ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 4, 2017

வியாபாரம் தொழில் செய்வோர் ஆத்ம சுத்தியைக் கடைப்பிடிக்க வேண்டிய முறை – “உங்கள் வியாபாரமும் தொழிலும் பெருகி மகிழ்ச்சி உண்டாகும்”

இப்போது நாம் வீட்டை விட்டு வெளியிலே எந்தக் காரியத்திற்குப் போனாலும் இப்படி
1.ஓம் ஈஸ்வரா என்று உங்கள் உயிரை எண்ண வேண்டும்.
2.அடுத்து அம்மா அப்பாவை எண்ண வேண்டும்.
3.அவர்கள் அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
என்று வானத்தை நோக்கி ஏங்கி எண்ண வேண்டும்.

அடுத்துக் கண்ணை மூடி உங்கள் உடலுக்குள் மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று உங்கள் நினைவு முழுவதையும் உங்கள் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

அந்த மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் இந்த நினைவை உங்கள் உடலில் சேர்த்துச் சேர்த்துப் பழக வேண்டும். இது தான்
ஆத்ம சுத்திஎன்பது.


இப்போது நீங்கள் வெளியில் போகும்போது இந்த மாதிரி ம் ஈஸ்வராஎன்று உயிரை எண்ணி விட்டு அம்மா அப்பாவை நினைத்துக் கொண்டு
1.மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா பெற வேண்டும்.
என்று உங்கள் உடலுக்குள் நினைவைச் செலுத்தி ஒரு ஒரு நிமிடம் இரண்டு நிமிடம் எண்ணி இருக்கலாம்.

அவ்வாறு இருந்தவுடனே கண்ணைத் திறக்கின்றீர்கள் பின்னர்
1.நாங்கள் பார்க்கின்றவர்கள் எல்லாம் நலம் பெற வேண்டும்.
2.நாங்கள் பார்ப்பவர்களுக்கு அந்த நல்ல மனம் வர வேண்டும்.
3.எங்கள் சொல் இனிமை பெற வேண்டும்.
4.எங்கள் செயல் எல்லாம் நல்லதாக இருக்கவேண்டும் என்று
5.வீட்டை விட்டு வெளியில் போகும் போது இதைப்போல எண்ணிக் கொள்ளலாம்.

நான் கடை வைத்திருக்கின்றேன். கடையைத் திறக்கப் போகின்றேன் என்று சொன்னால் வீட்டில் இந்த மாதிரி ஆத்ம சுத்தி செய்து விட்டுக் கடையை நினைக்க வேண்டும்.

மகரிஷிகள் அருள் சக்தி கடையில் படர வேண்டும்.  நம் கடையில் இருக்கும் சரக்குகளை வாங்குபவர்கள் வாடிக்கையாளர்கள் அனைவருமே
1.மகரிஷிகள் அருள் சக்தியால் உடல் நலம் மனபலம் பெற வேண்டும்.
2.எங்கள் பார்வை சொல் அவர்களுக்கு நல்லதாக்க வேண்டும்.
3.எங்களப் பார்க்கும் பொழுது அவர்களுக்கு நல்ல மனம் வர
வேண்டும் என்று

கடைக்குப் போகும் போது இப்படிச் செய்து விட்டுச் செல்லுங்கள். ஆனால் கடைக்குப் போனவுடனே இதே மாதிரி இரண்டாவது தரம் செய்ய வேண்டும்.

1.எங்களிடம் சரக்குகளை வாங்கிப் பயன்படுத்துகின்றவர்கள்  குடும்பத்தில் அனைவரும் மகரிஷிகள் அருள் சக்தியால் நலமாக இருக்க வேண்டும்.
2..அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும்
3.எங்களைப் பார்ப்பவர்கள் மலரைப் போல மணம் பெற வேண்டும் என்று
கடையில் உட்கார்ந்து அதை எண்ணுதல் வேண்டும்.

இது தான் செய்யும் தொழிலே தெய்வம்என்பது. இதை எண்ணி நம் உயிரிலே சேர்க்கப்படும் போது நம் உடலில் அந்த வாசனை வரும்.

ஒவ்வொருவருக்கும் இந்தச் சரக்கு எடுத்துக் கொடுக்கும்
போதெல்லாம்

1.மகரிஷிகள் அருள் சக்தி வாடிக்கையாளர்கள் பெற வேண்டும்.
2.சாமான்கள் வாங்கிக் கொண்டு போனவர்கள் நன்றாக இருக்க வேண்டும் ஈஸ்வரா…” என்று
3.உயிரை நினைத்துநீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று மனதில் நினைத்துக் கொடுங்கள்…!
4.”செய்யும் தொழிலே தெய்வம்” – அந்த இடத்தில் நம் எண்ணம் செயல் எல்லாமே தெய்வமாக மாறுகின்றது.
5.உங்கள் வியாபாரம் நன்றாகப் பெருகும். அதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

அவர்கள் சாமான் வாங்க வரும்போது இடைவெளியில் எத்தனையோ இடையூறுகளைப் பார்த்து விட்டு வருகின்றனர். அல்லது அவகள் குடும்பத்தில் கஷ்டமாக இருக்கும் நேரத்தில் நம்மிடம் சரக்கு வாங்குகிறார்கள் என்றால் அந்தக் கஷ்டமான உணர்வுஅவர்கள் உடலில் இருக்கும்.

சரக்கு வாங்கப்போகும் போது கஷ்டமான உணர்வுடன்அந்தச் சொல்…” வெளியே வருகின்றது. அவர்கள் சொல்வதைக் காதில் கேட்கின்றோம். சரக்கு எடுத்துக் கொடுக்கின்றோம்.

அவர்கள் உடலில் விளைந்து அந்த உணர்வான சத்து அந்த சொல்லுக்குள் கலந்து வரும் போது அந்த உணர்ச்சியைத் தூண்டி அவர்கள் உடலிலிருந்து வரும் சங்கடமான மணத்தை…” நாம் சுவாசிக்கின்றோம்.

நாம் தவறு செய்யவில்லை. நம்மை அறியாமலேயே நம் உடலுக்குள் இப்படி வந்து சேர்ந்து விடுகின்றது. அப்போது இதை நிவர்த்திக்க வேண்டும்.

அந்த மாதிரிச் சமயங்களில் உடனே ஆத்ம சுத்தி செய்து விட்டு நம் உடலில் நல்லதை நுகர்ந்து அந்த வாசனையை இங்கே பெருக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

வாடிக்கையாளர்கள் நம்மைப் பார்த்து எண்ணும் போது இந்த உணர்வு என்ன செய்யும்? அவர்களிடம் கொஞ்சம் போய்ச் சேர்கின்றது.
அவர்கள் அழுக்கைப் போக்குகின்றது.


நம் உடலில் இந்த மணம்/மனம் என்ன செய்யும்? அவர்கள் தீமை நமக்குள் வரவிடாமல் தடுக்கும். இது தான் நரசிம்ம அவதாரம் என்பது.

மகரிஷிகள் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள ஜீவாத்மா பெற வேண்டும் என்ற நினைவினை வானை நோக்கிச் செலுத்தித் தியானித்து அதை உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது நம் உடலில் இருந்து அந்த வாசனை வரும்.

சண்டை போடுகின்றவர்களை நீங்கள் வேடிக்கை பார்த்து விட்டு வந்தால் உங்கள் உடலில் ஒரு விதமான எரிச்சல் வரும்.

அதைப்போல அந்த ஞானியினுடைய அருள் சக்தி உங்கள் உடலுக்குள் செலுத்திக் கொண்டால் அந்த ஞானியர் உணர்வு நறுமணம்
உங்கள் உடலிலிருந்து வரும்.


வாடிக்கையாளர்கள் சரக்கை உங்களிடம் வாங்க வரும்போது
1.உங்களைப் பார்த்துக் கேட்கும் பொழுது உங்கள் வாசனை அவர்கள் நுகருகின்றனர்.
2.அப்போது அவர்களுக்கு நன்மை கிடைக்கின்றது.
3.உடலில் இருந்து வரும் ஞானியரின் நறுமணம் தெய்வமாக இருந்து அவர்களுக்கு நன்மை செய்கின்றது.
4.அதே சமயத்தில் அவர்களுடைய உணர்வு நமக்குள் வராமல் தடுக்கின்றது.

இடைப்பட்ட நேரத்தில் ஆத்மசுத்தி செய்து கொண்டு மறுபடியும் நம் வாடிக்கையாளர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று சுத்தம் செய்து கொண்டு வர வேண்டும்.

ஒரு வேலை செய்து முடித்த பின் அடுத்துத் தண்ணீர் விட்டுக் கையைக் கழுவி விட்டுச் சாப்பிடுகின்றோம். அதற்குப் பின் அடுத்த வேலையைத் தொடுகின்றோம்.

இதே மாதிரி வாழ்க்கையில் நம்மிடம் கெடுதல் வராதபடி தடுத்து நிறுத்திப் பழக வேண்டும்.

அப்படி இல்லாமல் இந்தச் சாமியார் செய்வார் அந்தச் சாமியார் செய்வார் அந்த ஜோசியம் செய்யும் இந்த யாகம் செய்யும். இந்த வேள்வி செய்யும் அந்தக் கடவுள் காக்கும் என்றால் எந்தக் கடவுளும் காப்பாற்ற மாட்டார்கள்.
1.உங்கள் உயிர் தான் கடவுளாக இருக்கும்.
2.உங்களை ஆள்வதும் உங்கள் உயிர் தான் எண்ணிக் கொடுப்பதைப் படைக்கின்றான்.
3.நீங்கள் எண்ணிக் கொடுப்பதைச் செயலாக்குகின்றான்.
4.நீங்கள் எண்ணியதை விளைய வைக்கின்றான்.
5.நீங்கள் எண்ணியதைத் தனக்குள் சேர்த்துக் கொள்கின்றான்.

இந்த உடலை விட்டுப்போன பிற்பாடு நாம் எதெல்லாம் இந்த உடலில் சேர்த்தோமோ அதற்குத் தகுந்த மாதிரி இந்த உடலை உருவாக்கிக் கொடுத்து விடுகின்றான். உயிரினுடைய வேலை அது தான்.

நம் கண் என்ன செய்கின்றது?
1.எண்ணியதெல்லாம் நமக்குக் காட்டுகின்றது.
2.நல்லது கெட்டதைக் காட்டுகின்றது

நம் உடல் என்ன செய்கின்றது?
1.எதை எடுத்துக் கொடுத்தாலும்
2.நம் உடல் அது ஐக்கியம் ஆக்கிக் கொள்கின்றது.

நம் உயிர் என்ன செய்கின்றது?
1.நாம் எண்ணியதெல்லாம் படைத்து அதை இயக்கிக் காட்டுகின்றது.
2.உடலுடன் சேர்த்து வைத்துக் கொள்கின்றது.

முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக இப்போது மனித உடலைக் கொடுத்திருக்கின்றது.

இப்பொழுது நாம் சேர்த்துக் கொண்ட உணர்வெல்லாம் வினையாகச் சேர்த்துக் கொண்டே இருக்கின்றது. இந்த வினைக்கு நாயகனாக அடுத்த உடலை உண்டாக்கி விடுகின்றது.

இன்று மனித உடலில் இருக்கும் நாம் எந்த வினையைச் சேர்க்க வேண்டும்? எதைச் செய்ய வேண்டும்?

இந்த ஆறாவது அறிவை வைத்துச் சுத்தப்படுத்துகின்ற நிலை இருக்கின்றது. இதை வைத்து நாம் சுத்தப்படுத்தத் தவறினோம் என்றால் மனிதனல்லாத உருவுக்குள் தான் போவோம்.

உடைகளைக் கட்டுகிறோம். அழுக்காகிவிட்டால் சும்மா துவைத்தாலே அழுக்குப் போகின்றது என்று விட்டு விட்டோம் என்றால் அழுக்குப் போவதில்லை.

இரண்டாவது தரம் துவைக்கும் போது துணியில் நூல்
எல்லாம் அப்படியே பிய்த்துக் கொண்டு போய்விடும். அழுக்குப் போகாது.


தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றியவுடனே அதில் கலந்துள்ள பித்தளை வெள்ளி செம்பு ஆவியாகப் போய்விடுகின்றதோ அதைப் போல் தீமைகளைப் பிரித்துப் பழகியவர்கள் மகரிஷிகள்.

மகரிஷிகளின் உணர்வை நாம் எடுத்து நம் உடலில் அடிக்கடி சேர்த்தவுடனே நம்மை அறியாது வரும் தீமைகளை இது பிரித்து நீக்கிடும். ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக சிருஷ்டிக்கக்கூடிய ஒளியாக மாற்றிக் கொண்டே வருகின்றோம்.
1.நம் வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சி ஏற்படும்.
2.பிறருடைய துன்பமான உணர்வு நம்மை வந்து பாதிக்காது.
3.”செய்யும் தொழிலே தெய்வம்என்றால் கடையில் இப்படி இருக்க வேண்டும்.

எந்தத் தொழிலுக்குப் போனாலும் அல்லது வேலை பார்த்தாலும் இதே போல் செய்ய வேண்டும். இது ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.