இப்போது வாழ்க்கையில் எனக்கு இடைஞ்சல் செய்தவனை எண்ணுகின்றேன். “என் பிள்ளை படிக்கவில்லையே... நாளைக்கு எதிர்காலம் என்ன ஆகுமோ...!”
என்று நான்
எண்ணிச் சிந்திக்கின்றேன்.
அப்பொழுது
இந்தச் சிந்தனை எங்கே போகின்றது?
என்
பிள்ளை படிக்கவில்லை என்றால் நாளை அவன் எதிர் காலம் என்னவாகும் என்று நான்
நினைத்துக் கொண்டே இருந்தேன் என்றால்
போதும்...! (ஒரு நல்ல பையனைப் பற்றிக் கூடச் சிந்திக்க
மாட்டோம். நல்லது எண்ணத்திற்கு வராது.)
இவன்
சொன்னபடி கேட்கவில்லை....
படிப்பு சரியாக இல்லை... என்ற இந்த
நிலையில் இருந்தால்
1.அவனைப்
பற்றியே எண்ணி
2.அவன்
உயர்ந்தவனாக வர வேண்டும் ஆனால் வரவில்லையே என்று எண்ணிக் கொண்டே இருக்கின்றேன் என்றால்
3.நான் இறந்த பிற்பாடு இந்த உயிராத்மா அவன் உடலுக்குள் தான் போகும்.
அவனை
எண்ணியே வேதனைப்பட்டேன். அந்த வேதனையான நிலைகள்
எனக்குள் நோயாக வந்தது.
நோயாக உருவான இந்த
உயிராத்மா நான் இறந்த பிற்பாடு
என் பையன் உடலில் தான் போகும்.
அங்கே
போய் அங்கே நல்லதை விளைய வைக்கின்றதா...? என்றால் இல்லை. அவனை வீழ்த்தச் செய்வேன்.
மந்திரங்கள் தந்திரங்களைக் கற்றுக் கொண்டவர்கள்
1.மனித உடலில் விளைந்த உணர்வு எண்ணங்களைத்
தனக்குள் கவர்ந்து கொண்டவர்கள்
2.வாமன
அவதாரம் என்று சொல்வார்கள்.
இதுகளெல்லாம்
மந்திரத்தாலே அப்போதைக்கு
அப்போது அந்தந்தக் காரியங்களை
ஜெயித்துக் கொண்டு வந்தவர்கள்.
அதை
எல்லாம் “தெய்வப் பண்புகளிலே பார்க்கப்பட்டு...” அந்த உணர்வின் தன்மை திசை திருப்பி அன்றைய
வாழ்க்கையை எப்படியோ பொழுது போக்க வேண்டும் என்று செய்வார்கள்.
வீட்டில்
மாடி கட்டுவதற்கு பொய்ப்
பந்தலைக் கட்டி அதன் மேலே தளம்
சுவர் எழுப்பிக் கட்டுவோம். செய்து முடித்தபின் பொய்ப்
பந்தலை உடனுக்குடனே எடுத்து விடுவது போல் தான் மந்திரம் சொல்வதை அது நிரந்தரமாகக் கட்டி
விட்டார்கள்.
1.மனித
உடலிலே விளைய வைத்துத் தன்னைத் தற்காத்துக் கொள்ள
2.இந்த மனித வாழ்க்கையிலே தன்னுடைய பேருக்கும் புகழுக்கும்
3.தன் சுகபோகங்களுக்கும் எண்ணி எடுத்துக் கொண்டது
தான் இந்த மந்திர
ஒலிகள்.
அந்த
மந்திர ஒலிகள் எங்கிருந்து வந்தது?
ஒரு
மனித உடலில் விளைய வைத்த அந்த
எண்ணங்களைக் கவர்ந்து தனக்குள் அது உருவாக்கித் தன்னுடன் இயக்கச் செய்யும் நிலையே
அது.
சந்தர்ப்பத்தால்
நாம் எடுக்கும் குணம் கொண்டு ஒரு
ஆன்மா நம் உடலில் எப்படி நுழைந்து விடுகின்றதோ இதைப்போல
1.செயற்கையில்
ஒரு மனிதன் மந்திர
ஒலிகளைப் பரப்பச் செய்து
2.அந்த மந்திரத்தை எவன் உருவாக்கினானோ
3.அந்த
மந்திர ஒலி கொண்டே மீண்டும் தனக்குள் கவர்ந்து
4.இன்னொரு
ஆத்மாவினுடைய செயலைத் தனக்குள் கவர்ந்து கொள்வது
5.இது தான் மந்திரம்.
கவர்ந்து
கொண்ட நிலைகள் கொண்டு சில காலம் இன்னொரு உடலுக்குள் போய்ப்
பேயாகவும் அருளாகவும் தெய்வமாகவும்
செயல்படுத்தி மாற்றிக் காட்டலாம்.
பல
வித்தைகளைச் செய்து காட்டலாம்.
ஆனால் பயன் ஒன்றுமே இல்லை. அப்படிச் செய்தவர்கள்
அனைத்தும் மீண்டும் விஷத்தின்
தன்மை கொண்டு பாம்பாகவோ தேளாகவோப் பிறந்து தான் மீண்டும் மனிதனாக வரவேண்டும்.
இதைப்போல
நாம் மந்திரம் என்ற இந்த நிலைகளில் இருந்து விடுபட்டு பத்தாவது நிலையான கல்கி என்ற நிலையில் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று தியானிப்போம்.
ஏனென்றால்
நாம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் நம்மை அறியாமல்
நமக்குள் சென்ற இந்த அழுக்கினைத்
துடைக்கத்தான் இந்தத் தியானம்.
தியானம்
என்பது வேறு
என்னமோ என்று நினைத்துக் கொள்கின்றார்கள்.
நமக்கு
எப்போது இடைஞ்சல் வருகின்றதோ அந்த இடைஞ்சல் நமக்குள்
ஒட்டாது "ஈஸ்வரா..." என்று தன் உயிரை வேண்டி விண்ணை நோக்கி எண்ணங்களைச்
செலுத்த வேண்டும்.
அந்த மகரிஷியின்
அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி அந்தச் சக்திகளைக் கவர்ந்து நம் உடல்
முழுவதும் பரப்பச் செய்வது தான் இந்தத் தியானம்.
செய்து
பாருங்கள்.