ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 4, 2017

அதிகாலையில்… “உங்களைத் தட்டியெழுப்பும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை” சிறுகச் சிறுக எடுத்து உங்கள் உடலில் சேர்த்துக் கொள்ளுங்கள்

எவ்வளவு தான் இருந்தாலும் அன்றாட வாழ்க்கையில் ஒரு நொடிக்கு நொடி ஒவ்வொன்றையும் பார்க்கின்றோம்.
1.நல்லதை நினைத்துப் பார்க்கின்றோம்.
2.கொஞ்சம் குறை ஏற்பட்டு விட்டது என்றால் உடனே வேதனைப்படுகின்றோம்.

வேதனை என்கின்ற அத்தனையும் விஷம். நம் உடலில் வேதனை கொஞ்சம் கொஞ்சமாக விஷம் அதிகமாகிப் போனதென்றால்  உடல் முழுவதும் நஞ்சாக மாறி நோயாகி விடுகின்றது.

வேதனைப்படக்கூடிய சமாச்சாரங்களைக் கேட்கும் போது எல்லாம் துடைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இரவில் படுக்கப்போகும் போது ஆத்ம சுத்தி செய்து விட்டுப் படுங்கள். காலையில் எழும்போது ஆத்ம சுத்தி செய்து விட்டு உங்களால் உயர்ந்த எண்ணங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

நாம் எண்ண வேண்டியது மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று
1.எங்கள் பார்வையால் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்
2.எங்கள் மூச்சு உலகத்திற்கு நன்மை பயக்கக்கூடிய சக்தியாகப் படரவேண்டும் என்று எண்ணுங்கள்.

அனு தினமும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எல்லாருக்கும்
இந்தச் சக்திகள் கிடைக்க வேண்டும் என்று துருவ மகரிஷியை எண்ணி
துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்தத் தியானம் செய்கின்றேன்.

அப்போது அந்த உணர்வலைகள் வரப்போகும் போது அதிகாலை நான்கு மணி மேலே போனதென்றால் இந்த உபதேசத்தைப் பதிவாக்கிக் கொண்டவர்களைத் தன்னாலயே எழுப்பிக் கொண்டே இருக்கும். கொஞ்சம் அந்த விழிப்பு நிலை வரும்.

சில நேரங்களில் அந்த உணர்ச்சிகள் தென்படும். சில நேரங்களில் நல்ல வாசனைகள் வரும்.

அந்த நேரத்தில் ஒரு செகண்ட் ஆவது…”
1.துருவ மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்
2.எங்கள் உடலில் பெற வேண்டும் என்று நினைத்து விட்டுப் படுத்துக் கொள்ளுங்கள்.

நேரடியாக துருவ நட்சத்திரத்தையோ துருவ மகரிஷியையோ எடுத்துக் கொண்டீர்கள் என்றால் அது தாங்கக் கூடிய சக்தி கிடையாது.
1.அது மிகவும் வீரியமான உணர்வுகள் கொண்டது.
2.அது எடுத்தீர்கள் என்றால் உங்கள் உடலில் சூடாகும்.
3.சில நேரங்களில் பல தொல்லைகள் கொடுக்கும்.

எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணும்போது உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டும் போது
1.அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும்.
3.நாங்கள் பார்ப்பவர் எல்லாம் நலம் பெற வேண்டும்.
4.எங்களைப் பார்க்கின்றவர்களுக்கெல்லாம் நல்ல எண்ணம் வர வேண்டும் என்று
5.ஒரு செகண்ட்டில் அது எண்ணி முடித்துக் கொள்ள வேண்டும்.

அதிகாலையில் 4.30மணிக்கு இது போல எண்ண வேண்டும். அதற்கப்புறம் அந்தச் சப்தரிஷி மண்டலங்களை எண்ணி எண்ணுங்கள். இப்படிச் செய்யும் பொழுது 4.30மணிக்கு ஒரு வழி காட்டியாக உங்களுக்கு அமையும்.

இதைக் கேட்டவர்கள் அத்தனை பேருமே எந்தக் கஷ்டமான வார்த்தைகளைக் கேட்டாலும் பார்த்தாலும் உடனே ஆத்ம சுத்தி செய்துவிட்டு எங்கள் பார்வை நல்லதாக்க வேண்டும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

பத்தாவது நிலையான ஒளி நிலை பெறுவதற்கு இது தான் வழி.