ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 3, 2017

ஆறாவது அறிவு கொண்ட மனிதன் “ஏழாவது அறிவு பெற்றால்... சப்தரிஷி...” – விளக்கம்

காரமோ புளிப்போ மற்ற நிலைகள் அனைத்தும் அதனதன் வீரிய நிலைகள் கொண்டிருந்தாலும் சமையல் செய்யும் பொழுது நாம் அவையெல்லாவற்றையும்  இணைத்துச் சுவை மிக்கதாக மாற்றுகின்றோம்.

அது எதனுடைய செயலாக இருந்தாலும் அதை அடக்கும் திறன் இங்கே மனிதனுக்கு வருகிறது. தனக்குகந்தாக மாற்றிக் கொள்கிறான் மனிதன்.

மற்ற உயிரினங்களோ அதனதன் நிலைகள் கொண்டு சுவையை உணவாக உட்கொள்கிறது. தனக்கு வேண்டும் என்றால் சாப்பிடுகிறது. வேண்டாம் என்றால் நுகர்ந்து பார்த்துவிட்டு விட்டு விடுகிறது.

ஆனால் மனிதனாக இருக்கக்கூடிய நாம் அதை அப்படி விடுவதில்லை. எதுவாக இருந்தாலும் அதனின் ஆற்றலைக் குறைத்துச் சுவையாக்கி உட்கொள்கிறோம்.

மனித உடல் நாம் உணவாக உட்கொண்டதில் மறைந்துள்ள விஷத்தின் தன்மையை மலமாக மாற்றி அதற்குள் இருக்கக்கூடிய நல்ல உணர்வின் சத்தை ஆற்றல் மிக்கதாக உடலாக மாற்றிவிடுகிறது. இதைப் போலத் தான்
1.நம் எண்ணத்தின் நிலைகள் செயல்படும் போது
2.இந்த உணர்வின் நிலைகள் கொண்டு கெட்டதை நீக்கி
3.நல்லதை உருவாக்கும் உணர்வுகள் வருகின்றது.
   
அல்லது
1.கெட்டதின் தன்மையாக இருந்தாலும்
2.நமக்கு வேண்டிய நிலைகளாக அதை இயக்கச் சக்தியாக ஆக்கித்
3.தனக்குள்  அடிமையாக்கும் நிலை வருகிறது.

எதுவானாலும் அதை நாம் சமப்படுத்தி தன்னுடைய இயக்கத்திற்குக் கொண்டு வரும் நிலைகள்.

இப்படி ஏழாவது அதுதான்சப்தரிஷி” என்பது.

பரசுராம்என்ற நிலை ஏழாவது வரப்படும் பொழுது ஒவ்வொரு உணர்வின் எண்ணங்கள் கொண்டு சிருஷ்டிக்கும் தன்மை வரப்படும் பொழுது சப்தரிஷிஎன்பது.

மனிதனின் ஏழாவது அறிவு தான் சிருஷ்டிக்கும் தன்மை பெற்றது.

அதில் எதனதன் குணங்களை எடுக்கிறோமோ அதைத்தான் சப்தரிஷி என்று வைத்தார்களே தவிர இவர்கள் கூறுவது போல இராமாயணத்துக்கு ஏழு ரிஷிகளும் மகாபாரதத்திற்கு ஏழு ரிஷிகளும் என்று இல்லை.

ஞானிகளின் தத்துவங்களை மந்திர ஒலிகளாக மாற்றிய திறன் படைத்தவர்கள் தான் அன்று ஆண்ட அரசர்களின் செயல்கள்.

இராமாயணத்தில் ஏழு ரிஷிகள் என்பது
1.மனித உடலில் விளைவித்த இந்த உணர்வின் எண்ணங்களை       
2.அதை பதியச் செய்து மீண்டும் பிரித்தெடுத்து
3.அதை இயக்கச் சக்தியாக மந்திர ஒலிகளாகப் பயன்படுத்துவது.   

வாமன அவதாரம் என்று சொல்வார்கள். குடையை மழைக்கு நாம் பயன்படுத்துகிறோம், வெயிலுக்கு நாம் பயன்படுத்துகிறோம்.

அதே போல இந்த மந்திர ஒலிகள் மனிதனுக்குள் அவ்வப்போது வரும் துன்பங்களுக்கு இந்த மந்திர ஒலிகள் கொண்டு சமத்துவப் படுத்திக் கொள்ளலாம்.

அதைத் தவிர அதனால் ஒன்றும் செய்ய முடியாது. இதை வாமன அவதாரம் என்று பிற்காலத்தில் சொல்லி இருப்பார்கள்.

இன்று இந்த விஞ்ஞான உலகில் ஆறாவது அறிவிலிருந்து மீண்டும் ஐந்தறிவு கொண்ட மிருக நிலைக்குச் செல்வதல்ல வளர்ச்சி.

மனிதன் தன் ஆறாவது அறிவின் துணை கொண்டு
1.ஏழாவது நிலையாக சிருஷ்டிக்கும் தன்மையாக
2.அழியா ஒளியின் சரீரமாக சப்தரிஷி என்ற நிலையை அடைய வேண்டும் என்பது தான்
3.வளர்ச்சிப் பாதை.