நாம் எந்த நிமிடம் தீமையான நிலைகளைக் கண்டாலும் சரி அல்லது
யாராவது சங்கடமான நிலைகளை நம்மிடம் சொன்னாலும் சரி ஆத்ம சுத்தியை நாம் முறைப்படி எண்ண
வேண்டும்.
“ஈஸ்வரா…” என்று வானை நோக்கி எண்ணுங்கள். தீமையான அலைகள் வருவதை
இப்படி எண்ணி உடனே மறைக்க வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று
நினைவில் கொள்ள வேண்டும்.
“ஈஸ்வரா…” என்று சொல்லி இங்கு மறைக்கச் சொல்வது என்பது என்ன?
மனிதர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளை நமக்கு முன் இருப்பதை
இந்தக் காற்று மண்டலத்திலிருந்து எடுப்பது தான் நாம் சாதாரணமாகச் சுவாசிப்பது.
ஏனென்றால் கடிகாரம் போல இருக்கின்றது. நம் உடல் முழுவதும்
இழுப்பதை இது நெஞ்சுக்கு முன்னாடி குவித்துக் கொடுக்கிறது.
அப்போது
1.ஈஸ்வரா என்று புருவ மத்தியிலிருந்து வானை நோக்கி எண்ணி
2.நாம் நுகர்ந்த தீமையான நிலைகளைத் தடைப்படுத்தி விட்டு
3.மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நமக்குள் இதைக்
கூட்டவேண்டும்.
4.இல்லை என்றால் மற்ற எல்லா உணர்வுகளும் கலந்து வரும்.
ஈஸ்வரா என்ற இந்த உணர்வு வரப்படும் பொழுது அந்தத் தீமைகளை
அமுக்கி விடுகின்றது. (ஈஸ்வரா… ஈஸ்வரா..” என்று சும்மா சொல்ல வேண்டியதில்லை உணர்வுடன்
உங்கள் உயிரான ஈசனிடம் புருவ மத்தியில் எண்ணி வேண்டிச் சுவாசிக்க வேண்டும்)
அந்த மெய் ஒளியின் தன்மையைப் பெறவேண்டும் “ஈஸ்வரா…!” என்று
இதைப் போலச் சொல்லும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்கத்திற்கு வந்து விடுகின்றது.
உங்களுக்குள் அந்த மெய் ஒளியைப் பெறவேண்டும். இருள் சூழ்ந்த
நிலைகள் அனைத்தையும் அடிபணியச் செய்ய வேண்டும்.
உப்பு காரம் மிளகாய் போன்ற உணர்வுகளைத் தனித்துத் தனித்து வேலை செய்யப்படும் பொழுது அதை
எல்லாம் அடக்கி மற்றதுடன் கலக்கச் செய்து சுவையாக ஆக்கி ரசித்துச் சாப்பிடக் கூடிய
தன்மையாகக் கொண்டு வருகின்றோம்.
அதைப் போன்று தான்
1.எத்தனை பேர் எத்தனை சங்கடமான நிலைகளில் இருந்தாலும்
2.அவர்கள் வேதனையாகவோ கோபமாகவோ பேசினாலும் கூட
3.நிச்சயம் அவர்கள் நல்லது செய்ய வேண்டும் நல்லது பெறவேண்டும்
4.என் எண்ணம் அவர்களுக்கு நல்லதைச் செய்யும் என்ற
5.இந்த உணர்வை நாம் ஊட்டிக் கொண்டே வரவேண்டும்.
கடையில்…. “வியாபாரம் இல்லை… வியாபாரம் இல்லை… வியாபாரம் இல்லை…
என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டியதில்லை.
என்னிடம் சரக்கு வாங்குபவர்கள் எல்லாம் நலம் பெறுவார்கள் வளம்
பெறுவார்கள் அவர்களுக்கு மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்கும்,
எங்களிடம் பொருள் வாங்குபவர்கள் குடும்பங்களில் எல்லோரும்
நலம் பெறவேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தாலே போதும். உங்கள் கடை வியாபாரம் நன்றாக
இருக்கும்.
தொழில் செய்கிறார்கள் என்றால் தொழில் செய்பவருக்கு உடல் நலம்
பெற வேண்டும். மன பலம் பெறவேண்டும். அவர்கள் குடும்பம் நலம் பெற வேண்டும்.
அவர்கள் செய்யும் தொழிலில் எந்தப் பொருளை உற்பத்தி செய்கிறார்களோ
அதை வாங்கிப் பயன்படுத்துவோர் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று எண்ணிப் பழகவேண்டும்.
இதைத் தியானிக்க வேண்டும்.
ஆறாவது அறிவின் தன்மை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள்
பேரொளி உணர்வுகளை நுகர்ந்து உயிரில் வலுப் பெறச் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு நிமிடமும் நம்மை இயக்கக்கூடிய பிற தீமையான உணர்வுகளைத்
தடுக்க துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை புருவ மத்தியில் எண்ணித் தடைப்படுத்த
வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வை நம் உடலுக்குள்
செலுத்த வேண்டும்.
மேல் நோக்கிய நிலைகள் கொண்டு அந்த ஞானிகளின் அருள் சக்தியை
எடுத்து உயர்ந்த நிலைகளில் அனைவரும் வளர வேண்டும் என்பதற்காகச் சொல்லுகின்றோம்.