ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 17, 2017

கணவன் மனைவி ஒன்று சேர்ந்து மெய் ஒளியினை ஒருவருக்கொருவர் பெறவேண்டும் என்று எண்ணினால் “சப்தரிஷி” – படைக்கும் சக்தியாகும் பொழுது “சப்தரிஷி மண்டலம்”

அன்று சாவித்திரி கதைகளைக் காட்டியுள்ளார்கள்.

கணவனை எமனிடமிருந்து மீட்டினாள். கணவன் மனைவி இருவரும் மெய் ஒளியினைக் காணவேண்டும் என்ற ஆற்றல்மிக்க சக்திகளை எடுத்துக் கொண்ட பின் இதே உணர்வுடன் உடலை விட்டுச் சென்றால் இரு உடலுக்குள் எவர் முந்தினாலும் அவர் உடலுக்குள் சென்றுவிடுகின்றது.

ஆனால் அதே உணர்வின் தன்மை உணர்ச்சியை அங்கே உந்தி அந்த மெய் ஒளியின் மிக மிக ஆற்றல்மிக்க சக்தியாகத் தன் கருவின் தன்மை உண்டாக்குகின்றது.

கணவன் மனைவி இறந்த பின் அந்த உடலுக்குள் போனால் ஒளி பெறும் உணர்வின் தன்மையை அந்த விண்ணின் நினைவலைகளையே தான் ஊட்டும்.

ஆனால் ஆசையின் நிலைகளில் தாங்க முடியாது வீட்டில் விரக்தி கொண்டு தற்கொலை செய்து இறந்த ஒரு ஆன்மா அதே போல எண்ண ஏக்க அலைகள் கொண்ட இன்னொரு உடலுக்குள் சென்றுவிட்டால்
1.அந்தக் குடும்பத்திற்குள் கலக்கமும் வேதனையும் ஆகின்றது.
2.துன்ப நிலைகளுக்கு இழுத்துச் செல்கின்றது.

அதே போல் இன்னொரு உடலின் தன்மை பெறாதவண்ணம் தடுத்து நிறுத்தி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி நாம் என்றும் நிலையான ஒருநிலையான ஒருக்கிணைந்த ஒரு சரீரமாக பெறும் நிலையைத்தான் சாவித்திரி எமனிடமிருந்து தன் கணவனை மீட்டினாள் என்று காவியங்களில் உணர்த்தப்பட்டது.

ஆனால் சாவித்திரி மட்டும் கணவனை மனைவி ஏங்கியே தான் இருக்க வேண்டும் என்று ஒரு தலைப்பட்சமாக எழுதப்பட்டதாக மாற்றிவிட்டார்கள்.

கணவன் மனைவி இருவரும் மெய் ஒளியை இரண்டறக் கலந்து அந்த உணர்வின் ஒளி அலைகள் பெறவேண்டும் என்று அதை எண்ணத்தாலே இருவரும் படைப்போம் என்றால் இந்த உணர்வுகள் இரண்டற சரீரங்கள் இரண்டாக இருந்தாலும் உணர்வின் ஒளிச் சரீரமாகும்

இதைத் தான் சப்தரிஷி என்பது.

தன் உணர்வின் நிலைகள் கொண்டு படைக்கும் ஆற்றல்கள் பெற வேண்டும் என்றால் கணவனும் மனைவியும் ஒன்று சேர்த்து மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கி நமக்குள் சுத்தப்படுத்தினாலும் ஒருவருக்கொருவர் பெறவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுதல் வேண்டும்.

1.மனைவி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
2.அது சமைக்கும் ஆகாரம் அனைத்தும் சுவைமிக்கதாக ஆகி
3.அதைப் புசிப்போர் அனைவரும் மகிழ வேண்டும்.
4.மன பலமும் உடல் நலமும் பெறக்கூடிய ஆற்றலும் பெறவேண்டும் என்று கணவன் எண்ண வேண்டும்.

1.அதே போல தன் கணவன் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
2.அவர் பேச்சும் மூச்சும் உலகம் நன்மை பயக்க வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர் செய்யும் தொழிலில் நலமும் வளமும் பெறவேண்டும்.
4.அவர் பார்ப்பதெல்லாம் நலமாக வேண்டும்.
5.அவரைப் பார்ப்போருக்கெல்லாம் நல்ல உணர்வுகள் தோன்ற வேண்டும் என்று மனைவி எண்ணுதல் வேண்டும்.

இந்தப் படைப்பின் படைப்பினுடைய நிலைகள் நாம் ஏங்கி அதை நாம் அடிக்கடி செயல்படுத்தும் பொழுது அந்த ஆக்கச் சக்தியான நிலைகள் இருவருடைய உள்ளங்களையும் ஒன்று சேர்க்கின்றது.

ஒரு உயிரின் தன்மை பூமிக்குள் ஈர்க்கப்படும் பொழுது ஒரு தாவர இனச் சத்தைத் தனக்குள் கவர்ந்த பின் அந்தக் கவர்ந்த சக்தியினுடைய நிலைகள் அந்த உயிருக்குள் உறையச் செய்து அணு திசுக்களாக மாற்றி உடலின் தன்மை பெறுகின்றது.

இதைப் போல கணவன் மனைவி இரு சரீரம் என்று இருந்தாலும் ஆண்பாலினுடைய நிலைகள் இருந்தாலும் பெண்பாலினுடைய உணர்வின் ஈர்ப்பலைகள் தனக்குள் சத்தைக் கவர்ந்து குழந்தையை உருப்பெறச் செய்யக்கூடிய ஆற்றல்மிக்க சக்தியாக வருகின்றது.

இதைப்போல் கணவன் மனைவி இருவரும் இரண்டறக் கலந்த எண்ணத்தின் உணர்வை உயிருக்குள் சேர்த்து மெய் ஒளியின் தன்மை தனக்குள் பெருக வேண்டும் என்று இந்த உடலுக்குள் இரண்டறக் கலந்துவிடுகின்றது.

இவ்வாறு கலந்த உணர்வின் தன்மைகள்
1.மெய் ஒளியின் தன்மையை ஒலி ஒளி என்ற நிலைகளில் வளர்த்து
2.மெய் ஒளியைக் காணும் நிலை ஏழாவது சப்தரிஷி
3.ஒளியின் தன்மையை சிருஷ்டிக்கும் தன்மையாக அது எட்டும்.

விண்ணுலகம் செல்லும் பொழுது எதையும் தனக்குள் படைத்து அந்தப் படைப்பில் என்றும் ஒளி சரீரமாகி என்றும் பதினாறாக நிலை பெறும் தகுதியை அடைகின்றது.

இந்த உடலில் எப்படி இரு நிலையில் பிரிந்திருந்து மகிழ முடிகின்றதோ ஆக இரு நிலையான இயக்கச் சக்தி மாறி என்றுமே மகிழ்ச்சியான நிலைகள் தோற்றுவிக்கும் நிலைகள் தான் இது.

அதைத்தான் சப்தரிஷி மண்டலம் என்பது.

அதை எவெரொருவர் பின்பற்றி இந்தச் சரீரத்திலிருந்து உருப்பெறும் நிலையை அமைத்துக் கொண்டால் ஆறாவது அறிவு பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் - முருகன்