தீமை தரக்கூடியவைகளாக இருந்தாலும் மனிதன்
அவைகளை தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்கின்றான்.
அதே போன்று தீமை செய்வோரின் உணர்வுகள்
நமது உணர்வில் கலந்துவிட்டால் அந்த தீமையை விளைவிக்கும் உணர்வுகளை நமக்குள் விளையாது
தடுத்துச் சமப்படுத்திடல் வேண்டும்.
உதாரணமாக உடலுக்கு ஆரோக்கியம் தரும் நல்ல
மருந்துடன் சிறிது விஷத்தைக் கலக்கப்படும் பொழுது அது நல்ல மருந்திற்கு ஊட்டச் சக்தியாக
மாறுகின்றது.
எந்த மருந்தைச் சிறிது விஷத்துடன் கலந்து
கொடுக்கின்றோமோ அந்த விஷம் ஊடுருவி இந்த நல்ல மருந்தின் தன்மையை உடலெங்கும் பரவச் செய்கின்றது.
நோய்வாய்ப்பட்ட மனிதனின் உடலில் மருந்தினைச்
செலுத்தும் பொழுது
1.மருந்துடன் கலந்துள்ள விஷம் மருந்தினை
எடுத்துச் சென்று
2.உடலில் உள்ள வேதனையை உருவாக்கும் உணர்வின்
அணுக்களை உணவாக உட்கொண்டு
3.தன் இனத்தை உருவாக்கும் தன்மையால் நல்ல
மருந்தின் தன்மை அடர்த்தியாகி
4.வேதனையை உருவாக்கும் அணுக்களை வளரவிடாமல்
தடுக்கச் செய்கின்றது,
இதைப் போன்று ஞானிகள் காண்பித்த வழியில்
அருள்
1.ஞானிகளின் உணர்வை நம் எண்ணத்துடன் கலந்து
2.நாம் எத்தகைய தீமையின் உணர்வினைக் கண்டுணர்ந்தோமோ
அதற்குள்
3.அந்த மகரிஷியின் ஆற்றல்மிக்க சக்தி பெறவேண்டும்
என இணைத்து நம் உடலுக்குள் செலுத்திவிட்டால்
4.அருள்ஞானியின் உணர்வுகள் இந்த விஷமான
நிலையை ஒடுக்கிவிட்டு
5.நமக்குள் வலுகொண்ட நிலையாக மாறுகின்றது.
ஏனென்றால் மகரிஷிகள் தம்மிடத்தில் தீமையின்
உணர்வுகள் வந்து மோதும் பொழுது அவைகளைச் செயலற்றதாக்கி தம்மிடத்தில் தீமையின் உணர்வினை
ஒடுக்கி அதனுடைய செயலாக்கங்களை மாற்றித் தமது உணர்வினை வலிமை மிக்கதாக மாற்றுகின்றனர்.
அதே போன்று தீமையின் உணர்வுகளை நமக்குள்
ஒடுக்குகின்ற பொழுது ஒருவன்... “நமக்கு எத்தகைய தீமைகளைச் செய்து கொண்டிருந்தாலும்”
அது நம் உடலுக்குள் தீமை விளைவிக்கும் அணுக்களை உருவாக்குவதில்லை.
அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நம்
உடலில் கலக்கப்படும் பொழுது
1.நம் உடலில் தீமையை உருவாக்கும் அணுக்கள்
விளைந்திருப்பினும்
2.அவைகளை “நமக்குள் நன்மை பயக்கும் அணுக்களாக”
மாற்றுகின்றன.