ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 6, 2017

விஞ்ஞான அறிவு எதையும் கருவி மூலமாகத்தான் SCAN X-RAY TELESCOPE காணுகின்றது – மெய்ஞானிகளோ தன் எண்ணத்தால் “ஊடுருவிப் பாய்ச்சி” அனைத்தையும் கண்டுணர்ந்தார்கள்

ஒரு நூலாம்படைப் பூச்சி தனக்குள் உணவாக உட்கொண்டபின் தன் மலத்தை வலையாக விரிக்கின்றது. அந்த வலைக்குள் சிக்குவதை உணவாக உட்கொள்கின்றது.

வலைக்குள் சிக்கும் ஒரு ஈயிற்குள் தன் கூர்மையான மூக்கால் ஊடுருவித் தன் உணர்வைப் பாய்ச்சி அதற்குள் இருக்கும் நீர் சத்தை அனைத்தையும் குடித்து வாழ்கின்றது.

தன் மலத்தால் மீண்டும் காற்றுப் புகாமல் அந்த ஈயினைச் சுழற்றிவிட்டு தனக்குள் உருவான கருவை அந்த ஈயிற்குள் பாய்ச்சியபின் ஈயிற்குள் இருக்கக்கூடிய அணுக்களை இது எப்படி உருவாகியதோ அந்த உணர்வின் தன்மை பெற்ற பின் பல நூலாம்படைப் பூச்சிகளாக உருவாக்குகின்றது.

அதைப் போன்று குளவியை எடுத்துக் கொண்டால் தனக்குள் ஊறும் உமிழ் நீரைக் கொண்டு மண்ணைப் பிசைகின்றது. கூடு கட்டுகின்றது. கூடு கட்டிய பின் ஒரு புழுவைத் தூக்கிக் கொண்டு வருகின்றது.

தூக்குவதற்கு முன் அதை ஒரு கொட்டு கொட்டிவிடுகின்றது. குளவியைப் புழு கண் கொண்டு உற்றுப் பார்க்கின்றது. கட்டிய மண் கூட்டிற்குள் அந்தப் புழுவைத் தள்ளுகின்றது.

தள்ளிய பின் மீண்டும் இரண்டு தரம் புழுவைக் கொட்டுகின்றது. புழு மயக்கமடைகின்றது. குளவியையே அந்தப் புழு நினைவுக்குக் கொண்டு வருகின்றது.

அந்தக் குளவியின் உடலில் உருவான உமிழ் நீரைக் கொண்டுதான் அந்தக் கூட்டைக் கட்டுகின்றது. புழுவின் உடலுக்குள் தன் விஷத்தின் தன்மையைப் பாய்ச்சுகின்றது.

புழுவைக் கூட்டிற்குள் செலுத்தியபின் மண்ணைக் கொண்டு மூடிவிடுகின்றது. மூடிய பின்பு கூட்டிற்கு மேலே வந்து குளவி “கிர்..ர்ர்..ர்ர்..” என்று இரைச்சல் கொடுக்கின்றது.

இந்த உணர்வின் அதிர்வுகள் புழுவிற்குள் இருக்கும் அணுக்களில் இது கலக்கின்றது. ஆனால் இந்த விஷமோ புழுவின் தோலைச் சருகு போல் ஆக்கிவிடுகின்றது.

புழுவின் தசைகள் அமிலங்களாக மாறுகின்றது. அந்த அமிலங்களுக்குள் குளவி கொட்டிய விஷத் தன்மைகள் அணுத் தன்மை கருவாக உருவாக்கும் நிலை அடைகின்றது.

அதற்குள் இருக்கும் விஷத்தைப் புழுவின் உயிரால் துடிப்பாகப்படும் பொழுது இதற்குத் தக்கவாறு அதனின் உடலின் அமைப்புகள் மாறுகின்றது.

குளவி கூடு கட்டியதையும் புழுவைத் தூக்கிக் கொண்டு வைத்ததையும் பின் கடைசியில் புழு குளவியாக மாறி வெளி வருவதையும் பார்ப்பதற்காக இப்பொழுது விஞ்ஞான அறிவு கொண்டு நுண்ணிய கேமராக்களிலும் சக்தி வாய்ந்த ஸ்கேன் வைத்துப் பார்ப்பது போல் இந்த உணர்வை உள்ளுக்குள் செலுத்தி அது எப்படி உருமாறுகின்றது என்று சாப்பாடு கூட இல்லாமல் குருநாதர் எம்மைப் பார்க்கச் செய்தார்.

அதை உங்களிடம் இப்பொழுது இலேசாகச் சொல்கிறோம்.

இதைப் போன்றே விஞ்ஞான அறிவு கொண்டு இன்று எறும்புப் புற்றுக்குள்ளும் கரையான் புற்றுக்குள்ளும் அது எப்படி உருவாகின்றது என்று கண்டு கொள்கின்றனர்.

1.அன்று மெய்ஞானி தன் எண்ணத்தை வைத்து
2.அதை ஊடுருவிப் பாய்ச்சினான்.
3.அந்த உணர்வின் இயக்கத்தை அறிந்தான்.

யார்…? அகஸ்தியன்.

அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வு தான் அவனுக்குள் விளைந்த உணர்வுகள் பூமியில் பரவப்படும் பொழுது அந்த உணர்வுகளை நுகர்ந்தால் அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்கும்.

நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் கருவாகும். உணர்வின் தன்மையை வலுவாக்கும். அதன் உணர்வு கொண்டு நம்மை ஆள்வது நம் உயிர்.

அந்த அகஸ்தியமாமகரிஷி கண்டுணர்ந்த இயற்கையின் பேருண்மைகளை
1.வான இயல் புவி இயல் உயிரியல் அடிப்படையில்
2.அணுவின் ஆற்றலையும் பேரண்டத்தின் இயக்கங்களையும்
3.நீங்களும் கண்டுணர வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.

உங்களை நீங்கள் நம்புங்கள்.