ஒரு கம்ப்யூட்டரை எடுத்துக்
கொண்டால் எலெக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையில்
1.ஒலியின் அதிர்வுகளுக்கொப்ப
இயந்திரங்களை இயக்குவதைப் போன்று
2.சொல்லின் வலிமையும் மனிதனை
இயக்குகின்றது.
இன்று விஞ்ஞானம் கம்ப்யூட்டரில்
கையால் பட்டனைத் தட்டி எலெக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையில் ஒலி அதிர்வுகளைக் கொடுத்துச்
செயல்படுவதைக் காட்டிலும் சொல்லால் இந்த உணர்வின் உணர்ச்சிகளைத் தூண்டி கம்ப்யூட்டரை
இயக்கும் நிலை இப்பொழுது உருவாக்கிக் கொண்டுள்ளது.
யாம் இப்பொழுது சொல்வதை
(1997) சிறிது காலத்தில் நீங்கள் காணலாம்.
அவன் அறிவின் தெளிவை இயந்திரத்தில்
பதிவு செய்கின்றான். அதன் பதிவின் தன்மை கொண்டு
1.ஒரு சொல்லின் தன்மையை
ஒரு “கேசட்டில்” பதிவாக்கிப் போட்டுவிட்டால்
2.அந்த உணர்வின் அலைகள்
ஒரு இயந்திரத்தை இயக்கவும்
3.ஒரு தொழிலை நிர்வகிக்கவும்
வருகின்றது.
இதற்கு ஆதாரபூர்வமாக ரோபட்
(ROBOT) என்ற நிலைகளில் ஒரு இயந்திரத்தை உருவாக்கி அதற்குண்டான கட்டளைகளைக் கேசட்டில்
பதிவு செய்து ரோபட்டில் இணைத்துவிடுகின்றார்கள்.
அதனின் ஒலி அதிர்வுகளின்
துணை கொண்டு ரோபட்டை இயக்கி மனிதனைப் போன்றே செயலாக்கும் தன்மைக்கேற்ப மனித உருக் கொடுத்து
இன்று விஞ்ஞானிகள் இயந்திரத்தை உருவாக்கும் நிலை உள்ளது.
1.அதாவது ஒலிகளின் உணர்வுகளை
எழுப்பி
2.வீட்டு வேலைகளையும் மற்ற
நிலைகளையும் செயல்படுத்தும் தன்மை இன்று உருவாகியுள்ளது.
இப்படி எலெக்ட்ரிக், எலக்ட்ரானிக்
என்ற நிலையில் உணர்வின் அதிர்வுகளை வைத்து ஒரு இயந்திரத்தை இயக்கும் தன்மையில் விஞ்ஞானம்
இன்று முன்னேறிவிட்டது.
இதைப் போன்றுதான் இராமன்
அம்பை எய்தான் என்றால் கணைகளைத் திரும்பி வாங்கிக் கொள்வான் என்று காவியங்களில் உரைத்திருப்பார்கள்.
அதாவது தன்னுடைய சொல்லின் தன்மை கொண்டு இனிமை கலந்த நிலைகளில் தன்னுடன் இயங்கி செயலாக்கும்
தன்மைகள் கொண்டது.
ஒருவன் நம்மை வேதனைப்படும்படி
சொன்னால் நாம் அதை உற்று நோக்கி அழுத்தமாகக் கேட்போம். ஆனால் அந்த அழுத்த உணர்வுகள்
நமது நல்ல குணங்களில் பதிவாகிவிட்டால் அந்தப் பதிந்த உணர்வுகள் நமது நல்ல குணங்களைச்
செயலற்றதாக மாற்றிவிடுகின்றது.
அவ்வாறு மாற்றி அவன் எப்படி
நமக்குக் கொடூரமான தீமைகளைச் செய்தானோ அதை எண்ணி “இரு நான் பார்க்கிறேன்…, அவனை விடுவேனா”
என்று பதில் சொற்களைச் சொல்லப்படும் பொழுது இந்த உணர்வுகள் நமது நல்ல குணத்தை மாற்றி
விடுகின்றது.
ஆகவே, நமக்கு இருளில் இருக்கும்
பொருள் தெரிவதில்லை. ஆனால், வெளிச்சத்தில் இந்தெந்தப் பொருள் இருக்கிறது என்று அறிகின்றோம்.
இது போன்று நமக்குள் அறிவின்
உணர்வின் உணர்ச்சியைத் தூண்டி ஒன்றை அறியச் செய்யும் ஆற்றல் நமது ஆறாவது அறிவிற்கு
உண்டு. “கார்த்திகேயா” என்ற நிலை நமது உடலில்
இருந்து வரக்கூடிய மணத்திற்கு இருக்கின்றது.
அது என்ன செய்கின்றது?
நமக்கு ஒன்றை இது நன்மை
இது தீமை என்ற நிலைகளை அறியச் செய்கின்றது. “கார்த்திகேயா”
என்று அறிந்து உணர்ந்து தீமைகள் புகாத நிலைகள் கொண்டு நாம் தடுக்கும் நிலை வரப்படும்
பொழுது “சேனாதிபதி” என்றும் இந்த உடலைப் பாதுகாக்கும்
சக்தி பெற்றது என்றும் ஆறாவது அறிவைத் தெளிவாகக் கூறுகின்றனர்.
கார்த்திகைத் திருநாள்
அன்று “திருவண்ணாமலை”என்று உயிரின் நிலையைக்
காட்டப்படும் பொழுது நாம் அறிவின் தன்மையாக ஒளியின் சுடரைத் தெரிந்து கொள்ள வேண்டும்
என்பதற்குத் தான் நமக்குக் கார்த்திகை தீபத்தை ஏற்றி வைத்துக் காண்பித்தார்கள்.
நமது உயிரின் ஒளியலைகள்
பிரகாசிக்கப்படும் உணர்வின் தன்மை ஒளியாக இருக்கின்றது.
திருவண்ணாமலை என்னும் பொழுது
1.இந்த உடலான “திரு”வுக்குள்
உயர்ந்த நிலைகள் கொண்டு
2.உயிர் ஒளியாக நின்று
இயக்கும் இடம் என்று காண்பிக்கப்படுகின்றது.
3.நமக்குள் உள்ள உயிரின்
ஒளியின் உணர்வின் தன்மையைப் பரப்பி
3.இருளை நீக்கி மெய்ப்பொருளைக்
காணும் உணர்வின் எண்ணங்களைத்
4.தனக்குள் கொண்டு வரவேண்டும்
என்பதுதான் ஞானிகள் காண்பித்தது.
நாம் நமது நண்பர்களிடத்திலோ
மற்றவர்களிடத்திலோ பகைமை கொண்டிருந்தால் பகைமை மறைய வேண்டும்.
1.அனைவரும் துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளி பெறவேண்டும்.
2.அனைவரும் பொருள் காணும் நிலை பெறவேண்டும்,
3.எங்களுக்குள் அறியாது
சேர்ந்த இருள் நீங்கவேண்டும்,
4.எங்களுக்குள் மகரிஷிகளின்
அருள் ஒளி பெருக வேண்டும்
5.எங்கள் சொல்லைக் கேட்போரின்
உணர்வுகளில் இருள் நீங்க வேண்டும்,
6.மெய்ப் பொருளின் தன்மை
நாங்கள் பெறவேண்டும் என்று
7.இதன் வழி தொடர்கொண்டு
இந்த ஜோதிச் சுடரை ஏற்றவேண்டும்.
அவ்வாறு எண்ணினால் அது
கார்த்திகேயா என்று ஆறாவது அறிவின் தன்மையாகச் சேனாதிபதி என்ற நிலைகளில் நமது அறிவு
நம்மைப் பாதுகாப்பான நிலைகளில் இயக்கும்.