ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 20, 2017

குருக்ஷேத்திரப்போர் நடத்துங்கள்…!

நம்மை ஆட்டிப்படைக்கும் தீமைகளையும் நம்மை இருள் சூழச்செய்யும்  உணர்வின் சக்திகளையும் தாழ்பணியச் செய்ய மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் “ஈஸ்வரா…” என்று அந்த உயர்ந்த எண்ணத்தை இங்கே எண்ணுங்கள்.

இமயமலை:-
1.உயர்ந்த சக்திகளைப் பெறக்கூடிய தகுதி பெற்றது நமது உயிர்.
2.(இரண்டு இமைகளுக்கு மத்தியில் உயரமான இடத்தில் இருப்பது நம் உயிர்)

ஆனால் உணர்வின் தன்மையை நாம் இங்கே கீழே நினைவுபடுத்தும் போது அந்தச் செயலின் இயக்கமாக இந்த மனித வாழ்க்கையை ஓட்டும்.

மெய் உணர்வின் தன்மையைப் பெறவேண்டும் என்றால் மேல் நோக்கி எண்ணி உயிரை நினைவுபடுத்த வேண்டும்.

உடலின் உணர்வு கொண்டு நாம் செயல் பட்டாலும் வாழ்க்கையில் வரும் நம்மை ஆட்டிப் படைக்கும் தீமைகள் வரும் சந்தர்ப்பம் எல்லாம் "ஈஸ்வரா..” என்று
1.உச்சியிலே இருக்கக்கூடிய இந்த உயிரை நினைவுக்குக் கொண்டு வந்து
2.அவனின் துணை கொண்டு நினைவை அங்கே விண்ணிலெ செலுத்த வேண்டும்.

இது தான் கீதையின் தத்துவம்.

1.என் வாழ்க்கையில் வரக்கூடிய மகாபாரதப் போரிலே
2.பலருடைய எண்ணங்கள் என்னை மோதி
3.நல்ல சிந்தனைகள் செயல்படாத நிலையும்
4.நான் சுவாசித்த உணர்வுகள் பதட்ட நிலையும்
5.ஒன்றை நான் அழிக்கக்கூடிய எண்ணமும்
6.உருவான உருவை அழிக்கக்கூடிய நிலைகள் வருகின்றது.

ஆனால் காவியங்களில் என்னை அறியாது தவறு செய்யும் “அந்தத் தீமை செய்யும் உணர்வைத் தான் அழிக்கச் சொன்னார்கள்…”

குருக்ஷேத்திரப் போர் என்கிற போது பிறர் செய்யும் தவறின் உணர்வுகளைச் சுவாசிக்க நேர்ந்து என்னை அறியாது என்னை இழி நிலையான நிலைகள் செயல்களைச் செயல்பட வைக்கும் இந்த உணர்வின் தன்மையை "ஈஸ்வரா" என்று அவனிடம் ஏங்கி எண்ணும்படி செய்கிறார்கள்.

ஏனென்றால் கண்ணின் புலனறிவு கொண்டு கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்து அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏக்க உணர்வுடன் ஏங்கி எடுக்கும் போது “இதுதான் குருக்ஷேத்திரப்போர்...”

நாம் கண்ணுற்றுப் பார்க்கும் போது பிறருடைய எண்ணங்கள் நம்மை வெறுப்போ பயமோ ஆத்திரமோ மற்ற நிலைகள் எதுவோ நம் செயலில் இயக்கம் ஆகி விட்டால் அடுத்த கணமே "ஈஸ்வரா" என்று உயிரிடம் வேண்ட வேண்டும்.

1.துருவ நட்த்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்.
2.சப்தரிஷிகளின் அருள் ஒளி அருள் ஆற்றல் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி
3.உயிரிலே புருவ மத்தியிலே எண்ணி இங்கே போர் நடத்துங்கள்.

ஏனென்றால் நாம் எவ்வளவு பெரிய வல்லமை கொண்டவராக இருந்தாலும் ஒரு விஷத்தின் ஆற்றல் நம்மை ஆட்டிப்படைத்துவிடும்.

எறும்பு கடித்து விட்டால் நாம் எப்படிக் கை கால்களை எல்லாம் உதறுகின்றோமோ இதைப்போல சிறிதளவு ஒரு விஷமான உணர்வின் ஆற்றல் நம் உணர்ச்சிகளைத் தூண்டப்படுமேயானால் நம் உடல் முழுவதும் பதட்டமும் நம் சொல்லும் செயலும் இழந்து விடுகின்றது.

இதைத் தடுப்பதற்குக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

எந்த நிமிடமானாலும்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.சப்தரிஷி மண்டலங்களின் அருள் ஆற்றல் பெற வேண்டும்.
3.மெய் ஞானிகளின் அருள் வழி நாங்கள் நடக்க வேண்டும்.
4.மெய் ஞானிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
5.எங்கள் சொல்லிற்குள் இனிமை பெற வேண்டும்
6.எங்கள் செயலெல்லாம் மற்றவரைப் புனிதப்படுத்த வேண்டும் என்று
7.எப்பொழுதெல்லாம் தீமைகளைச் சந்திக்கின்றீர்களோ
8.அந்த நேரத்தில் எல்லாம் குருக்ஷேத்திரப் போராக மாற்றி
9.மெய் உணர்வின் ஆற்றலை உங்கள் உடலுக்குள் சேர்த்துக் கொள்ளுங்கள். 

அந்த மகரிஷிகளின் ஆற்றலைப் பெறச் செய்வதற்கே இந்த உபதேசம். இதைப் பழகிக் கொள்ளுங்கள்.