ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 7, 2017

"ஏழரை நாட்டுச் சனி பிடித்துவிட்டது...!" என்று ஜாதகத்தில் சொன்னால் நாம் என்ன செய்ய வேண்டும்...?

தர்மபுரியில் பவானி என்ற ஊரில் ஒருவன் (அக்காவின் மகன்) தன் சின்னம்மாவிடம் தன் செலவுக்காகக் காசு கேட்டு வந்திருக்கின்றான்.

அவன் ஊர் சுற்றித் திரிவதால் பணம் கேட்டதும் அவர்கள் “இல்லை...” என்று சொல்லி உள்ளார்கள்.

நீ என்ன கொடுப்பது...! நானே எடுத்துக் கொள்கிறேன்...! உன்னைக் கொன்று விட்டு நான்  எடுத்துக் கொள்வேன் என்று தன் சின்னம்மாவைக் கொன்று விட்டான்.

பணத்தையும் எடுத்துக் கொண்டு ஜாலியாக ஐயாயிரம் ரூபாய் செலவு அளித்து விட்டான்.

சின்னம்மாவைக் கொன்ற பின்னர் சேலத்தில் அவர்கள் அக்கா வீட்டுக்குப் போயிருக்கின்றான். அங்கே போய் “இப்படி ஆகிவிட்டது...! ஆனால் யார்... எவர்...! என்று தெரியவில்லை...” என்று சொல்லி இருக்கின்றான்.

ஏனென்றால் சின்னம்மாவைக் கொன்றவன் இவர்களைக் கொலை செய்ய எவ்வளவு நேரம் ஆகும்? இந்த உணர்வுகள் அவர்களுக்குச் சந்தேகம் ஆனவுடன் அவனைப் போலீசில் பிடித்துக் கொடுத்து விட்டார்கள்.

இன்று இந்த மாதிரி நிறைய நடக்கின்றது. நீங்கள் யாரை நம்பி வாழப் போகின்றீர்கள்?

1.எத்தனையோ கடவுள்களையும் தெய்வங்களையும் வணங்குகின்றோம்.
2.ஜாதகம் ஜோதிடம் பார்த்துத் தான் கல்யாணத்தைச் செய்கின்றோம்.
3.அக்கா மகன் இப்படிச் செய்வான் என்று ஜோதிடத்தில் கூறினார்களா?
4.கல்யாணம் முடிக்கப்படும் போது ஜாதகத்தில் எழுதி இருந்ததா?
5.ஜாதகம் சொன்னவன் ஏன் தவற விட்டான்? சொல்லி இருக்க வேண்டும் அல்லவா...!

அதிலிருந்து நாம் தப்பித்துக் கொள்வது எப்படி என்று ஞானிகள் மக்களை ஒழுங்குபடுத்தி ஒரு சீரான பாதையில் செல்வதற்காக வானவியல் புவியியல் உயிரியலைக் காட்டினார்கள்.

27 நட்சத்திரங்களும் பல விதமான விஷத் தன்மைகள் கொண்டது. அதை அதிகமாகக் கவர்ந்து கொண்ட கோள்களிலும் விஷத் தன்மைகள் பரவி இருக்கும்.

அவைகள் வெளிபடுத்தியதைச் சூரியன் கவர்ந்து செல்லப்படும் போது பூமியின் ஈர்ப்புத் தன்மைக்குள் வந்து விட்டால் இங்கே விஷத் தன்மைகள் பூமியிலே பரவுகின்றது.

அது எந்தப் பகுதியில் பரவுகின்றதோ அந்தப் பகுதியில் விஷத் தன்மைகள் பரவி வருகின்றது.

இன்றுள்ள ஜாதகப்படி இன்ன நிலையில் இன்ன நட்சத்திரத்தில் வருகின்றது. அப்போது இன்ன கோள்கள் இன்ன திசையில் சேர்க்கப்பட்டு இந்தக் கோள்கள் இப்படி இயங்குகிறது என்று குறிப்பிட்ட கோள்களின் உணர்வுகளைத்தான் எழுத முடிகின்றது.

இப்படி (நட்சத்திரங்கள் கோள்கள்) கலவையாகி வரக்கூடிய உணர்வுகளைச் சூரியன் எடுத்து தன் உணவாக எடுத்துக் கொள்ளும் நிலைக்குச் செல்லப்படும் போது பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்குள் அது வந்தவுடனே இழுத்து இங்கே காற்றழுத்த மண்டலத்தில் மோதியவுடனே நெருப்பாகவும் புகையாகவும் ஆவியாகவும் மாற்றி விடுகின்றது.

அப்போது இவர் ஜாதகத்தை இன்னது நல்லது இன்னது கேட்டது என்று இப்படி எல்லாம் எழுதி வைத்திருப்பார்கள். வானவியலைப் பற்றி ஜாதகத்தில் எழுதியிருந்தாலும் (அந்தக் குறிப்பிட்ட) ஜாதகத்தில் எல்லாம் நல்லதாகும் என்று எண்ணியிருந்தாலும் இந்த விஷத்தன்மையான நிலைகளில் பட்டபின் பல விதமான நோய்கள் வந்து மடிகின்றார்கள்.

பிறகு ஜாதகம் நிஜமாகுமா பொய்யாகுமா...? நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

ஜாதகத்தைப் பார்த்து “ஏழரை நாட்டுச் சனியன் வந்துவிட்டான்...” அதனால் என் தொழில் சரி இருக்காது என்று மனதில் பதிவு செய்து கொண்டால் அதற்கு என்ன அர்த்தம்?

அந்த ஜோசியக்காரன் நமக்குள் இதை ஆழமாகப் பதிய வைத்து விட்டான் என்று அர்த்தம்.
1.அப்படிப் பதிந்த நிலைகள் மீண்டும் நினைவுக்கு வரும் போது 
2."காரியம் தோல்வியாகுமே..." இந்த  ஏழரை வருஷம் நாம் எப்படி இருப்பது..? என்று
3.அவன் கூறிய உணர்வுகளை நமக்குள் திரும்பத் திரும்ப எண்ணி எடுத்துக் கொள்கிறோம்.
4.நாம் வெற்றி பெறும் சந்தர்ப்பத்தையும் மன உறுதி கொள்ளும் நிலையும் இழந்துவிடுகின்றோம்.

நமது வாழ்க்கையில் நல்லதை உறுதிபடுத்தும் நிலையையே மாற்றி ஒவ்வொரு கேட்டது நடக்கும் போதும்
1.ஏழரை நாட்டுச் சனி நடப்பதால் இப்படித்தான் இருக்கும்...! என்று
2.நல்லதைப் பெறும் தகுதியையும் நல்லதாக்கும் பண்புகளையும்
3.சுத்தமாகவே இழக்கச் செய்துவிடுகின்றது.

நம் நாட்டைக் காட்டிலும் ஜப்பானில் மத நம்பிக்கை உண்டு. ஜாதக நம்பிக்கை அதிகமாக உண்டு.

ஒரு செருப்பு வைத்தாலும் கூட எந்தத் திசையில் வைத்தால் வைக்க வேண்டும் என்று பார்ப்பார்கள். இன்ன வீட்டிற்குப் போனால் இன்ன திசையில் வைக்க வேண்டும் என்றெல்லாம் பார்த்து வைக்கக்கூடிய அந்த அளவிற்குச் சாங்கியங்கள் உண்டு.

ஆனால் அதே ஹிரோஷிமாவில் அணுகுண்டுகள் வெடித்தபின் இவர்கள் சாஸ்திரமோ மதமோ அல்லது கடவுளின் அடிப்படையில் சாங்கியங்கள் செய்த நிலைகளோ அவர்களைக் காப்பாற்றியதா...? அவர்களால் தப்ப முடிந்ததா...? இல்லையே.

எல்லா இடமும் கட்டிடங்களும் கருகியது. அவர்கள் எண்ணமும் கருகியது.

அதே சமயத்தில் ஹிரோஷிமாவில் அந்தக் காற்றலையில் பரவிக் கொண்டிருந்த  விஷக் கதிரியக்கங்கள் எங்கெங்கெல்லாம் பரவியதோ அங்கெல்லாம் கருவில் உள்ள குழந்தைகள் தாக்கப்பட்டது.

இன்றும் அங்கே கருச் சிதைவாகின்றது. ஊனமாகின்றது. கண்கள் இழக்கப்படுகின்றது. உறுப்புகள் சிதைகின்றது. அந்தக் கதிரியக்கம் கருவில் இருக்கக்கூடிய குழந்தையைச் சிதையச் செய்கின்றது.

புத்தர் காட்டிய அருள் வழியில் அவர்கள் கடைப்பிடித்துச் சென்றாலும்  அவர்கள் எழுதிய சாஸ்திரங்கள் இன்று விஞ்ஞான உலகால் நிலைத்து இருக்கின்றதா?

நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

“இது நிலையற்றது...” என்ற நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக மிளகாயைத் தூவுகின்றனர். அல்லது சமையலுக்காக வேண்டி மிளகாயை வறுக்கின்றார்கள். அது கருகிக் காற்றில் வருகிறது.

இங்கே நாம் இருக்கும் பக்கம் வருகின்றது என்று வைத்துக் கொள்வோம். நுகர்ந்தால் உங்களுக்கு இருமல் வருகின்றது.

அப்பொழுது நான் சொல்வதைக் கேட்பீர்களா? அல்லது மிளகாய் நெடியைச் சுவாசித்ததும் இருமுவீர்களா?

இந்தத் திசைப் பக்கம் வருகின்றது என்றால் அதை நீங்கள் நுகர்கின்றீர்கள்.
1.அது உங்களை இப்படித்  திருப்புகின்றது.
2.ஆனால் நெடி எங்கேயோ இருந்து வருகின்றது.

இதைப் போன்று நமது வாழ்க்கையின் நிலையில் எத்தகைய கொடிய தன்மைகள் வந்தாலும் அதன் மேல் எண்ணத்தைச் செலுத்தாது அதிலிருந்து  நாம் பிரிந்திருத்தல் வேண்டும்.

இந்த மனித வாழ்க்கையில் வேதனைப்படுவோர் மீதோ  சங்கடப்படுவோர் மீதோ  வெறுப்படைவோர் மீதோ  கோபப்படுவோர் மீதோ நாம் திரும்பாது
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் திரும்பி
2.இத்தகைய தீமைகளை எல்லாம் மாற்றி அமைத்தல் வேண்டும்.
3.ஏனென்றால் துருவ நட்சத்திரம் மனிதனை மாற்றியமைக்கக் கூடிய சக்தி.

இருபத்தி ஏழு நட்சத்திரங்களின் சக்தியை ஒன்றாக்கியது அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி தருவ நட்சத்திரமானது. அதை நுகர்ந்து அருள் வாழ்க்கை வாழ்ந்து நல்லதை நமக்குச் சாதகமாக ஆக்கிட முடியும்.