ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 19, 2017

“கண்ணுக்குண்டான சக்தி…” உயிருக்கு எப்படி உறுதுணையாக வருகின்றது...?

கண்ணின் புலனறிவின் இயக்கத்தை நாம் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.

ஏனென்றால்
1.கண்கள் உயிருக்கு உறுதுணையாக இருந்து
2.பார்க்கும் அந்த உணர்வின் தன்மை இங்கே பட்டு
3.எதிர் நிலை உணர்வு உருவாக்கி (உயிரிலே மோதும்போது)
4.தனக்குள் சுவாசிக்கச் செய்யும் இந்தத் திறன் கண்ணிற்கு உண்டு.

 இதனால் தான் கண்களைக் கண்ணன் என்று பெயரை வைத்து இந்த மனித உடலுக்குச் சாரதியாக வழி நடத்திச் செல்கின்றான் என்ற நிலையைத் தெளிவாகக் காவியங்களில் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

உதாரணமாக ஒரு மனிதன் வேதனைப்பட்டுக் கொண்டு இருக்கும் போது நாம் பார்த்தவுடனே
1.அவன் உடலுக்குள் துன்பம் இருக்கின்றது.
2.அங்கிருந்து அந்தத் துன்பத்தின் நிலைகள் வெளிப்படுத்துகின்றது என்ற
3.இந்த நினைவைக் கண்கள் இழுத்து நமக்கு உணர்த்துகின்றது.

அப்போது இங்கே உணர்த்தப்படும்போது அப்போது சங்கநாதம் ஆகின்றது. இங்கே தான் குருக்ஷேத்திரப்போரை ஆரம்பிக்கின்றான் கண்ணன்.

கண்களால் கவரும் வேதனை உணர்வுகள் உயிரில் படும்போது நாதங்கள் வருவதைச் சங்க நாதம் என்று காட்டுகின்றார்கள்.

உயிர் (குரு) இருக்கும் பாகத்தில் வேதனையான உணர்வுகள் மோதியவுடன் எதிர் மறையான எண்ணங்களும் உணர்ச்சிகளும் கிளம்புகிறது ஒன்றுக்கொன்று போர் செய்கின்றது.

குருவான உயிர் இருக்கும் க்ஷேத்திரத்தில் போர் ஆரம்பிக்கின்றது என்று காட்டுகின்றார்கள்.

இந்த உணர்வின் வேகத் துடிப்பை எண்ணி அவர் படும் துன்பமான வேதனையான உணர்வைத் தடுத்து… தடுக்கச் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

கண்ணை மேல் நோக்கிப் பார்த்துப் புருவ மத்தியில் உயிரை எண்ணி “ஓ…ம்…” என்கிற போது அந்த உணர்வின் அலையை (புருவ மத்தியில்) வேகமாக ஓதும் போது உயிரின் இயக்க ஓட்டம் அதிகமாகின்றது.

அப்போது அந்த வேதனையான உணர்வுகள் அங்கே குறைக்கப்படுகிறது. ஓ…ம் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்க வேண்டும்.

மனிதர்கள் தனக்குள் இப்படி வரும் தீய இருண்ட நிலைகளை இயக்கக்கூடிய உணர்வின் சக்தியை அந்த இருளான நிலையை அது மாய்த்து ஒளியாக மாற்ற ஞானிகள் இவ்வாறு காட்டினார்கள்.

நட்சத்திரங்கள் கோள்கள் வெளிப்படுத்துவதைச் சூரியன் கவர்ந்து அதை மோதி ஒளியாக மாற்றி உலக நிலைகளிலே ஆற்றல் மிக்க வெப்ப காந்த அணுக்களை இந்தப் பிரபஞ்சம் முழுவதும் அனுப்புகின்றது.

இதைப் போல மனிதனுக்குள் ஒவ்வொரு நிலையும் ஒவ்வொருவரையும் இன்புறச் செய்யக்கூடிய எண்ணத்தைத் தனக்குள் வளர்த்து ஒவ்வொருவருக்கும் இது நீ நலம் பெறுவாய்.

1.தன் வாழ்க்கையில் வரக்கூடிய தீமைகளை நீக்கி
2.எத்தகைய விஷம் வந்தாலும் விண்ணின் ஆற்றலால் அதைத் தனக்குள் சேராவண்ணம் தடுத்து
3.ஒளியின் உணர்வாகத் தன் உயிராத்மாவாக மாற்றி
4.இந்த உடலைச் சுருக்கி அந்த உணர்வின் சத்தை ஒளியாக மாற்றி
5.விண் சென்றவர்கள் சப்தரிஷிகள்.

ஒரு டன் தாவர இனத்தை எடுத்து வேகவைத்து அந்த ஆற்றல் மிக்க சக்திகளைத் தனித்துப் பிரித்து வடிகட்டி எடுக்கும்போது அந்த உணர்வின் சக்தி ஆற்றல்களாக “ரசமாக…” வந்துவிடுகின்றது..

இதைப்போல தான் மகரிஷிகள் உடலின் உணர்வின் சக்தியை உணர்வை ஒளியாக மாற்றி இந்த உணர்வின் ஆற்றல் மிக்க சக்தியை உயிராத்மாவில் வடித்து ஒளியாக மாற்றி விண் சென்றார்கள்.

இதே கண்கள் தான் அந்த ஞானிகளுக்குள்ளும் அறிந்துணர்ந்து அந்த ஆக்க ரீதியான பணிகளைச் செய்தது.

அதைப்போல இந்த உடலில் உருபெறச் செய்யும் நம் உயிரான ஈசனிடம் "ஓ…ம் ஈஸ்வரா…" என்று வேண்டி கண்ணின் நினைவு கொண்டு மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணி எடுத்துப் பழக வேண்டும்.

கண்கள் காட்டிய வழியில் அந்த மகரிஷிகள் இருக்கும் எல்லையை நாம் அடைய முடியும்.