நாம் சாதாரண மனிதர்களிடத்தில் தொடர்பு கொண்டு பேசுகின்றோம்
சண்டை போட்டுக் கொள்கின்றோம், அல்லது சந்தோசமாக இருக்கின்றோம்.
ஏதாவது ஒன்றை நினைவுபடுத்தியவுடன் அந்த எண்ணங்கள் நமக்குள்
தோன்றி அவர் பேசிய எண்ணங்கள் ஆத்திரமோ, கோபமோ, பயமோ, இதைப் போன்ற நிலைகளில் நாம் தொடர்ந்து
அதைப் பேச ஆரம்பித்துவிடுகின்றோம்.
இவைகள் எல்லாம் ஒரு மனிதனுக்குள் பதிவு செய்து கொண்ட இந்த
நினைவலைகள் நாம் சண்டை போடும் பொழுதும் பேசும் பொழுதும் இந்த உணர்வுகள் ஒவ்வொருவருக்குள்ளும்
பதிவாகி விடுகின்றது.
அப்படிப் பதிவான உணர்வுகளை மீண்டும் நினைவுபடுத்தும் பொழுது
உதாரணமாக நாம் பாசமுடன் இருந்து நினைவுபடுத்தினால் பாசமான உணர்வை நாம் சுவாசித்துப்
பாசத்திற்குத் தக்கவாறு அன்றைய செயல் பேச்சு இருக்கும்.
அதே சமயத்தில் ஒருவருடன் கோப நிலைகளில் பேசி இருந்தால்
அந்தக் கோபத்தில் அவருடை பேரைச் சொல்லி (அவர் நமக்கு இடைஞ்சல் செய்திருப்பார்)
1.அவரை நினைவுபடுத்தியவுடன் சண்டை போட்ட உணர்ச்சியின் உணவுகள்
தூண்டப்பட்டு
2.அவரின் உணர்வைச் சுவாசித்து
3.ஆத்திரத்துடன் நாம் பதில் சொல்ல ஆரம்பிப்போம்.
அதே சமயம் அதே உணர்வுகளை நாம் வியாபாரத்தில் உட்கார்ந்திருக்கும்போது
நினைவுபடுத்தினால் சரியான பதில் கொடுக்க மாட்டோம்.
ஏனென்றால் நமக்குள் வெறுப்பான எண்ணங்களைத் தோற்றுவித்தவருடைய
உணர்வுகளைச் சுவாசிக்கும்போது இந்த உணர்வின் எண்ணம் “நமக்கு முன்னால்…” நிற்கின்றது.
அதாவது நாம் எதை எண்ணுகிறோமோ அந்த உணர்வின் அலைகள் நம்
உடலைச்சுற்றி கவசமாக இருக்கும்.
1.அதுதான் முன்னாடி இருந்து நம்மை சுவாசிக்கச் செய்து
2.எந்த குணத்தில் இருந்தோமோ அந்த குணத்தைப் பாதுகாக்க
3.அதன்வழி ஞானத்தைக் கொடுக்கும்.
இப்பொழுது கோபமான நிலைகளில் நாம் பேசினால் அந்தக் கோபத்திற்குத்
தகுந்தவாறு இப்படிச் செய்ததனால்தான் நாம் இப்படிச் செய்தோம் என்ற அந்த உணர்வு தன்னைப்
பாதுகாத்துக் கொள்ளக்கூடிய உணர்வின் ஞானத்தைப் பேசும்.
இதைபோன்றுதான் நம் உடலில் எந்தெந்த குணங்கள் இருந்தாலும்
அதை நாம் நினைவுபடுத்தும்போது இந்த உணர்வுகள் ஆற்றல் பெற்று உடனே சுவாசித்து அது செயல்படுத்துகின்றது.
பல நிலைகள் நாம் தவறு செய்யாமலே உருவாகின்றன.
நாம் தவறு செய்யவில்லை. நாம் வயிறு நிறைய சாப்பிட்டுக்
கொண்டிருக்கும்போது பிறர் நம்முடன் சண்டை போட்டதன் நினைவுகளை நாம் கொண்டுவந்தவுடன் அன்று நமக்கு அஜீரணமாகின்றது
அல்லது சாப்பிட்ட ஆகாரத்தை சரியாகச் செயல்படுத்துவதில்லை.
ஏனென்றால் நம் உடலில் “அனைத்து குணங்களின் செல்கள்” பதிவாகியிருக்கின்றது.
நாம் எந்த குணத்தைச் செயல்படுத்துகின்றோமோ அந்த உணர்வான
செல்கள் அனைத்துமே ஒருங்கிணைந்து இயக்கப்படும்போது அதற்குத் தக்கவாறுதான்
1.நம் நரம்பு இயங்குவதும்
2.நம் சுவாசம் இயங்குவதும்,
3.குடல் இயங்குவதும்
4.நம் எண்ணங்கள் பேசுவதும் எல்லாமே.
கோபமாகப் பேசுபவரைப் பார்த்தால் உச்சிமுடி நட்டமாக எழுந்து
நிற்கும்.
பயம் கலந்த ஒரு கோபத்தை உண்டாக்கப்படும்போதும் சில்லென்ற
நிலை ஏற்படும்படி எதிர்பாராத ஒரு பயத்தை உண்டாக்கினாலும் நம் தலைமுடி “கிர்..ர்ர்..”
என்று மேலே எழுந்துவிடும்.
இவையெல்லாம் இந்த
உணர்வின் செல்கள் இயங்குவதனால்தான். நாமல்ல…! நாம் இதைத் தடுத்து
நிறுத்த முடியாது.
இப்படித்தான் இயற்கையிலேயே நம்மை அறியாமலேயே, பல நிகழ்ச்சிகள்
நடந்து கொண்டிருக்கின்றன. இதை நாம் அறிந்துணர்ந்து நம் உடலில் வரக்கூடிய பிணிகளைப்
போக்க வேண்டும்.
அதற்கு என்ன செய்வது…? அதற்குத்தான் இப்பொழுது தியானத்தின் நிலைகளை யாம் உங்களுக்கு
உணர்த்துகின்றோம்.
மெய்ஞானிகள் அவர்கள் விண்ணுலக சக்தியைப் பெற்று அவர்கள் உடலிலே அதை ஆற்றல்மிக்கதாக வளர்த்து அவர்கள் உயிருடன்
வாழ்ந்த காலங்களில் அவர்கள் உடலில் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற்று தன்னையறியாமல் ஆட்டிப்படைக்கும்
உணர்வுகளை அவர்கள் அடக்கினர்.
நமக்கு கோபம் வருகிறதென்றால் நம்மையறியாமல் “துடிப்போம்”
ஆனால் ஞானிகள் மத்தியில் அந்த உணர்வுகள் சென்றதென்றால்
1.அது அவர்களுக்குள் “அடங்கி…,”
2.அதற்குண்டான ஞானத்தை ஊட்டி
3.எந்தச் செயல் வேண்டுமோ அந்தச் செயலுக்குண்டான “வலுவை…” ஊட்டும்.
அந்த மெய்ஞானிகளின் ஆற்றல்மிக்க சக்திகளை நாமும் தியானத்தின்
மூலமாகப் பெற்று நமக்குள் வரும் அனைத்துத் துன்பங்களிலிருந்து மீள்வோம். மற்றவர்களையும்
மீட்டிடுவோம்.