இயற்கையின்
உண்மை நிலைகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் (ஞானகுரு) காட்டினார். இந்த
உண்மை நிலைகளை நான் எளிதில் தெரிந்து கொள்ளவில்லை.
பட்டினியாக
இருந்து மிகவும் கஷ்டப்பட்டுத் தான் தெரிந்து கொண்டேன். பல வகைகளிலும் இன்னல்படச்
செய்து பல அனுபவங்களைப் பெறச் செய்தார்… அனுபவங்களைக்
கொடுத்தார்.
தீமைகளினுடைய
உணர்வுகளை எப்படி அகற்ற வேண்டும்? அதை ஒளியாக எப்படி மாற்ற
வேண்டும்? என்று குருநாதர் காட்டிய வழியில் இதைப் போதிக்கும்
பொழுது அதையெல்லாம் உங்கள் அனுபவத்தின் மூலமாகத் தெரிந்து கொள்ள
முடியும்.
ஒவ்வொரு
சந்தர்ப்பத்திலும் உங்கள் வாழ்க்கையில் உங்களுடைய அனுபவம் பேசும்.
மற்றவர்கள்
தவறுகள் செய்து கொண்டேயிருக்கின்றார்கள் என்று உணர்ச்சி வசப்படாமல் அந்த உணர்வுகளை
எப்படித் திருத்த வேண்டும் என்ற அனுபவம் வரும்.
1.தீமைகள் நமக்குள்
புகாது தடுக்கும்
2.அத்தகைய
அனுபவங்கள் பெற வேண்டும்.
நான்
கஷ்டப்பட்டுத் தெரிந்து கொண்ட சக்தியை உங்களிடம் கொடுக்கின்றேன். உங்களை மீட்டிக்
கொள்ள அரும் பெரும் சக்தியைக் கொடுக்கின்றேன்.
மகரிஷிகளின் அருள்
சக்தி பெறவேண்டும் என்று நீங்கள் தியானத்தால் எடுத்துப் பெற்றுக் கொள்ள முடியும்.
1.உங்களுக்கு
நீங்கள் தான் காக்க முடியுமே தவிர…
2.“நான் வந்து
காப்பேன்…” என்று சொன்னால்
3.எனக்குக் கீழ்
நீங்கள் அடிமையாகத் தான் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.
ஏனென்றால்
1.நீங்கள் எண்ணியதை
உங்கள் உயிர் தான் இயக்குகின்றது
2.அந்த உணர்வுப்படி
உங்கள் உயிர் தான் உங்களைக் காக்கின்றது;
3.உங்களை
வளர்க்கின்றது.. அதன் வழி உங்களை இயக்குகின்றது.
4.இதை நீங்கள்
மறந்திடாமல் செயல்படுத்துங்கள்.
என்னைச் சாமி
தான் காப்பாற்றினார் அவர் தான் காரணம் என்று என்னை எண்ணக் கூடாது. சாமி செய்தார்
என்று என்னை எண்ணினீர்கள் என்றால் என்னிடம் எத்தனையோ ஆசைகள் இருந்தது.
1.அப்போது
சாமியினுடைய ஆசைகள் உங்களுக்குக்குள் வர வேண்டுமா?
2.இதையெல்லாம்
வென்றவனின் அந்த அருள் ஆசைகள் வேண்டுமா?
அருள் ஞானிகள்
பெற்ற நஞ்சினை வென்ற உணர்வுகளைச் சொன்னால் அதை நான் பெறுகின்றேன். எனக்குள்
இருக்கக்கூடிய அந்த இருளை நீக்கக் கூடிய பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
நினைக்கின்றேன். குருநாதர் எனக்குக் கொடுத்தார்.
இதே மாதிரி
நீங்கள் இதைப் பெறுங்கள். இந்த உண்மையெல்லாம் உங்களுக்குத் தெரியும். நீங்கள்
அதைப் பற்றுங்கள்.
என்னைச் சாமி
அப்படிக் காப்பாற்றினார் இப்படிக் காப்பாற்றினார் என்று சொல்ல வேண்டியதில்லை.
நீங்கள் உங்களுடைய எண்ணத்தால் தான் உங்களைக் காப்பாற்றிக் கொண்டீர்கள்.
உதாரணமாக
கடையில் சரக்குகளை வைத்திருக்கின்றார்கள் என்றால் அதிலே இருப்பது நல்ல சரக்குதானா…! என்று பார்க்கின்றோம். அதில் சரக்கைத் தேர்ந்தெடுத்துச் சமைத்துச்
சாப்பிடும்போது அதில் ருசி வருகின்றது… இல்லையா…?
அப்படியானால்,
1.அப்பொழுது
அந்தக்கடைக்காரர் உங்களைக் காப்பாற்றினாரா?
2.இல்லை…, ருசியைக் கொடுத்தாரா?
கடையில் பல பொருள்களை
வைத்திருக்கின்றர்கள். அதை வாங்கி ருசியாகச் சமைப்பது உங்களிடம் தான்
இருக்கின்றது.
அதனால் தான்
இந்த உண்மையின் இயக்கங்களை உணர்ந்து நான் உயர்ந்த சொற்களைச் சொல்கின்றேன்.
1.இதை நீங்கள்
கவர்ந்து கொண்டால் வசிஷ்டர்.
2.அந்த உணர்வின்
தன்மையை அறிந்தால் பிரம்மகுரு
3.அது அருந்ததி
அதைன் நிலைகள் அந்த உணர்வின் சக்தியாக அது உங்களை இயக்கும் என்பதை
4.உணர்வின்
இயக்கங்களைப் பற்றி இராமயாணத்திலே இவ்வளவு தெளிவாகக் கொடுத்திருக்கின்றார்கள்.
நாம் இதை
அறிந்து கொண்டோமா…?
சில பேர் என்ன
சொல்வார்கள்? “ஒரு மந்திரத்தைச் சொல்லி… தொட்டுக் கொடுத்து விடுகின்றேன்…!” என்று
சொல்கின்றார்கள். அவர்கள் எண்ணம் தான் உங்களுக்குள் பதிவாகும்.
குருநாதர்
அப்படிச் சொல்லச் சொல்லவில்லை.
சாமி உபதேசித்த
வழியில் நீங்கள் இதைப் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை எடுத்து உங்களுக்குள்
பதிவாக்கினீர்கள் என்றால் இதை நுகரப்படும் போது இந்த நிலை வரும்.
சாமி சொன்னார்…! என்று ”சாமியிடம் இருந்து இந்தச் சக்திகள் பெற
வேண்டும்” என்று சொல்லிவிட்டு என்னைத் தியானம் செய்தால்
நிச்சயம் நான் சிறு வயதில் எத்தனையோ குறும்புத்தனம் செய்திருப்பேன் எத்தனையோ
செய்திருப்பேன்.
இந்த உணர்வு
கலந்து வந்தால் உங்களுக்குள் எது வரும்? இந்த மனிதனின்
உணர்வு தான் அங்கே வரும். இதையெல்லாம் முதலில் மாற்றியமைக்கக் கற்றுக் கொள்ள
வேண்டும்.
ஏனென்றால் இன்று
யாரோ செய்வார்…! எவரோ செய்வார்…! என்று
இந்த நிலையில் தான் நாம் இருக்கின்றோமே தவிர
1.உங்களை நீங்கள்
நம்ப மறுக்கின்றீர்கள்.
2..உங்களை நீங்கள்
நம்புங்கள்.
3.நம் உயிர் நாம்
எண்ணியதை உருவாக்குகின்றது.
எதனையும்
வெல்லக் கூடிய வல்லமை இந்த மனித உடலிலே உண்டு. அதே சமயத்தில் நமக்குள் பதிவாக்கும்
சக்தியும் உண்டு. ஆகவே தான்
1.அருள் ஒளியை ஞான
வித்தாக உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.
2.இதை நீங்கள் கவர்ந்து
கொள்ளுங்கள்.
3.அந்த அருளை
மீண்டும் மீண்டும் நினையுங்கள்.
4.அந்த அரும்
சக்தியை உங்களுக்குள் உருவாக்குங்கள்.
ஒருவன் நம்மைத்
திட்டினால் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது அதே உணர்வுகள் நமக்குள் பகைமையை
வளர்க்கின்றது. இதே போலத்தான் பல நிலைகள் வருகின்றது.
அருள் ஞானத்தை
உங்களுக்குள் வளர்க்கப்படும் பொழுது அந்தப் பேரின்பப் பெரு வாழ்வு என்று ஞானைகள்
அடைந்த அந்த உணர்வுகள் உங்களுக்குள் பேரின்பம் பெறக்கூடிய வாழ்க்கையாக அமையும்.
உடலை விட்டு
வெளியே வரும் பொழுது மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணையலாம்.
ஆகவே என்னை
எண்ணித் தியானிப்பதற்குப் பதில் குரு உபதேசித்த வழிகளைக் கடைப்பிடித்துப்
பேரின்பத்தைப் பெற முடியும் என்ற நிலைக்கு வாருங்கள்.