்
தான்
2.அது அனைத்தையும் ஒன்றாக்கி
3.தனக்குள் ஒளியாக ஒளியின் சரீரமாக மாற்றினார்கள்.
எதுவும் இயக்கமல்லாது அதனின் உணர்வின் இயக்கமாக
மாற்றி NEGATIVE/POSITIVE +/- கரண்ட் எப்படி உண்டாகின்றதோ அதைப் போல சம நிலைப்படுத்தி
ஒருமையின் நிலைகள் கொண்டு ஒன்றைத் தனக்குள் இறையாக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றியவர்கள்.
அதனின் தன்மையை நீங்களும் பெற வேண்டும் என்ற உணர்வுடன்
தான் இந்த 27 நட்சத்திரத்தின் சக்தியை உங்களை எடுக்கச் சொல்கிறோம்.
மகரிஷிகள் இதையெல்லாம் வடித்துக் கொண்டவர்கள்.
அந்த உணர்வின் சத்துக்களை இதனுடன் இரண்டறக் கலந்து
அது புதுப் புது எண்ணங்களாக உருவாக்கி அதனின் துணை கொண்டு இதை நீங்கள் பருகும் நிலைக்கே
இதைச் செய்கின்றோம்.
உங்கள் வாழ்க்கயில் நீங்கள் எதை எண்ணினாலும் இதைப்
பெறவேண்டும் என்று ஏக்கத்துடன் இருப்பீர்கள் என்றால் அது ஊழ் வினையாக உங்களுக்குள்
பதிவாகி அதனின் செயலாக உங்கள் உணர்வுகள் இயங்கி அந்த மெய் ஞானியின் உணர்வின் ஒளியைப்
பெறக்கூடிய தகுதியை பெறுகின்றீர்கள்.
இப்படி அந்த மகரிஷிகளின் உணர்வுகளை எண்ணும் பொழுது
அந்த எண்ணம் நமக்குள் வலுபெறுகின்றது. அப்பொழுது அதனின் துணை கொண்டு நமது ஆன்மாவாக
மாறுகின்றது.
இந்த உணர்வின் துணை கொண்டு தான் நஞ்சினை வென்றிடும்
ஆற்றலைப் பெற முடிகின்றது. ஆகவே
1.உயிரை ஓம் ஈஸ்வரா குருதேவா என்று எண்ணும் பொழுதெல்லாம்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று
இதனின் நினைவு கொண்டு செயல்படுங்கள்.