இயற்கையை வணங்கச் செய்து அதை நமக்குள் இணைத்து வளரும் சக்தியின்
ஆற்றலைத்தான் அன்று மகரிஷிகள் காட்டினார்கள்.
1.இயற்கையின் செயலை எவ்வாறு நமக்குள் இணைப்பது…?
2.இயற்கையுடன் ஒன்றி உயிரின் நிலைகள் ஒளியாக மாற்றுவது எவ்வாறு…?
என்று
3.அந்த மெய் ஒளியின் தன்மையத் தான் காட்டினார்கள் மாமகரிஷிகள்
இந்தப் பூமியிலே "தென்னாட்டுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும்
இறைவா போற்றி…” என்று சொல்லும் “மெச்சத் தக்க நிலை…” என்பது அது தான்.
தென்னாட்டிலே தோன்றிய அகஸ்திய மாமகரிஷிதான் இத்தகைய விண்ணுலக
உணர்வின் ஆற்றலை மண்ணுலகில் வாழும் பொழுது
1.தன் உடலான உடலுக்குள் செயல்பட்ட இந்த உணர்வின் தன்மையை
2.இந்த மூன்றுக்கும் இடைப்பட்ட நிலைகள் (விண்ணுலகம் மண்ணுலகம்
உடல்)
3.உணர்வின் இயக்கங்களை அணுவிற்குள் அகம் – அந்த அகத்தை அணுவின்
ஆற்றலை அறிந்தார் (அகத்தியர்).
ஒரு அணுவிற்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் இயக்கம் அது மற்றொன்றுடன்
இணைக்கப்படும் போது அது எவ்வாறு இணைக்கப்படுகின்றது என்ற மெய் உணர்வை அகஸ்திய மாமகரிஷி
காட்டினார்.
இது தான் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா
போற்றி என்று போற்றும் நிலையாக வந்தது.
தென் நாட்டிலே தோன்றிய அகஸ்தியர் விண்ணுலகின் ஆற்றலை அந்த
மெய் உணர்வைத் தனக்குள் எடுத்து உடலாக (சிவமாக) ஆக்கிச் சிவத்திற்குள் உணர்வின் அகத்தை
அளந்தறிந்து அகத்தின் நிலைகள் கொண்டு அவர் உணர்ந்தார்.
புவி வட துருவம் கொண்டு தனக்குள் எடுக்கும் விண்ணின் ஆற்றலைத்
தனக்குள் தனதாக்கி அதை ஒளியாக ஆக்கித் துருவ மகரிஷி ஆனார். சிருஷ்டிக்கும் தன்மையாக
வந்ததைத்தான் மகரிஷி என்பது,
பூமி எடுக்கும் சர்வ சக்திகளையும் தனக்குள் சிருஷ்டித்து அந்த
உணர்வின் நிலையை ஒளியாக மாற்றி விண் சென்றார் துருவ மகரிஷி.
1.அந்த அகஸ்தியன் தான் துருவன்
2.தான் சிருஷ்டிக்கும் தன்மையாக அவன் விளைய வைத்தான்.
மனிதனாக நின்று அகத்தின் உணர்வைத் தனக்குள் அறிந்துணர்ந்து
அறிந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் ஒளியாகக் கூட்டினார்.
இந்த உணர்வின் சத்து கொண்டு தென் துருவப் பகுதியிலே தான் நின்று
வட துருவத்திலிருந்து நம் பூமிக்குள் வரும் அனைத்துச் சக்தியும் அதனின் விஷத்தின் ஆற்றலை
மாய்த்து உணர்வின் ஒளிச் சுடராக உயிராத்மாவை மாற்றி துருவ நட்சத்திரமாக அங்கே துருவம்
சென்றடைந்தார்.
அவ்வாறு விண் சென்ற அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி
துருவ நட்சத்திரமான அதிலிருந்து சிதறி வரும் ஒளியயான உணர்வின் சக்தி தான் நாரதன்.
1.மனித வாழ்க்கையில் நம்மை அறியாது வரும் துன்பங்களை அகற்றிடும்
உணர்வின் ஆற்றலை
2.எந்நாட்டவரும் பெறும் தகுதியை ஏற்படுத்துவதற்கே
3.தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி
என்று
4.பின் வந்த ஞானிகள் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.
4.பின் வந்த ஞானிகள் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.