ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 22, 2017

சுவாசித்த உணர்வுகள் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்து குடலுக்குள் சென்று அஜீரணத்தை எப்படி உண்டாக்குகின்றது? – உயிரில் படும் உணர்வின் இயக்க நிலைகளை அறிந்து கொள்ளுங்கள்

உதாரணமாக ஒருவருக்கு நாம் உதவியோ மற்றதுகளைச் செய்து அவரைச் சந்தோசமாகச் செயல்படுத்த வேண்டும் என்று எண்ணுகின்றோம். உதவியால் அவர் மகிழ்கின்றார்.

அந்தச் சந்தோசத்தை உருவாக்கி அந்த உணர்வின் சுவாசத்தை எண்ணி அதை நாம் செயல் படுத்திக் கொண்டிருக்கும் இடத்தின் அருகிலே ஒருவர் நோய்வாய்பட்டுத் துன்பபட்டுத் துயரம் கொண்ட குரலை எழுப்புகின்றான் வைத்துக் கொள்வோம்.

அப்பொழுது நல்லதைச் செய்யக் கூடிய பாசமான உணர்வுகள் கொண்டு அவரை எண்ணி நாம் மகிழ்ச்சியுடன் இருக்கும் பொழுது இதே உணர்வுகள்
1.அந்த வேதனைப்பட்டவன் பக்கம் திரும்பியவுடன்
2.அவருடைய வேதனையான உணர்வுகளைச் சுவாசித்தவுடனே
3.என் சந்தோசம் மறைகின்றது.
4.மறைந்து எனக்குள் சுவாசித்தவுடன் வேதனையான உணர்ச்சிகளைத் துண்டுகின்றது.
5.வேதனை உணர்ச்சி அது ஜீவன் பெறுகிறது.
6.வேதனை ஜீவன் பெறும் பொழுது என் உடல் சுருங்குகின்றது. முகம் வாடுகின்றது என் உணர்ச்சிகள் மாறுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை

நல்லதைச் செய்ய வேண்டும் என்று சந்தோசத்தை உருவாக்கும் எண்ணத்துடன் நாம் சுவாசித்த உணர்வு நம் சொல் நம் பார்வை செயல் மற்றவர்களை மகிழ்விக்கச் செய்கின்றது.

ஆனாலும் அதே சமயம் அருகில் இருப்பவர் நோயால் துன்பபட்டு “எனக்கு இப்படி வேதனை தாங்க முடியவில்லையே…!” என்று இருக்கும் பொழுது என்ன ஆகின்றது?

முதலாமவருக்குப் பொருளால் உதவி செய்து நாம் மகிழ்ந்திருந்தாலும் அதே சமயம் இரண்டாவது நோயால் வாடுபவருக்குப் பொருளைக் கொடுத்து அந்த வேதனையைக் குறைக்க முடியுமோ…? குறைக்க முடியாது.

அப்போது அவரிடமிருந்து வெளிவரும் துன்பமான உணர்வின் அலைகளைப் பாச உணர்வு கொண்டவர்கள் சுவாசிக்க நேர்ந்தால் சந்தோசப்படும்படியான செயல்களை நாம் செய்து கொண்டு இருந்தாலும் இந்தச் சங்கடமான உணர்வுகளும் அதனுடன் கலந்து விடுகின்றது.

சுத்தமான பாலில் ஒரு துளி விஷம் பட்டாலும் என்ன செய்கிறது? குடித்தால் மயக்கம் வருகின்றது.

அதைப் போன்று தான் அருகில் நோய்வாய்ப்பட்டவர் உணர்வைச் சுவாசித்தவுடன் இந்த இடத்தில் குருவிடம் இந்த க்ஷேத்திரத்திலே போர் நடக்கின்றது.

முதலாமவர் நல்லவர் என்ற நிலையில் நம்மைத் தேடி அவர் வருகின்றார். உதவி செய்கின்றோம். மகிழ்கின்றார். நாமும் மகிழ்கின்றோம்.

ஆனால் இரண்டாமவரோ நோயால் வேதனைப்படுகின்றார். அந்தப் பாச உணர்வுகள் வேதனையை இங்கு இழுத்துக் கொள்கின்றது.

இழுத்தவுடனே நல்ல குணத்துடன் இரண்டும் கலந்து பாலிலோ விஷத்தைக் கலந்து உண்டால் எந்த நிலையோ அதே போல உடலைச் சோர்வடையச் செய்கின்றது.

நம் சொல்லில் இனிமையும் குறைகின்றது. அப்போது அங்கே மகிழ்ச்சி தடைப்படுகின்றது. ஆனாலும் இதோடு போய் விடவில்லை.

அவர் நோயால் வேதனப்பட்டுப் பேசிய இந்த உணர்வின் சத்து உமிழ் நீராகக் கரைந்து நாம் சத்தான ஆகாரம் சாப்பிட்டிருந்தாலும் இந்த விஷமான உணர்வின் சத்து அங்கே கலந்தபின் வயிரை நெளியச் செய்கின்றது. வயிற்றைப் பிரட்டும்.

வேதனையான உணர்வின் உமிழ் நீர் நாம் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்தவுடனே அங்கே நோயால் துன்பப்படுவதைக் கேட்டதும் எப்படி மயக்கமடைந்தோமோ அதே போல நம் ஆகாரத்தை ஜீரணிக்கக்கூடிய செயல்களை இழக்கச் செய்கின்றது.

1.எப்படி வாயை அசைத்துச் செயல்படுகின்றோமோ
2.ஒரு பாம்பு சுருங்கி நெகிழ்ந்து (நெளிந்து) தன் ஓட்டத்தைச் (நகர்ந்து) செயல்படுத்துகிறதோ
3.அதைப் போன்று தான் நம் குடலின் இயக்குகின்றது.

எந்த மகிழ்ச்சியான உணர்வைச் சுவாசிக்கின்றமோ அதற்குத் தகுந்தவாறு குடல் நீண்டு நெகிழ்ந்து பிசைந்து அந்த ஆகாரத்திலுள்ள சத்தை வடிக்கின்றது.

ஒரு எறும்பு காலிலே கடித்து விட்டால் என்ன செய்கிறோம். உடனே “உச்சு… உச்சு…” என்று காலை உதறுகிறோம்.

இதே போலத்தான் அந்த வேதனையான உணர்வின் உமிழ் நீர்கள் நம் குடலுக்குள் ஆகாரத்துடன் கலந்தவுடனே
1.அதனின் இயக்கச் சக்தி தொடர்வதில்லை.
2.“ஆ…” என்று விரிந்துவிடுகின்றது (சத்தைப் பிழிவதில்லை)
3.சாப்பிட்ட ஆகாரத்தைப் பொத பொத பொதவென்று கொட்டி விடும்.

அவ்வாறு கொட்டியவுடனே கீழே இருக்கும் குடலுக்குள் நோவானவுடனே (வலியாகி) இறுக்கிப் பிடித்து விடும்.

அப்புறம் நடு மையத்தில் போனவுடனே பலூன் போல உப்ப ஆரம்பித்துவிடும். ஒரு பலவீனமான பலூனுக்குள் காற்றை ஊதினால் “புஷ்..ஷ்ஷ்..” என்று அந்த இடத்தில் அதிகமாக உப்புகிறது.

அப்போது அந்த வேதனையான உணர்வுகள் வரப்படும் பொழுது இந்தக் குடல் விரிந்து “வாயு” உற்பத்தியாகின்றது. கீழே போய்விட்டால் தொந்தரவு இல்லை.

மேலே வந்தால் பெரும் குடலிலேயும் கலந்து இதனுடைய புளிப்புத் தன்மையான நிலையில் சில நேரங்களில் கீழிருந்து எதிர்த்து அந்தக் சாப்பாடே (வாந்தியாக) வெளியில் வரப்பார்க்கும்.

ஏனென்றால் பிறருடைய வேதனையான நிலைகளை நாம் கேட்கப்படும்பொழுது இவ்வாறு இந்த நிகழ்ச்சி நடந்து விடுகின்றது.

நாம் தவறு செய்யவில்லை. அவர் வேதனைப்படுகின்றார். அவர் உடலில் விளைய வைத்த அந்த உணர்வுகள் வெளிப்படுகின்றது. பாசத்தால் நாம் சுவாசிக்கின்றோம்.

ஒரு மனிதன் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்தால் நமக்குள் மகிழ்ச்சி தோன்றுகின்றது. அதே போல மாம்பழம் சுவையான நிலைகளில் இருந்து அதன் வாசனையைப் பார்த்தவுடன் மகிழ்கின்றோம்.

மாங்காயைப் பார்த்தவுடன் புளிப்பு வருகின்றது. முகம் சுளிக்கின்றது. அது தவறு செய்யவில்லை. “அது உணர்வின் இயக்கம்”.

அது கனியாகும் பொழுது இனிக்கின்றது. காயாகும் பொழுது புளிக்கின்றது. புளிப்பை நுகரும் பொழுது முகம் சுளிக்கிறது. அதுவே கனியாகும் பொழுது ரசிக்கின்றது.

இதே போன்று தான் ஒருவர் மகிழ்ச்சியின் தன்மை கொண்டு பேசும் பொழுது நாம் மகிழ்ச்சியான செயல்களில் செயல்படும் பொழுது மகிழ்கின்றோம். மகிழ்ச்சியான செயல்களைக் கேட்பவர்களும் மகிழ்கின்றார்கள்.

ஆனால் அதன் அருகிலேயே ஒருவர் தன் உடலின் வேதனையால் துடிக்கின்றார் என்றால் அதைப் பார்த்தவுடன் இந்த மகிழ்ச்சியுடன் கலந்து உடனே சோர்வடைகின்றது.

இங்கே பார்த்தால் மகிழ்ச்சி. சோர்வடைந்துவிட்டால் மகிழ்ச்சிக்கு இரண்டாவது முறை எழுந்திரிப்பதே கஷ்டம். அடுத்து அந்த மகிழ்ச்சியைக் கொண்டு வருவதற்கு ரொம்ப நேரம் ஆகும்.

ஆனால் அந்த மகிழ்ச்சி அங்கே சோர்வடைந்து விடுகின்றது. மகிழ்ச்சி ஊட்டும் உணர்வுகள் சோர்வடைகின்றது. இதே போல நம் குடலுக்குள்ளும் நாம் சாப்பிட்ட ஆதாரத்தை நஞ்சாக மாற்றுகின்றது.

அவர் எப்படி வேதனைப்படுகின்றாரோ அதேபோல என் குடலுக்குள் அவரை எண்ணிப் பார்த்த இந்த உமிழ் நீர் இங்கு வந்து விடுகின்றது.

“சங்கநாதம்” – அதனால் தான் கீதையிலே கண்ணன் சங்க நாதத்தை வைத்து பூம்…ம்ம்… பூம்..,”. என்று சொல்லி மேல் நோக்கி ஊதுகின்றான்.

(கீதை என்றால் கீதம். கண் வழி கவரும் உணர்வுகள் உயிரிலே பட்டபின் கீதங்களாக நாதங்களாக எப்படி உருவாகி உணர்ச்சிகளாக இயக்குகின்றது என்பதைக் காட்டுகின்றார்கள்)

மேலே ஊதுவதன் நோக்கம் என்ன?

சாதாரண மனித உடலுக்குள் இருக்கக்கூடிய உணர்வுகளை நினைக்கும் பொழுது இதைச் சுவாசித்து அச் செயலின் நிலைகள் ஜீவன் பெற்று அதன் வழியில் நாம் செயல்படுகின்றோம்.

1.அதே சமயம் நாம் மேல் நோக்கிப் பார்க்கும் பொழுது
2.சாதாரண வாழ்க்கையில் வரும் உணர்வின் தன்மை இங்கே குறைகின்றது.
3.கண்ணின் நினைவலைகளை நாம் உயிருடன் ஒன்றி
4.“ஈஸ்வரா…” என்று சொல்லும் பொழுது அவன் சிருஷ்டிக்கின்றான்.

மகிழ்ச்சியான நிலையை எண்ணிணாலும் அவருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணும் பொழுது அந்தச் சுவாசம் உயிரிலே பட்டுத் தான் எனக்கு இங்கே மகிழ்ச்சியாகின்றது.

வேதனைப்படுவோரைப் பார்த்த உடனே நமக்குள் வந்து உயிரிலே பட்டுத் தன்னை அறியாமல் சோர்வடையச் செய்கின்றது. இங்கே தான் “குருக்ஷேத்திரப்போர்” நடக்கின்றது.

குருக்ஷேத்திரப்போர் என்றால் சர்வத்தையும் அடக்கக்கூடிய நிலைகள்
1.உயிரான குருவுக்குப் பணிய வேண்டும்.
2.இந்தப் பணியைச் செய்யக்கூடிய இந்தச் சக்தியின் இயல்பை உணர்த்துவதற்குத்தான்
3.குருக்ஷேத்திரப்போர் என்று ஞானிகள் சொன்னது.

குருவாக இருக்கும் உயிரிடம் வேண்டி ஈஸ்வரா என்று எண்ணும் பொழுது அந்த ஆற்றல் மிக்க சக்தி நமக்குக் கிடைக்கின்றது.