வள்ளலார் படித்தவர்
அல்ல. கல்விச் சாலையில் கற்றுணர்ந்தவரும் அல்ல. கல்விச் சாலைக்கே சென்றாலும் அங்கே
படிப்பு ஏறவில்லை.
அவர்கள் குடும்பமோ
பிறருக்குக் கதாகாலட்சேபங்களில் முருகனைப் பற்றி அவர் வருணனைகளைக் காட்டி அதில்
வரும் கூலியை வைத்து வாழ்ந்து வந்தவர்கள்.
அவருடைய சகோதரன்
இராமலிங்கத்திடம் சொல்கிறார். முருகனைப் பற்றி கதாகாலட்சேபங்களைச் செய்து அதன்
வழியில் அவன் நினைவு கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளோம்.
அதனின் தத்துவத்தை நீ
பேச வேண்டும் என்றால் நீ கல்வியில் சிறந்தவனாக இருந்து பாடநிலைகள் கற்றுக்
கொண்டால்தான் அந்த முருகனைப் பற்றிப் பேச முடியும்.
அவனுடைய நாமத்தால்
நமக்கு ஒரு வழி கிடைக்க வேண்டும். கிடைக்கும் என்று சிறு பிள்ளையாக இருக்கும்
வள்ளலாரிடம் அவன் சொல்கின்றான்.
இராமலிங்கம் எப்படியும்
உயர்ந்த கல்வி படிக்க வேண்டும். நம் குடும்பப் பாரம்பரியத்தைக் காக்கும் நிலைகள்
அந்த முருகனின் நாமாவளிகளை அவன் பேச வேண்டும் என்று ஆசைப்படுகின்றான்.
ஆனால் அந்தச் சிறு
வயதில் மற்றொருவனுடன் இணைந்து கொண்ட அந்தப் பழக்க தோஷம் விளையாட்டில் ஆர்வத்தைச்
செலுத்தினான்.
இராமலிங்கம்
பள்ளிக்குச் சென்றால் இந்த விளையாட்டு உணர்வு முன்னணியில் வந்தபின் பள்ளியில்
படிக்கும் பாட நிலைகள் இவனுக்குள் பதிவாவதில்லை. விளையாட்டின் உணர்வே தனக்குள்
பதிவாகின்றது.
வாத்தியார் கேட்கும்
கேள்விகளுக்குப் பதில் சொல்லவில்லை என்றால் உதை விழுகின்றது. அந்த அடி தாங்காது
வெளியில் வந்து விடுகின்றான்.
பள்ளிக்கே போகாமால்
வெளியே வந்து விடுகின்றான். விளையாட்டு மீது அதிக நாட்டமாகி அந்த உணர்வின்
தன்மை அவனுக்குள் வளர்த்துக் கொள்கின்றான்.
எத்தனையோ நிலையில்
இருந்தாலும் சகோதரன் இவன் உயரந்த நிலை பெறச் சொல்லுகின்றான். இவன் உயர வேண்டும்
என்று சொல்கிறார். ஒரு முறை சாந்தமாகச் சொல்கிறார். இரண்டாவது முறை கோபமாகச்
சொல்லுகின்றார்.
ஆனால் இப்படி இந்தக்
கோபத்தின் உணர்ச்சியைத் தூண்டும் பொழுது படிப்பின் மீது வெறுப்பின் தன்மை
இராமலிங்கத்திற்குள் வளர்கின்றது.
அண்ணனைக் காணும்
போதேல்லாம் பயம். ஆனால் அண்ணியோ “ஐயோ பச்சிளம் குழந்தையை இவர் இப்படிப் பேசுகிறார்..!
இவன் உணவில்லாமல் போய்விடுவானே...! என்று உணவை ஊட்டுகின்றது.
இராமலிங்கம்
பள்ளிக்குச் செல்லாமல் வெளியிலே போய் விளையாடுவதும் பள்ளி நேரம் முடிந்து வந்து உணவுக்கு
வீட்டிற்கு வருவதும் ஆக இருக்கின்றார்.
வாத்தியார் சகோதரனிடம்
கேட்கின்றார். எங்கே... உங்கள் சகோதரன் பள்ளிக்கே வருவதில்லை...! என்று.
இதைக் கேள்விப்பட்டு
இங்கே வந்து கேட்கின்றான். இவன் பள்ளிக்கே போவதில்லையாம்.. எப்படி..? என்று தன்
மனைவியிடம் கேட்கின்றான்.
அவன் பள்ளிக்குத்தானே
போகின்றான். நேரத்தில் வந்து சாப்பிட்டுவிட்டுப் போகின்றான். நான் தானே சோறு
போடுகிறேன் என்று மனைவி சொல்கின்றது.
அவன் பள்ளிக்கு
போகாமலே விளையாடிவிட்டு இந்த மாதிரிச் சாப்பிடுகின்றான். அவனுக்குச் “சோறு போடாதே…”
என்ற நிலைகளில் மனைவியை அவன் மிரட்டுகின்றான்.
பச்சிளம் குழந்தை
அவனுக்கு எவ்வாறு நாம் இல்லை என்று சொல்வது? அவன் அறியாத நிலையில் இருப்பவனுக்கு
நாம் அறிவூட்டுவதே நலம் என்ற நிலைகளில் பரிபக்குவமாக அண்ணி இராமலிங்கத்திடம்
சொல்கிறது.
நீ சாப்பிடப்பா… நீ
பள்ளிக்குப் போப்பா… உங்கள் அண்ணன் என்னை ஏசுகின்றார். பார்த்து நன்றாக படித்துக்
கொள். “உனக்குத் தானே நல்லது..!” என்று சாந்தமாகச் சொல்லுகின்றது.
நீங்கள் ஒரு காரத்தைப்
போட்டு விட்டு அதற்குப் பின் அதில் நல்ல பொருளைப் போட்டால் அந்தக் காரத்துடன்
சேர்ந்து சுவையின் தன்மை மாறும்.
அது
போல வெறுப்பின் உணர்வு கொண்டு பள்ளியில் வாத்தியார் அடித்தார். மறுபடியும் அங்கே
போனால் திட்டுவார். பாட நிலையே வரவில்லை என்று இவன் எடுத்துக் கொண்ட பின்
அண்ணியின் பாசமான உணர்வும் அங்கே ஏறமாட்டேன் என்கின்றது.
இருந்தாலும் இந்த
உணர்வின் தன்மை எடுத்த பின் எப்படியோ அண்ணிக்கு மரியாதை கொடுக்கின்றான். “சரி…”
என்று சொல்லி விட்டு வெளியே போகின்றான். ஆனால் விளையாடப் போகின்றார்.
பின் அங்கே வாத்தியார்
பள்ளிக்கு வரவில்லை என்று தகவல் கொடுக்கின்றார். அவன் ஏன் பள்ளிக்கூடத்திற்கு
போகவில்லை…! நீ ஏன் சோறு போடுகின்றாய்…? என்று சொல்லி மனைவியைக் கண்டிக்கின்றான்.
நான் என்ன செய்வது?
நானும் நல்ல புத்தியைத்தான் சொல்கின்றேன். என்னமோ…, அவன் நிலை இப்படிப்
போய்க்கொண்டு இருக்கின்றான். ஏதோ சொல்லிப் பார்க்கின்றேன்… திருத்திப்
பார்க்கிறேன்…! என்று சொல்கிறார்.
இருந்தாலும் நீ அவனுக்குச்
சோறு போடாமல் விட்டால் அவன் ஒழுங்காக வருவான் என்று மீண்டும் சொல்கிறார். அப்படி
இருந்தாலும் அவன் அதைக் கேட்கவில்லை.
அண்ணி அவனுக்கு
அடிக்கடி சாதம் போடுவதும் அண்ணன் தலை வாசல் வழி இருந்தால் பின்புற வாசலில்
வந்து உணவு சாப்பிட்டு விட்டு போவதுமாக இருக்கின்றார் இராமலிங்கம்.
எப்படியும் இவனுக்குச்
சோறு போடாமல் தடுக்க வேண்டும் என்று சொல்கின்றான். ஆனால் ஒரு சமயம் அவன்
கொல்லைப்புறம் வழியாக வருவதை அந்தச் சப்தத்தைக் கண்டவுடனே மனைவி எழுந்து அவனுக்கு
உணவு கொடுப்பதைப் பார்த்தான் அண்ணன் மறைமுகமாக.
என்ன செய்கின்றான்
என்று சிறிது நேரம் கழித்து வீட்டிற்குள் போனவுடனே தன் கணவனின் காலடி சப்தத்தைக்
கண்டபின் அந்தச் சாப்பாட்டுடன் ஒரு ரூமிற்குள் இராமலிங்கத்தை அண்ணி போட்டு பூட்டி
விடுகின்றார்கள்.
பூட்டிச் சாவியைக்
கொண்டு எங்கயோ வைத்து விடுகின்றார்.
அண்ணன் இங்கு
வந்தவுடனே “இங்கே… இப்பொழுது தானே வந்தான்…. எங்கே போனான்..? என்று கேட்கின்றான்.
இங்கு வரவில்லையே…!
என்று மனைவி சொல்கிறது.
இந்த ரூம் பூட்டி
இருக்கின்றதே…! என்று கேட்கின்றான்.
அவன் வரவில்லையே என்று
மீண்டும் சொல்லிவிட்டு…, “வந்தவன்” இப்படியே இந்தப் பக்கம் ஓடியிருப்பான்…! என்று
பொய் சொல்லுகின்றது அவனைக் காக்க இவ்வாறு சொல்லி விடுகிறார்கள்.
உன்னால் தான் அவன்
கெடுகின்றான் என்று அவனுக்கு அன்னமிட்ட அந்தக் கையையே அண்ணியை அடிக்கின்றான் (தன்
மனைவியை)
அண்ணி அடிபடுவதைப்
பார்த்து அடைப்பட்டிருக்கும் ரூமிலிருந்து இராமலிங்கம் ஏங்குகின்றான்… யாரை?
எந்த முருகனை அந்தக்
குடும்பத்தின் நிலைகளில் பற்றுடன் நேசித்து அதைக் கதாகாலட்சேபங்கள் செய்து
மக்களுக்கு நல் உணர்வை ஊட்டுகின்றனரோ அதனை எண்ணி ஏங்குகின்றான் “அந்த முருகனை...”
ஏக்கத்தில் அண்ணிக்கு
அடி விழுக விழுக அவன் தன்னையே மறந்து விடுகின்றான். முருகன் மேல் எண்ணத்தைச்
செலுத்தி விடுகின்றான்.
அதே முருகனுடைய அருள்
பெற வேண்டும் என்று அந்த குடும்பத்தைச் சார்ந்தோரும் அதன் வழிகளில் அந்த நிலைகள்
இழந்து அந்த முருகனை அடைய வேண்டும் என்று இவர்களுடைய மூதாதையர்களை அதனில் பெற்ற
அல்லது இதற்கு முந்தைய நிலைகள் பற்றுக் கொண்ட இந்த உணர்வின் அலைகள் குவிகின்றது.
அவன் அறைகளுக்குள்
வந்தபின் இவன் நிலை அற்றவனாக மாறி விடுகின்றான். அதே பக்தி கொண்ட இன்னொரு ஆன்மா
இவன் உடலுக்குள் புகுந்து விடுகின்றது. அது பல சித்துக்கள் எதைச் செய்ததோ இதைப்போல
இவன் உடலுக்குள் வந்து விடுகின்றது.
சாதாரணமாகப் பயத்தால்
ஒருவர் வாடும் போது அதே பயத்தால் ஒரு குடும்பத்தில் மரணமடைந்திருந்தால் அது
எப்படித் தான் தற்கொலை செய்து கொண்டதோ அதே ஆன்மா இந்த உடலுக்குள் வந்தால் பிரமை
பிடித்த மாதிரி உட்கார வைத்து விடும்
இதைப்போல தான் பக்தி
கொண்ட ஆன்மா இராமலிங்கம் உடலுக்குள் சென்றபின் அப்படியே பிரமை பிடித்த மாதிரி அமர்ந்து
விடுகின்றான்.
இவர் அண்ணியோ அடி
தாங்காதபடி “நீ கதவைத் திற…!” என்று தட்டிக் கதவைத் திறக்கப்படும் போது உள்ளே
பார்த்தால் பிரமையாக இருக்கின்றான்.
இராமலிங்கத்தின்
அண்ணனோ தன்னுடைய மனைவியைக் கடுமையாகத் தாக்கிவிடுகின்றான். ஏசி விடுகின்றான்.
இராமலிங்கமோ உணவிட்ட
நிலைகளில் பாசத்தினால் தன் அண்ணியை எண்ணி ஏங்கி அப்படியே அமர்ந்து விட்டான்.
எந்த முருகனுக்கு
உபதேசித்தார்களோ அதே எண்ணத்தில் இருக்கும் போது அதே பற்று கொண்ட ஒரு ஆன்மா இவனுள்
புகுந்து விடுகின்றது. அதன் நிலையில் ஒன்றும் அறியாதவனாக அமர்ந்து விடுகின்றான்.
இவர்கள் கதவைத் திறந்து
பார்த்த பின் இவனை உலுக்குகின்றனர்... உலுப்புகின்றனர். ஆனால் மரம் போல அவன்
அமர்ந்து விடுகின்றான்.
அப்போது தான் தன்
மனைவியை அடித்து விட்டோமே…! அவன் இப்படி ஒரு பிரமையாக அமர்ந்து விட்டானே…! என்று
வேதனைப்பட்டபின்…, “தான் தவறு செய்து விட்டோமே…! என்று அண்ணன் உணர்கின்றான்.
அவனுக்குள் வேதனையான
உடன் அவன் உடல் நலமற்ற நிலையாகிக் காய்ச்சலாகப் படுத்து விடுகின்றான். அன்றைக்குக்
கதாகாலட்சேபங்களுக்கு அந்த இடங்களுக்குச்
செல்ல முடியாது கடும் குளிரும் காய்ச்சலுடனும் துடிக்கின்றான்.
அதைக் கண்டதும் அண்ணி
அலறுகின்றது. சொன்ன நிலைகள் பெற முடியவில்லை. இந்தக் குழந்தையோ இப்படிப் பிரமையாகிவிட்டது.
எனக்கு இந்த உதைகள் கிடைத்தது என்று புலம்புகின்றது.
இந்த ஓலத்தைக் கேட்டு
உணர்ந்த பிஞ்சு உள்ளத்தில் அந்த உணர்வுகள் எழுப்பச் செய்கின்றது.
அப்போது அண்ணிக்கு
ஆதரவு சொல்லும் நிலைகளில் அண்ணன் செய்யும் காரியத்தை இன்றைக்குக் கதாகாலட்சேபத்தை
நான் செய்து விட்டு வருகின்றேன் என்று இராமலிங்கம் சொல்கிறான்,
அப்போது உனக்கு
ஒன்றும் தெரியாதே...! நீ எவ்வாறு செய்யப் போகின்றாய்…? என்று கேட்கிறார்கள்.
நான் அவர்களிடம்
சொல்லி அண்ணனுக்குப் பதில் வந்ததாகச் சொல்கிறேன். அல்லது நேரத்தையாவது மாற்றிச்
சொல்லி விட்டு வருகின்றேன். அண்ணனுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி விட்டு
வருகிறேன் என்று இவர்களிடம் சொல்லிவிட்டு அங்கே செல்கின்றான்.
அங்கு போனபின்
அண்ணனைக் காட்டிலும் மிகவும் தெளிவாகவும் கதாகாலட்சேபம் செய்கிறார். முருகனே அவரது
அருகில் வந்ததாக அவனுடைய கதாகாலட்சேபங்கள் அமைகின்றது.
அங்குள்ள அனைவரும் “கடவுளே
வந்து விட்டார்… முருகனே வந்து விட்டார்…!” என்று அவரைப் போற்றி துதிக்கும்
நிலைகள் வருகின்றது.
அருட்பெருஞ்ஜோதி நீ
தனிப்பெரும் கருணை நீ என்று அவர் பாடுகின்றார்.
தன் அண்ணி அது
உதையிலிருந்து மீள வேண்டும் என்று அந்த உயர்ந்த நிலைகளை எண்ணப்படும் போது அந்த
ஜோதியின் தன்மையாக இருளை நீக்கிப் பொருள் காணும் நிலையாக எனக்குள் நின்றே என்னுள்
வழி காட்டுகின்றாய் என்று வெளிப்படுத்துகின்றார்.
அந்த அருட்பெருஞ்ஜோதி
என்ற நிலைகளில் வாழ்க்கையில் எதையெதை எல்லாம் கண்டு உணர்கின்றானோ சந்தர்ப்பத்தால்
கண்டுணர்ந்த நிலைகளைத்தான்
1.உயிரை ஜோதியாக
வைத்து
2.அவர் கண்டுணர்ந்த நிலைகள்
ஆறாவது திருமறை
3.தனக்குள் வரும்
குணங்கள் எதுவோ அது திரையிட்டுக் காட்டப்பட்டு
4.மனித வாழ்க்கையில்
ஒவ்வொரு இருள் சூழ்ந்த நிறங்கள் நமக்குள் எவ்வாறு வருகின்றது?
5.இதைப் பிளந்து
ஒளியின் தன்மையாக நாம் எவ்வாறு ஆக வேண்டும் என்று
6.அவர் தெளிவாக
எடுத்துக் காட்டியது தான் "ஆறாவது திருமறை"
மனிதன் வாழ்க்கையில்
வரும் தீமையிலிருந்து விடுபட்டு ஒளியான நிலைகள் கொண்டு
1.எவ்வாறு உயிருடன்
ஒன்றி
2.அந்த ஒளியின்
சரீரமாக நாம் பெற வேண்டும் என்று தான்
3.அன்றைய நிலைகளில்
அந்த இளம் பிஞ்சு உள்ளத்தில் இத்தகைய நிலைகள் உருவாகி
4.இராமலிங்கம் அதைச்
செய்தார்.
அக்காலத்தில் இவர்
அறியாது இன்னொரு சித்து கொண்ட ஆன்மா அங்கிருந்து வெளிப்படுத்தும் உணர்வுகள் பல
அற்புதங்கள் நிகழ்த்துவதைக் கண்ட பின் “பெரிய மகான்..” என்ற நிலைகளில் இவரை
அணுகுகின்றனர்.
அந்தப் பிஞ்சு உள்ளமான
இராமலிங்கம் மற்ற விஷம் தீண்டிய உடல்களைப் பார்த்தார் என்றால் இவர் பார்வையால்
நஞ்சு நீங்கிவிடுகின்றது. அவர்கள் உயிர் பிழைத்து எழுகின்றார்கள்.
இவ்வாறு எத்தனையோ
நஞ்சுகள் தாக்கப்பட்ட நிலைகளில் இருந்து இவர் பார்வையால் இவர் சொல்லால் வெளிப்படுத்தும்
உணர்வுகள் மற்றவர்கள் உடலுக்குள் ஊடுருவும் போது அந்த உடலிலே வந்த நஞ்சுகள்
மறைகின்றது.
அதற்குப் பின் இராமலிங்க
அடிகளைப் போற்றும் நிலைகள் வருகின்றது.
பிறர் செய்யும்
தவறிலிருந்து ஒளியாக மாற்றவேண்டும். அந்த இருளில் நாம் சிக்கிவிடாதபடித்
தனிப்பெரும் கருணையாக அந்த அருள் ஞானியின் உணர்வைக் கொண்டு நான் தெளிந்து தெளிந்த
நிலைகள் கொண்டு
1.என் வாழ்க்கையில்
வழிபட வேண்டும்
2.வாழ்க்கையில் வளம்
பெற வேண்டும்.
3.என் பார்வையால்
பிறருடைய இருள்கள் நீங்க வேண்டும்.
4.மெய்ப் பொருள்
காணும் நிலைகள் பெற வேண்டும் என்ற இதைத்தான்
6.அருட்பெருஞ்ஜோதி நீ தனிப்பெரும் கருணை நீ என்று அவர் வேண்டிப்
பாடினார்.