பிறருடைய தீமைகளின் நிலைகளை நாம் காது கொடுத்துச் சிரத்தையாக என்ன ஏது…? என்று
கேட்காது விட்டால் நம்மைப் பைத்தியக்காரன் என்று சொல்வார்கள்.
ஒருவர் ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கும்போது “நமக்கு எதற்கு இந்த வம்பு…!” என்று
சென்றுவிட்டால் நம்மைப் பைத்தியக்காரன் என்று சொல்வார்கள்.
வாழ்க்கையில் நீங்கள் இந்த மாதிரிச் சொல்லிப் பாருங்கள்.
எதாவது ஒரு பொருளை “சரி…” என்று சொல்லி “அவன் ஆசைப்படி அவனே வைத்துக் கொள்ளட்டும்..,”
என்று நாம் ஒதுங்கிச் சென்றால் “சரியான பைத்தியம்.. இது…!” என்று நம்மைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.
அவன் கோபப்பட்டுத் திட்டும்போது நாம் அதைக் காது கொடுத்துக் கேட்காது சென்றால்
“பைத்தியம்” என்று நம்மைச் சொல்வார்கள்.
தியான வழியில் இருக்கும்போது சொல்வார்கள். யாராவது சொன்னாலும் கூட கொஞ்சம் கூட
ரோசம் இல்லை, அவன் ஒரு பைத்தியக்காரன் என்பார்கள்.
1.ஒருவரைச் சரி இல்லை…, என்று கேட்டவுடனே
2.அவனை உதைத்தோம்…! என்றால் அப்பொழுது “மனிதன்…!” என்று சொல்வார்கள்.
இந்தத் தியான வழியில் நீங்கள் சென்றால் மற்றவர்கள் சுத்தமாகவே பைத்தியம் என்று
சொல்வார்கள். அடுத்தவர்கள்.., ஏதாவது சொன்னாலும் பாருங்கள், இவன் ஒன்றுமே சொல்ல மாட்டான்…!
என்று சொல்லிவிட்டு
1.சூடு சுரணை எதுவும் இல்லை,
2.இவன் ஒரு பைத்தியக்காரன் என்பார்கள்.
3.ஆனால் அவன் பைத்தியம் என்று அவன் உணர்வதில்லை.
தான் நுகரும் உணர்வின் தன்மை தன்னை ஒரு பைத்தியக்காரனாக ஆக்குகின்றது. தன்னையறியாமலே
அந்த உணர்வுகள் அவனுக்குள் செயல்படுகிறது என்று அவன் உணர்வதில்லை.
ஆனால் நம்மைப் பைத்தியக்காரன் என்பார். இதைப் போன்று இயற்கையின் உண்மையின் உணர்வுகளை
நாம் அறிதல் வேண்டும்.
ஆக அருளைத் தேடினால் “பைத்தியம்…” என்கிறார்கள். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்
பைத்தியம் போன்று இருந்துதான் பேரண்டத்தின் பேருண்மைகள் அனைத்தையும் உணர்த்தினார்.