என் குடும்பத்தில்
கஷ்டமாக இருக்கிறது என்று தெய்வத்திற்காக வேண்டி நாள் முழுவதும் விரதம் இருந்து
நெய்வேத்தியம் எல்லாம் போட்டு சாப்பாடு போட்டுக் கும்பிடுகிறீர்கள்.
தெய்வத்திற்காக வேண்டி
சாப்பிடாமல் இருக்கிறது என்றால் சாமி மேலே பக்தியாக இருக்கின்றீர்கள். ஆனால் இங்கே உடலுக்கு
என்ன பக்தியாகின்றது.
உடலில் உள்ள நல்ல
அணுக்களுக்குச் சாப்பாடு கொடுக்கவில்லை என்றால் அது சோர்வடைகின்றது.
சோர்வடைந்தவுடன் என்ன
செய்கிறது. மருமகள் முதலில்
எப்படி இருந்தாள்...! இப்பொழுது எப்படி இருக்கின்றாள் பார்...? தெய்வமே...! என்று
மாமியார் எண்ணுகிறார்கள்.
மாமியார்
திட்டியிருப்பார்கள். மருமகள்
விரதம் இருப்பார்கள். அவரும் கோயிலுக்குச் சென்று நல்லதை எண்ணுவதில்லை.
கோயிலுக்குப் போய் வந்ததும் மீண்டும் மாமியார் என்ன சொல்வார்கள்? மருமகளைப்
பார்த்துப் போகிறாள் பார்...! என்பார்கள்.
1.விரதம் இருக்கும்
அன்றைக்குப் பலவீனமாகும் பொழுது
2.நல்ல குணங்களை
யாரும் எண்ண முடிவதில்லை.
3.இப்படித் தான்
விரதங்கள் இருக்கின்றது.
4.வேதனையான உமிழ் நீர்
வந்தவுடனே
5.நமக்குள் எல்லா
அணுக்களும் விஷத்தின் தன்மை அடைந்து விடுகின்றது.
விரதம் இருக்கும் அன்று தெய்வத்தை நினைப்பதில்லை. தெய்வமே...! இப்படி இருக்கிறார்கள் பார்? என்றைக்குத்தான் திருந்தப் போகிறார்களோ..? என்றைக்குத் தான் எங்கள் மாமியார் திருந்துவார்களோ...?
விரதம் இருக்கும் அன்று தெய்வத்தை நினைப்பதில்லை. தெய்வமே...! இப்படி இருக்கிறார்கள் பார்? என்றைக்குத்தான் திருந்தப் போகிறார்களோ..? என்றைக்குத் தான் எங்கள் மாமியார் திருந்துவார்களோ...?
பையன் போனால்
போதும்..! இன்றைக்கு என் பையன் என்ன செய்ய போகிறானோ...? எனக்கு என்ன தெரியும்..?
தெய்வமே...! எல்லாவற்றையும் நீயே பார் என்பார்கள்.
ஆலயத்திற்குள் போய்
நான் இத்தனை காலம் உனக்கு எல்லாம் செய்தேனே...! இதைச் சொல்லி எனக்கு ஒன்றும்
நடக்கவில்லையே என்று இதைத்தான் எண்ணுகின்றோம்.
குழந்தைகள் மீது
பாசமாக இருக்கிறீர்கள். அதனால்
அர்ச்சனை செய்கிறீர்கள்.
அர்ச்சனை செய்யும்போது என்ன சொல்கிறீர்கள்?
1.நான் இத்தனையும்
இவனுக்காகச் செய்கிறேன்.
2.ஆனாலும் அவன்
அப்படியெல்லாம் செய்கிறானே என்று
3.வேதனையான உணர்வு
தான் வருகிறது.
சாமி மீது
போட்டிருக்கும் நகையைப் பார்த்தவுடனே என் கணவர் கஷ்டத்தில் இருக்கிறார் என்று நகை
எல்லாம் கொடுத்தேன். அத்தனையும் தொலைத்துவிட்டார் என்று எண்ணுவீர்கள்.
தினமும் என் மாமியார்
என்னை இப்படிப் பேசுகிறார் மாமனாரும் பேசுகிறார் எல்லாம் கேட்டுவிட்டுக் கணவரும்
வெறுத்துப் பேசுகிறார் என்று இதைத் தான் முறையிட்டு கஷ்டங்களைத்தான் ஆலயத்தில்
சொல்லுகின்றோம்.
அந்தச் சாமி செய்யும்
என்று நினைக்கின்றோம். யாராவது அந்த மகரிஷிகள் சொன்ன நிலையை நினைக்கின்றோமா?
1.அந்தத் தெய்வீகப்
பண்பு என் மாமியாருக்கு வரவேண்டும். என் மாமனாருக்கு வரவேண்டும்.
2.என் கணவருக்கு வர
வேண்டும் என் குடும்பத்தில் அனைவரும் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.
அதே போல மாமியாரும்
என் மருமகளுக்கு அருள் ஞானம் பெறவேண்டும். அருள் ஒளி
பெறவேண்டும். குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று எண்ணுதல்
வேண்டும்.
இப்படி ஒன்று
சேர்த்துப் பகைமையை மாற்றி நமக்குள் அந்த நல்ல உணர்வை வளர்ப்பதற்குத் தான்
ஆலயத்தைக் கட்டினார்கள் ஞானிகள். ஆலயத்தை நாம் மதிக்கின்றோமா? யாரும்
மதிக்கவில்லையே...!
ஆகவே விரதம் இருப்பது
எது?
நல்ல அணுக்களுக்குச்
சாப்பாடு கொடுக்காதபடி வேதனையை எடுத்து விஷ அணுக்களை உடலுக்குள் கொடுத்து நம் நல்ல
உணர்வுகளைச் செயலிழக்க வைக்கிறோம்.
விரதம் முடிந்து
அடுத்து சாப்பிட்டால் சரியாக ஜீரணிக்காது. நல்ல அணுக்களைப் பட்டினி போட்டு
அப்புறம் உணவு போட்டால் சரியாக ஜீரணிக்காது.
விரதம் இருக்கும்
தினத்தில் என்றும் வராத சங்கடம் எல்லாம் வரும். அப்பொழுது நாம் எதை விரதம்
இருக்கின்றோம் என்று சற்று யோசனை செய்து பாருங்கள்.
1.என் கணவர் அந்த
உயர்ந்த சக்தி பெற வேண்டும்.
2.என் மனைவிக்கு அந்த
உயர்ந்த சக்தி பெற வேண்டும்.
3.என் பையன்
அருள்ஞானம் பெற வேண்டும். அருள் உணர்வுகள் குழந்தைகள் பெறவேண்டும்.
4.அந்தத் தெய்வீகப்
பண்பைப் பெறவேண்டும்.
தங்கத்தைப் போல மனம் மங்காத நிலை பெற வேண்டும்.
தங்கத்தைப் போல மனம் மங்காத நிலை பெற வேண்டும்.
5.அந்த வைரத்தைப் போல
சொல் ஜொலிக்க வேண்டும்.
செயல் ஜொலிக்க வேண்டும் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும் என்று
செயல் ஜொலிக்க வேண்டும் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும் என்று
குடும்பத்தில்
உள்ளவர்கள் எத்தனை பேர் இதே போல எண்ணுகின்றீர்கள்.
இதை எல்லோரையும் எண்ண
வைப்பதற்காகத்தான் அங்கே பொருளைப் போட்டுக் காண்பிக்கின்றார்கள். நாம்
எண்ணுகின்றோமா? நன்றாக யோசனை செய்து பாருங்கள்.
தீபாராதனை காட்டும்
பொழுது இதே போல பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். இந்தக்
கோயிலுக்கு வருகிறவர்கள் எல்லாம் இந்த நிலையைப் பெற வேண்டும் என்ற நிலையை எடுக்க
வேண்டும்.
என் மருமகளுக்கு அந்த
நிலை வரவேண்டும். என் மாமியாருக்கு அந்த நிலை வர வேண்டும். என்
கணவருக்கு அந்தச் சுவையான சொல்லும் செயலும் வரவேண்டும். தெய்வீகப் பண்பு
வரவேண்டும் என்று எண்ண வேண்டும்.
பக்தி என்றால் அந்தத்
தெய்வீக குணங்களை நாம் பக்தி கொண்டு வளர்க்க வேண்டும்.
ஆகவே விரதம் என்றால்
அது எப்படி இருக்க வேண்டும்?
1.காலையிலிருந்து
எந்தத் தீமையும் நுகராதபடி
2.வீட்டில் மாமியார்
திட்டியதோ மாமனார் திட்டியதோ கணவர் திட்டியதோ பையன் சொன்னபடி கேட்காததோ இதை
எல்லாம் விட்டு விட்டு
3.குடும்பத்திலுள்ளோர்
அனைவரும் உயர்ந்த நிலை பெறவேண்டும் அருள் ஞானம் பெறவேண்டும் மகிழ்ந்து
வாழ்ந்திடும் சக்தி பெறவேண்டும் என்று
4.மேலே சொன்ன
ஒவ்வொன்றையும் நினைக்க வேண்டும்.
அன்றைய கஷ்டமான
உணர்வுகளை நீக்கி ஞானிகள் சொன்ன இந்த முறைப்படி விரதம் இருந்து பழகிப்
பாருங்கள். எந்தத் தீமையையும் நாம் நுகர்வதில்லை. நோயும் வராது பகைமையும்
வராது வேதனையும் வராது.
இது தான் உண்மையான
விரதம்.