ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 22, 2017

தீமை செய்பவர்களின் உடலை வீழ்த்த வேண்டியதில்லை – அருளைப் பாய்ச்சி அவர்களை நல்லவர்களாக்க வேண்டும் – கீதா உபதேசம் கண்ணன் அர்ச்சுனனுக்குச் சொன்னது

மகாபாரதத்தில் குருவே எதிரியின் பக்கம் இருந்து அந்த விஷத்தின் தன்மை சிக்கியபின் குருவாகக் காட்டப்பட்ட அந்த மெய் உணர்வின் சக்திகளை எப்படி மீட்டுவது?

குருவிற்குள் தன்னை அறியாது வந்தாலும் அந்தக் குருவின் நிலையை அவரை அறியாது ஏனென்றால் அந்தப் பாசத்தின் வலைகளில் சிக்கும் பொழுது
1.குரு என்ற நிலையில் மரியாதை
2.இங்கே சகோதரர் என்ற மரியாதை
3.ஆனால் அவர்கள் செய்வதோ தவறு.

எனக்குள் இருக்கக்கூடிய வலிமை கொண்டு “அவரை வீழ்த்தி விட்டால்…”  நான் யாருக்காக வேண்டி வாழ்கிறேன் என்ற இந்த உணர்வின் சோகங்கள் இங்கே தூண்டும் பொழுது அப்பொழுது தீமையை வளரவிடும் நிலையாகி “நல்லதைக் காக்கும் திறன் இழக்கின்றது”.

மனித வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட இந்தப் பாசத்தின் நிலைகள் எல்லை கடந்து செல்லும் பொழுது நம்மால் அதை மீட்டும் நிலை அது பலம் இழந்து நம்மையே வீழ்த்தி விடுகின்றது.

இத்தகைய நிலையைத்தான் அர்ச்சுனனுக்கு (அர்ச்சுனன் என்பது சகல வலிமையும் கொண்ட உணர்வின் நிலைகள்) தன் உயிரான நிலைகள் கீதா உபதேசத்தின் தன்மை உபதேசிக்கும் பொழுது
1.நீ எங்கே எடுத்தாலும் என்னிடம் தான் வருகின்றாய்.
2.எதை நினைத்தாலும் அந்தக் கண்ணின் வழி கொண்டு தான் அறிய முடியும்.
3.நீ எதைச் சேர்த்தாலும் அதனின் உணர்வு கொண்டு தான் இந்த உடலிலே விளைகின்றது.
4.நீ எதை நினைக்கின்றாயோ அதனின் நிலைகள் யார் எதைச் செய்தாலும் என்னிடமே நீ வந்து சேர்வாய்.
5.என் நிலையையே நீ அறிவாய் என்று
6.இந்தக் கண்ணின் உபதேசம் கண்ணனின் நிலைகள் கொண்டு காட்டப்பட்டது.

ஆனால் கண்ணின் நினைவுகள் என்னாகின்றது? கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான் என்கிறபோது அவர் அறியாத நிலைகள் அங்கே வருகின்றது.

அவர் எடுக்கும் உணர்ச்சிகள் இந்த உடலை ஆட்டிப்படைக்காதபடி இந்தக் கண்ணின் நிலையை அவருடன் ஒன்றி “கண்ணா…!’ என்று நாம் எண்ணும் பொழுது
1.இந்தக் கண்ணின் நிலைகள் உயிருடன் எண்ணி
2.நினைவை நாம் இங்கே புருவ மத்தியில் செலுத்தி
3.நமக்குள் இயக்கிக் கொண்டிருக்கும் குருவான – உயிருடன் அங்கே ஏங்குவது.

அதைத் தான் குருக்ஷேத்திரப்போர் என்பது.

அங்கே அவர்கள் (தீமை செய்யும்) உணர்வுகளை நாம் சுவாசித்து உயிரான குருவிடம் பட்டுத்தான் அதை நாம் அறிய முடிகின்றது.

அவருடைய உணர்வின் தன்மை இங்கே செல்லாதபடி “ஈஸ்வரா” என்று குருவை எண்ணி அந்த மெய் ஒளி பெறவேண்டும் என்ற ஆற்றல்மிக்க சக்தியைக் கூட்டும் பொழுது அந்த உணர்வின் தன்மை எனக்குள் வலு கூடுகின்றது.

இந்த உணர்வின் எண்ணத்தை ஓங்கிச் செலுத்தி மெய் உணர்வை ஊட்டிய மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று விண்ணை நோக்கி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

அந்த மெய் ஒளியை நமக்குள் சேர்த்து இந்த உணர்வின் தன்மை கொண்டு
1.எங்கே எண்ணித் தாக்க வேண்டும் (எனக்கு இடைஞ்சல் செய்ய வேண்டும்) என்று எண்ணினார்களோ
2.அந்த எண்ணத்தை “அங்கேயே…” நிறுத்த வேண்டும்.
3.அம்பைக் கொண்டு அல்ல.
4.புறத்தால் காட்டிய இந்த அம்பை எய்து தவறு செய்பவர்களை அந்த உடலை வீழ்த்துவது அல்ல.

உடலை வீழ்த்த வேண்டும் என்ற அந்த உடலுக்குள் நின்று அந்தத் தீமையான உணர்வை இயக்கியதை அந்த ஆற்றல்களை அங்கே நிறுத்தி “அவனை நல்லவனாக்க வேண்டும்…!”

வரும் எத்தகைய தீமைகளாக இருந்தாலும் அகற்றும்படி செய்கின்றது.