இன்று விஞ்ஞானிகள் ஒலி அலைகளை காந்த அலைகளாக மாற்றி அதனை
ஒலி நாடாவில் காந்த வடிவில் பதிவு செய்கின்றனர். மின் காந்த அலைகளை விரிவுபடுத்தி ஒலி
அலைகளாக வெளிப்படுத்துகின்றான்.
அதே போன்றுதான்
நமது உயிர்
1.காந்தப் புலனை ஈர்க்கக் கூடிய நிலையும்
2.காந்தப் புலனை உருவாக்கக் கூடிய நிலையும்
3.காந்தப் புலனை தனக்குள் பெருக்கும் நிலையும் தன்னகத்தே
கொண்டிருக்கிறது.
4.ஆகவே, அதற்கு ஈசன் என்று பெயரிட்டனர் ஞானிகள்.
காருக்குள் “இஞ்சின் இயக்கம்”எப்படி முக்கியமோ… அவ்வளவு முக்கியம் நம் உடலுக்குள் “உயிரின் இயக்கம்”.
பரிணாம வளர்ச்சியில் நாம் வளரும் பருவத்தையும் நமக்குள்
வளர்க்கும் நிலையையும் அறிந்து கொள்வதற்காக மெய்ஞானிகள் உயிருக்கு “ஈசன்”என்று பெயரிடுகின்றார்கள்.
“உருவாக்கும் திறன்”நமக்குள் இயங்கிக் கொண்டே உள்ளது.
ஒரு மோட்டாருடன் இணைக்கப்பட்ட இயந்திரங்கள் எதன் பணிக்காக
அமைக்கப்பட்டுள்ளதோ அதனதன் பணிகளை அது அது செய்கின்றன.
அது போன்றுதான் உலகின் இயற்கையின் தன்மைகள் எது எது அதனுடன்
இணைகின்றதோ அந்த உணர்வின் செயலாக அது அது இயங்குகின்றது என்பதை மெய்ஞானிகள் அறிந்திருந்தனர்.
உயிரான ஈசனின் துடிப்பால் வெப்பம் ஏற்படுகின்றது. நெருப்பின்
மீது பாத்திரத்தை வைத்து அதனுள் நீரை ஊற்றி மேலும் அதனுள் எப்பொருள்களைப் போடுகின்றோமோ
அப்பொருள்கள் அனைத்தும் நெருப்பின் வெப்பத்தால் ஒன்றோடு ஒன்று இணைந்து புதுப் பொருளாகக்
குழம்பாக மாறுகின்றது.
அது போன்று உயிரின் துடிப்பால் ஏற்படும் வெப்பத்தின் காரணமாக
ஈர்க்கும் சக்தி அங்கே உருவாகின்றது.
நமது எலும்புகள் அனைத்தும் மேக்னட் (காந்தம்) தன்மை கொண்டது, அதாவது ஒலி அலைகளை காந்தப் புலன்களாக மாற்றி ஒலி
நாடாவில் பதிவு செய்வதைப் போன்றது.
உயிரின் துடிப்பால் இயக்கப்படும் பொழுது அது காந்தப் புலனை
இயக்க அதனின் தொடர் வரிசையில் அது இயக்குகின்றது.
இந்த உணர்வின் தன்மை நமக்குள் இயக்கப்படும் பொழுது உயிரின்
இயக்கத்தால் எதனின் உணர்வின் தன்மையை நாம் பார்க்கின்றோமோ கண்களில் உள்ள காந்தப் புலன்
அதைக் கவர்கின்றது.
ஆனால் அதே சமயத்தில் கண்ணுக்குள் இருக்கக் கூடிய கருவிழி
மற்றொன்றைப் படமெடுக்கின்றது. அது நமது எலும்புக்குள் “ஊனாக” உருவாகின்றது. அதைப் பதிவு செய்து கொள்கின்றது. அந்த உணர்வின்
தன்மையைத் தனது ஆன்மாவாக மாற்றிக் கொள்கின்றது.
இவ்வாறு ஆன்மாவாக மாறியது எப்படி ஒலி நாடாவில் நாம் பதிவு
செய்து கொள்கின்றோமோ அந்தப் பதிவின் அலைகள்
வரிசையில் வரும்.
1.பின் நம் உயிரின் காந்தப் புலன் சுவாசத்தால் அதைக் கவர்கின்றது.
2.இந்த உணர்வின் அலைகளை இயக்குகின்றது.
3.உடல் முழுவதும் இந்த அலைகளைப் பரப்புகின்றது.
4.அதில் ஏற்படும் காந்தத்தை உணர்வின் சத்தை உடலாக்குகின்றது.
5.மற்ற கழிவைக் காற்றாக வெளிப்படுத்துகின்றது.
ஒரு மின் விசிறி சுழல்கிறதென்றால் அது தன் சுழற்சியின்
போது பின் புறத்தில் இருந்து காற்றை இழுத்து முன் புறமாகத் தள்ளுகின்றது. அது போன்றுதான்
இந்த உணர்வின் தன்மையை வடிகட்டி உணர்வின் ஆத்மாவாக மாற்றுகின்றது.
அதனுடைய நிலைகளை காற்றலைகளைத் தான் நாம் “மூச்சலைகள்”
(ஆன்மா) என்று சொல்கின்றோம்.
இவைகளெல்லாம் அன்று மெய்ஞானிகளால் கண்டுணரப்பட்ட பேருண்மைகள்.