உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் அருள்சக்தி
நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அந்தச் சக்திகளை உங்கள் உடலில் வலு சேர்த்துக்
கொள்ளுங்கள்.
மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் எண்ணியவுடனே கிடைக்கும்படி
செய்து கொண்டிருக்கின்றோம்.
1.எந்த ஞானியின் அருள் வித்தை
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பெற்றுத் தனக்குள் வளர்த்துக்
கொண்டாரோ
3.அந்த உணர்வின் சத்தை எனக்குள் (ஞானகுரு) வித்தாகக் கொடுத்தார்.
4.அதை வளர்க்க வேண்டிய முறையையும் சொல்லிக் கொடுத்தார்.
எனக்குள் வளர்த்துக் கொண்ட அந்த வித்தை உங்கள் மனதைப் பண்படுத்தி
அந்த ஞான வித்தை உங்களுக்குள் ஆழமாக ஊன்றுகின்றேன். அந்த வித்தை எனக்குள் வளர்த்துக்
கொள்வதற்கு
1.நான் (ஞானகுரு) எப்படிப் பக்குவப்பட்டனோ
2.அந்தப் பக்குவ நிலையை உங்களிடம் சொல்கின்றேன்.
அந்தப் பக்குவ முறைப்படி நீங்கள் செய்தீர்கள் என்றால் நிச்சயம்
மகரிஷிகளின் ஆற்றல்மிக்க அருள் சக்திகள் கிடைக்கும். இதற்காக வேண்டி வேலையை விட்டு
விட்டு நான் சதா அருளைப் பெற போகின்றேன் என்று உங்களை வேலையே செய்யாமல் இருக்கச் சொல்லவில்லை.
இந்த வாழ்க்கையில் வரக்கூடிய கடமைகள் அனைத்தையும் செய்ய வேண்டும்.
அதை விலக்கிவிட்டு இதைச் செய்ய வேண்டியதில்லை.
ஆனால் அந்தந்தச் சந்தர்ப்பங்களில் வரும் உணர்வின் தன்மைகள்
நமக்குள் இயக்காத வண்ணம் தடுக்க வேண்டும். அது தான் முக்கியம்.
காய்கறிகளுடன் காரம் புளிப்பு கசப்பு இனிப்பை எடுத்து மற்ற
பொருள்களைப் போட்டுச் சமைத்து குழம்பாகச் சேர்க்கின்றோம். சுவையாக உட் கொண்டு மகிழ்ச்சி
அடைகின்றோம்.
1.ஒரு குழம்பு வைக்கும் பொழுது பல பொருள்களைச் சேர்த்து ஒரு
சுவையாக்குவது போல்
2.நம் வாழ்க்கையில் உடலுக்குள் எத்தனையோ உணர்வுகள்
3.மகாபாரதப் போர் என்ற நிலைகளாக வந்து மோதினாலும்
3.மகரிஷிகளின் உணர்வலைகளை எடுத்து அவைகளைச் சுவை மிக்க நிலைகளாகச்
சமப்படுத்த வேண்டும்.
மகரிஷிகளிண் அருள் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்று அந்த அருள்
சக்திகளின் துணை கொண்டு இந்த உடலுக்குள் நடக்கும் மகாபாரதப் போரை வெல்ல வேண்டும். வெல்ல
முடியும்…!
இந்த மனிதச் சரீரம் பெற்ற நாம் உடலுக்குள் வரும் தீமைகளை வென்று
சர்வத்தையும் ஒளியாக மாற்றக்கூடிய நிலையை நிச்சயம் நாம் செய்ய முடியும்.