ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 22, 2017

உடலை விட்டுச் சென்றால் அடுத்து எங்கே போக வேண்டும் என்று முடிவு செய்யுங்கள் – பிறவி வேண்டுமா…! பிறவியில்லா நிலை வேண்டுமா…?

ஒரு உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மா இன்னொரு மனித உடலில் பேய் என்ற நிலையில் இருந்து இயங்கி வந்தாலும் அந்த உடலிலும் ஐய்யய்யோ... எரியுதே...! எரியுதே...!” என்ற நிலை தான் வரும்.

உடலுக்குள் அந்த வேதனையான உணர்வினைச் சுவாசித்து அந்த உணர்வின் தன்மை
1.“என்னை இப்படியே பண்ணுகின்றாயே…” என்று சப்தம் போட்டுத்
2.தண்ணீர் கொடு... தண்ணீர் கொடு... தண்ணீர் கொடு... எரிகிறதே...! என்று
3.ஊற்றிக் கொண்டே இருக்க வேண்டியது தான். 
4.ஆனால் அருளாடும்.
5.அந்த எரிச்சலின் தன்மை கொண்டு உணர்வின் சக்தி இயக்கியதை அது செய்கின்றது.

நாம் எல்லோருமே இறந்த பின் மீண்டும் இன்னொரு மனித உடலில் நின்று தான் அடுத்து இயக்குகின்றது.

பயத்தின் நிலைகள் கொண்டு இறந்திருந்தால் பயமான இன்னொரு உடலுக்குள் சென்று விட்டால் அங்கே பயத்தின் நிலைகளை ஊட்டிக்கொண்டே இருக்கும். 

கோபத்தை வளர்த்து இறந்திருந்தால் கோபமான மனிதனின் ஈர்ப்புக்குள் சென்று கோபமும் கோபமும் சேர்ந்து அந்த நிலையை இயக்கச் செய்யும் நிலை ஆகிவிடும்.

கடைசியில் இதனுடைய நிலைகள் அதிகமாக வளரச் செய்யப்படும் பொழுது அறியாமலேயே இரத்தக் கொதிப்பு வரும். நாம் எதைச் செய்தாலும் அதை இயக்க முடியாத நிலைகளில் முடக்கி விடுகின்றது.

நாம் எதை  முடக்கிவிடுவேன் என்று முடக்குகின்றோமோ கோபத்தின் தன்மையில் அந்த இரத்தக் கொதிப்பு வந்த பின் கை கால்களை மடக்க விடாதபடி எதையும் செயல் படாதபடி செய்து விடுகின்றது. 

நாம் எண்ணிய உணர்வுகளை இங்கே பிரம்மமாகச் சிருஷ்டிக்கின்றது. அதுதான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய். நாம் எண்ணிய உணர்வுகள் நமக்குள் நோயாக மாறுகின்றது. ஆகவே
1.இந்த மனித நிலைகளில் உடலிலே நினைவு இருக்கும் பொழுதே
2.மெய் ஞானியின் அருள் ஒளியைப் பெறுவோம்.

நாம் தவறு செய்து நமக்குள் தவறு வருவதில்லை. நம்மை அறியாதபடி நாம் நல்ல பாசத்துடன் இருந்தாலே நமக்குள் அந்த உணர்வுகள் இயக்கி விடுகின்றது.

அந்த உணர்வுகள் உங்களுக்குள் இயக்காத வண்ணம் தடுத்துக் கொள்ள அந்த மகரிஷிகளின் அருள்சக்திகளை நீங்கள் எல்லொரும் பெறவேண்டும் என்பதற்காகத்தான்
1.திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப
2.எந்த ரூபத்தில் நீங்கள் எண்ணினாலும் அதைக் கிடைக்கச் செய்து கொண்டிருக்கின்றோம்.

ஏனென்றால் சிலர் இப்படி என்றால் இப்படி எண்ணுவார்கள். அப்படி என்றால் அப்படி எண்ணுவார்கள்.

நீங்கள் எந்தத் திசையில் எந்தக் கோணத்தில் எண்ணிணாலும் உங்கள் நினைவு கொண்டு உங்களைக் காக்கும் உணர்வாக விளையவேண்டும் என்பதற்காகத்தான்
1.ஒரு உணர்வின் தன்மையை ஒரு பக்கம் சொல்லி
2.இன்னொரு உணர்வின் தன்மையை இங்கே இயக்கச் செய்து
3.அந்த உணர்வின் வித்தை உங்களுக்குள் செயல் படுத்தச் செய்கின்றோம்.
4,“ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் எண்ணி அந்தக் காக்கும் உணர்வின் சக்தியைக் கூட்டிக் கொள்ளுங்கள்.

ஆகவே தீய உணர்வுகள் உங்களுக்குள் சாராத வண்ணம் காக்கும் உணர்வாக அந்த மகரிஷிகளின் உணர்வுகள் உங்களுக்குள் விளைய வேண்டும் என்பதற்காகத்தான் இதை நான் மீண்டும் மீண்டும் சொல்லுகின்றேன்.

மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெருகப் பெருக உடலை விட்டுப் பிரியும் உயிரான்மா ஏகாந்த நிலையாக மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குள் சென்றடையும்.

"இனி பிறவி இல்லை...!" என்ற நிலை அடையலாம்.