துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்
“ஈஸ்வரா…” என்று புருவ மத்தியிலும் உடலில் உள்ள அணுக்களுக்கும் நினைவைச் செலுத்துதல்
வேண்டும்.
நம் உடலிலே துருவ நட்சத்திரத்தின் வலிமை பெறப்படும் பொழுது
அந்த ஈர்க்கும் சக்தியால் நம் உடலின் ஈர்ப்பு வட்டத்தில் (ஆன்மாவில்) உள்ள வேதனை மனக்கலக்கம்
போன்ற உணர்வுகளை ஈர்க்காது அவைகளை ஒதுக்கித் தள்ளும் சக்தி பெறுகின்றது.
வெறுப்போ கோபமோ ஆத்திரமோ பயங்கரமோ மற்ற எத்தனையோ வகையான உணர்வுகள்
1.நம் உடலைச் சுற்றி அந்த உணர்வுகள் படர்ந்திருப்பதை
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்
என்று உயிரான ஈசனிடம் வேண்டி
3.நம் உடலில் உள்ள உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குச் செலுத்தப்படும்
பொழுது
4.அது வலு பெற்று நம் உடலைச் சுற்றியுள்ள அந்த ஆன்மாவைத் தூய்மைப்படுத்தித்
5.தீமையான உணர்வுகளை விலக்கித் தள்ளிவிடும்.
நாம் நுகர்ந்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
உணர்வுகள் நாம் எண்ணும் பொழுதெல்லாம் நம் “விலா எலும்புக்குள்ளும்…” பதிவாகி விடுகின்றது.
1.சந்தர்ப்பத்தால் நாம் கொடிய உணர்வுகளைப் பார்த்தாலும்
2.கொடிய உணர்வுகளை நீக்கிய அந்தச் சக்தி வாய்ந்த துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளியும்
3.நமக்குள் இது அதைக் காட்டிலும் வலுக் கூடிக் கொண்டே வரும்.
இப்படி ஒவ்வொரு நொடியிலேயும் அந்தத் துருவ நட்சத்திரத்தின்
உணர்வை நமது “விலா எலும்புகளில் அதைப் பதிவாக்கி… அதனின் கணக்கைக் கூட்டிப் பழக வேண்டும்...”
1.இரவு படுக்கப்படும் பொழுதும்
2.காலையில் எழுந்திருக்கும் பொழுதும்
3.தொழிலுக்குச் செல்லும் பொழுதும்,
4.தொழிலை ஆரம்பிக்கும் பொழுதும்
5.எந்த வேலையச் செய்ய ஆரம்பிக்கும் பொழுதும்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வை நமக்குள் அதிகமாகச்
செலுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.
அப்பொழுது இதற்கு முந்தைய தீய வினைகளோ பாவ வினைகளோ சாப வினைகளோ
பூர்வ ஜென்ம அலைகளோ நமக்குள் பதிவாகி இயக்கிக் கொண்டிருப்பினும் அவைகளும் நாளுக்கு
நாள் குறையத் தொடங்கும்.
இவ்வாறு நமது உடலில் எடுத்துக் கொண்ட துருவ நட்சத்திரத்தின்
உணர்வுகளை
1.மூச்சலைகளாக வெளிப்படும் பொழுதும்
2.நமது பூமியில் பரவும் பொழுது
3.நமது வீட்டில் குடியிருக்கும் பொழுதும்
4.நம் வீட்டுக்குள் பரவும் பொழுதும்
5.நம் வீட்டுக்குள் வரும் தீமையான உணர்வுகள் அனைத்தையும் வெளியே
தள்ளி விடுகின்றது.