ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 18, 2017

ஒரு சொல்லைக் கேட்டவுடனேயே சிலர் “(TENSION) உணர்ச்சிவசப்பட்டு விடுவார்கள்” – உணர்ச்சிவசப்படுவதைத் தடுக்கும் வழி

இப்பொழுது நாம் நல்லவர்களாக இருக்கிறோம். ஒருவர் சிறு குற்றமான செயலைச் செய்கிறார். ஆனால் நம் மீது அந்தப் பழிச் சொல்லைச் சொல்கிறார்.

அந்தச் சொல் வெறும் வார்த்தைதான். அதைச் சொன்னவுடன் என்ன ஆகின்றது?

1.அந்த உணர்ச்சிகள் தூண்டப்பட்டு நமக்குள் அடக்கமுடியவில்லை.
2.இவ்வாறு சொல்கிறானே! என்று பதட்டமும்
3.பயங்கரமான விளைவுகளும் ஏற்பட்டுவிடும்.

ஏனென்றால் அவர் செய்த உணர்வுகள் நமக்குள் இயக்கி தவறு செய்யும் நிலைகளுக்கு எங்கிருந்து அந்தத் தவறு வந்ததோ அவர்களை அழிப்பதற்கு வருகின்றது.

இல்லாததைச் சொல்கிறான்…” என்ற உணர்ச்சியின் வேகம் தூண்டுகின்றது. ஏனென்றால் அதை ஜீரணிக்கக்கூடிய சக்தி நம்மிடத்திலே இல்லை.

ஆனால் மெய்ஞானிகள் விண்ணின் ஆற்றல் மிக்க சக்தியைத் தனக்குள் எடுத்துக் கொண்டதனால்
1.அவர்களுடைய புலனறிவுகளில் எது சிக்கினாலும்
2.அவர்களுடைய உணர்ச்சிகளைத் தூண்டுவதில்லை.

எத்தகைய குணங்கள் கொண்டு பிறர் செய்தாலும் அந்த உணர்ச்சிகள் தூண்டாவண்ணம் அவர்களுக்குள் வந்தவுடன் அடங்கி அவர்களது ஆற்றல் மிக்க சக்திகள்
1.இவருடைய பார்வையில் பட்டவுடன்
2.அவர்களுக்குள் இருக்கக்கூடிய கெட்ட குணங்கள் அப்படியே அடங்கிவிடும்.

அதே சமயம் நாம் கோபப்பட்ட உணர்வுகள் உமிழ்நீராகச் சுரந்து நம் ஆகாரத்துடன் கலந்து விடுகின்றது.

ஆகாரத்துடன் கலந்தவுடன் அது நம் உடலில் சத்தான ஆகாரத்தை ஜீரணிக்கக்கூடிய சக்தியிழந்து அதனுடைய செயல்களைச் செயலாக்கத் தொடங்கி விடுகின்றது.

அது இரத்தமாக மாறி கோபத்தைத் தூண்டும் ஜீவ அணுக்களாக நம் தசைகளாக மாறிவிடுகின்றது. அதை மாற்றவில்லை என்றால் இரத்தக் கொதிப்பாக மாறி நம் அங்கங்களைச் செயலற்றதாக்கிவிடும்.

அதை நாம் எப்படி மாற்றுவது?

மெய்ஞானிகள் அவர்கள் வாழ்க்கையில் வந்த பெரும் தொல்லைகளை நீக்க
1.விண்ணின் ஆற்றல்களை அவர்கள் பெற்று
2.அவர்கள் உடலிலே வந்த தீமைகளையெல்லாம் மாற்றி
3.உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்றனர்.

அவர்கள் எதை எதையெல்லாம் அவர்கள் மூச்சாலும் பேச்சாலும் சொல்லாலும் அவர்கள் வெளிப்படுத்தினார்களோ அந்த அலைகள் நம் பூமியில் படர்ந்து கொண்டிருக்கின்றது.

அவையெல்லாம் சீக்கிரம் அழிவதில்லை.

நம்மைப்  போன்ற சாதாரண மனிதர்கள் பேசியதெல்லாம் ஆற்றல் மிக்க உணர்வின்  சக்தி கொண்ட வெப்ப காந்தங்கள் தாக்கியவுடன் அது அழித்துவிடும்.

அந்த உணர்வுகள் இந்த உணர்வுடன் அதை ஈர்த்துக் கொண்டு மற்ற உணர்வுகள் காரத்துடன் காரம் சேர்த்துக் காரமாக உருப்பெற்று மற்றவர்களைத் தாக்கும் உணர்வாகச் சென்றுவிடும்.

ஆனால் மெய்ஞானியின் சக்திவாய்ந்த உணர்வலைகள் புவிக்குள் வருவதை மற்ற சாதாரணமான நிலைகளால் அதைச் செயலிழக்கச் செய்யமுடியாது.

ஆகையினால் அந்த ஞானிகளுடைய சக்தியை மனிதன் சாதாரணமாக எடுக்கமுடியாது.

1.வரும் தீமைகள நீக்கிட ஆத்ம சுத்தி செய்வதற்கு
2.‘’ஓம் ஈஸ்வரா…” என்று உயிருடன் தொடர்பு கொண்டு
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கும்போது
4.நீங்கள் “நினைத்தவுடன்…” அந்த அருள் சக்தியைப் பெறமுடியும் என்று யாம் உங்களுக்கு உறுதியாகச் சொல்கின்றோம்.

அதை எடுத்து உங்களுக்குள் உணர்ச்சியைத் தூண்டும் நிலைகளைச் சமப்படுத்த முடியும். சிந்தித்துச் செயல்பட முடியும். இரத்தக் கொதிப்பு வராதபடி தடுத்துக் கொள்ள முடியும்.

காரணம் அவர்கள் எடுத்துக்கொண்ட ஆற்றல் எவ்வழிகளில் பெற்றார்களோ அதை அவருடைய நிலைகளை உபதேசித்து உங்கள் உணர்வலைகளுக்குள் பதியச் செய்யும்போது இந்த உணர்வுகள் உங்களுக்குள் வித்தாக மாறுகின்றது.

அந்த வித்திற்கு நீங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து ஊட்டினால்தான் அந்தச் சக்தி கூடும்.

ம் ஈஸ்வரா…” என்று உயிருடன் தொடர்பு கொண்டு புருவ மத்தியில் நினைவுபடுத்தி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று எண்ணி
1.உடலுக்குள் எல்லா அணுக்களிலும் செலுத்தமுடியும்.
2.எல்லா அணுக்களிலும் செலுத்தி சர்வ தீமைகளையும் நீக்கி
3.உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி மகிழ்ந்து வாழ முடியும்
4.பிறவியில்லா நிலை என்ற அழியா ஒளிச் சரீரம் நாம் அனைவரும் பெற முடியும்.