வான்மீகி இராமயாணக் காவியத்தை அருளினார்.
1.மனிதன் நீ எண்ணும் எண்ணத்தின் நிலைகள் சீதாராமா.
2.நீ கவர்ந்து கொண்டது அனைத்தும் இராமனாக
3.(எண்ணங்களாகவும் உணர்வுகளாகவும்) விளைகின்றது என்ற நிலையைக்
காட்டினார்.
சீதாராமா பலராமா ஜானகிராமா கோதண்டராமா கோசலைராமா என்று பல
கோடி இராமனைச் சொல்லி இருப்பார்கள்.
ஆனால் நீங்கள் சொல்வது ஒரு இராமனைத்தான். இராமன் காட்டிற்குள்ளே
போனான். எத்தனை தவி தவிக்கின்றான்.
நாம் எடுத்துக் கொண்ட இந்த இராமன் (எண்ணங்கள்) இந்த காடான
நிலைகளுக்குள் போகும்போது ஒவ்வொரு எண்ணத்திலேயும் பார்க்கின்றோம்.
புலியைப் பார்க்கிறோம் கரடியைப் பார்க்கிறோம் வேங்கையைப் பார்க்கிறோம்
எல்லாவற்றையும் பார்க்கிறோம் கல்லு முள்ளைப் பாரக்கிறோம் ஒவ்வொருவரும் இடித்துப் பேசுகிறார்கள்
கேவலமாகப் பேசுகிறார்கள்
1.இத்தனையும் (கண்களால்) பார்க்கிறோம் அல்லவா…!
2.அது அதற்குத்தக்க எண்ணங்கள் வருகிறது அல்லவா..?
1.இத்தனையும் கடந்து நாம் எத்தனை துன்பத்தை அனுபவிக்கின்றோம்?
2.எப்படி நாம் நல்ல உணர்வின் தன்மை திண்டாடுகின்றது?
3.தான் விளைய வைத்த நல்ல உணர்வுகள் எப்படிப் பாடுபடுகின்றது?
4.இதை எப்படிக் காக்க வேண்டும்…? என்ற நிலைகளைத்தான் இராமயாணத்தில்
கூனி போன்ற பாத்திரங்களாக அமைத்து
1.ஒவ்வொரு குணங்களுக்கும் பிறரை முடிச்சு போடுகின்ற நிலையும்
2.பிறரைக் கெடுக்கும் நிலைகளும் அந்த உணர்வு என்ன செய்கின்றது?
3.என்று காட்டினார் வான்மீகி.
இந்த உணர்வினுடைய
நிலைகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கும் நிலைகள் வருகின்றது. இயற்கையினுடைய உணர்வு ஒன்றுடன்
ஒன்று கலந்து ஒன்றை உருவாக்குகின்றது.
இதைப் போன்ற நிலைகள் மனிதனுடைய பாத்திரங்களில் சந்தர்ப்பங்கள்
எப்படி இருக்கின்றதென்ற நிலையை மனிதனுடைய உருவத்தைப் போட்டு இராமயாணக் காவியங்களைத்
தீட்டியுள்ளார்கள்.
1.மனிதன் நாம் எண்ணும் பல உணர்வுகள்
2.எப்படி ஒரு இராமனாக நமக்குள் விளைகின்றது? என்ற இந்த நிலையைத்தான்
3.அன்று வான்மீகி இராமயாணத்தில் காட்டினார்.
நீங்கள் தயவு செய்து அந்த மகரிஷிகள் காட்டிய அந்த அருள் வழிப்படி
நாம் அந்த ஞானியின் அருள் வித்தைப் பெறுவதற்குச் சீதாராமனாகக் கவர்தல் வேண்டும்.
அந்த ஞானியின் அருள் வித்தை நாம் கவர்ந்தால் மெய் ஒளி பெறும்
இராமனாக ஒளியின் சுடராக நாம் பெற முடியும்.
ஒவ்வொரு நொடியிலேயும் நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி
நீங்கள் எண்ணிய எண்ணங்கள் அந்த ஞானியின் அருள் வித்தை வளர்க்கும் இராமனாக விளைவீர்கள்.
ஞானியின் அருள் சக்திகள் உங்களுக்குள் இராமனாக விளையும் பொழுது
உங்கள் வாழ்க்கையில் அறியாமல் வரும் இருளை நீக்கி வழியறிந்து செயல்படும் ஞானத்தின்
வழித் தொடரிலே உங்களை அழைத்துச் செல்லும்.