சிலர் ஆசையும்
அமைதியும் கொண்டு வாழ்ந்தாலும் பிறர் மேல் மிகுந்த பாசத்தால் பண்பும் பரிவும் கொண்டு
இருந்தால் அவர்கள் எதிர்பாராது இறந்தால் அந்த உயிரான்மாக்கள் பாசத்துடன் எண்ணுபவர்
உடலுக்குள் வந்து அறியாமலே எத்தனையோ பாடுபடுத்துகின்றது.
உடலுக்குள் வந்த உயிரான்மா
வேதனைப்பட்ட உணர்வுடன் இரத்தத்துடன் சுற்றி வரும் போது உயிரின் நிலைகள் மோதப்படும்
போது அதே வேதனையான உணர்ச்சிகள் வரும்.
TRANSACTION என்ற நிலையில்
உயிர் அருகிலே அந்த ஆன்மா சென்ற பின் என்ன நடக்கும்? உதாரணாமாக
1.ஒரு கிராமஃபோன்
பெட்டியில் இசைத்தட்டில் ஊசியை வைத்த பின்
2.அது உராயும் இடம்
எந்தப் பாகமோ
3.அங்கிருக்கும் எல்லாம்
உணர்வின் அதிர்வுகளையும் அது ஒலி ஓசையாக எழுப்பும்.
இதைப்போல அந்த உயிரான்மா நமது இரத்தத்தில்
கலந்து அனைத்திலும் செல்லப்படும் போது
1.நம் உயிர் பாகம்
போனவுடனே
2.அந்த ஆவி ஏற்கனவே
இருந்த உடலுக்குள் எப்படிச் சங்கடப்பட்டதோ
3.அந்த உணர்ச்சிகள்
இந்த உடலுக்குள் தோன்றும்.
4.கை கால் அங்கங்கள்
வராதபடி இதைப்போல பல செயல்களைச் செய்யும்.
ஒரு ஆவி உடலுக்குள்
இருந்தால் நிச்சயம் அவர்களுக்குக் கை கால் குடைச்சல் இருக்கும்.
இந்த ஆவி இரத்தத்தில் அது
போகின்ற பக்கம் எந்த உறுப்புகளில் செல்கிறதோ இதயத்தில் என்றால் இதய வலி;
கல்லீரலில் சென்றால் கல்லீரல் வலி; நுரையீரல் சென்றால் நுரையீரல் வலி; அது
செல்லும் இடங்களில் எல்லாம் நம் உடலுக்குள் பல விதமான வலிகள் ஏற்படும்
1.ஆகவே இதற்கு நீங்கள்
வைத்தியம் செய்து ஒன்றும் முடியாது
2.உடுக்கையை அடித்துப்
பேய் ஓட்டுவதோ மந்திரத்தைச் சொல்லிப் பேயை ஓட்டுவதோ யாராலும் முடியாது.
அதனால் முடியாததை நம்
இரத்தத்தில் உயர்ந்த சக்தியினைக் கலந்து ஊட்டும் போது அந்த ஆன்மாக்களும் நமக்கொத்த
நிலையாகும். நமக்குத் தொல்லை கொடுப்பதை மறந்து நம் உடலை விட்டு அந்த ஆன்மா
சென்றாலும் அதுவும் புனித நிலைகள் பெறும் தன்மை பெறுகின்றது.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்.
2. துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளி எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் பெற வேண்டும்.
4.இந்த உயிரான்மா எனக்குள்
இருந்து அது பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும் என்று
5.இந்த உணர்வினைச்
செலுத்திப் பழக வேண்டும்.
இது தான் நம்
சாஸ்திரங்கள் கூறிய அருள் வழி.
இப்படி அந்தத் துருவ
நட்சத்திரத்தின் உணர்வின் சத்தைக் கொடுத்தால் அது நமக்குள் இருந்து நன்மை
செய்யும். துருவ நட்சத்திரத்தின் உணர்வை உடலிலே செலுத்தி இரத்தங்களில் வலுப் பெறச்
செய்தால் அந்த ஆவி ஒடுங்கும்.
இதைப்போல இந்த உடலில்
அறியாது சேர்த்த உணர்வுகளை நீக்க நாம் அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் உணர்வைச்
சேர்த்துப் பழக வேண்டும்.
நம் உடலில் உள்ள
அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைச் செருகேற்றினால்
தீமைகள் புகாத ஞானத்தின் தன்மை நமக்குள் வரும்.
இந்த உடலுக்குப்பின்
நாம் பிறவியில்லா நிலை அடையலாம்.