பேசுவது நான் (ஞானகுரு) அல்ல. பேசுவதற்கு அந்த அளவு தகுதி
படைத்தவனும் அல்ல. மெய்ஞானிகளால் வளர்க்கப்பட்ட அந்தப் பேருண்மைகளை குருவின் உணர்வால்
அந்த மெய் ஒளியினைக் காண முடிந்தது.
ஆனாலும் அதைக் காண்பதற்கு பல இம்சைகளைக் கொடுத்தார் குருநாதர்.
1.அந்த இம்சையை மாற்றுவதற்கு எதை எடுப்பது? என்றும்
2.அந்த ஞானிகளின் மெய் ஒளியினை எப்படிப் பெறவேண்டும்? என்றும்
உபதேசித்து உணர்த்தினார்,
3.துன்பங்களைக் கொடுத்துத் துன்பங்களை மாற்ற மெய் ஒளியைப்
பெறும் தகுதியை ஏற்படுத்தினார்.
ஆனால் உங்களுக்கோ துன்பம் நேரும் பொழுது மெய் ஒளி கொண்டு
துன்பத்தை நீக்கும் நினைவைக் கொண்டு வருகின்றோம். ஆகவே இதை அலட்சியப்படுத்திவிடாதீர்கள்.
எனக்குத் துன்பத்தைச் செயற்கையில் உருவாக்கித்தான் இந்தத்
தீய நிலைகளை நீக்கும் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறும் தகுதியை ஏற்படுத்தினார்.
1.எனக்குள் வளர்ந்த தீமைகளை நீக்கும் அந்த ஆற்றல்கள்
2.உங்களுக்குள்ளும் வளர வேண்டும் என்பது எனது ஆசை.
உங்களையறியாது வரும் துன்பத்தை நீக்க இந்த எண்ணத்தை வளர்த்துக்
கொண்டால் துன்பத்தை நீக்கிவிட்டு
1.இன்பத்தை வளர்க்கும் என்றும் நிலையான இன்ப நிலைகள் பெறும்
2.பெரு வீடான பெரு நிலைகள் பெற முடியும் என்றுதான்
3.உங்களுக்குள் லேசாகச் சொல்கிறேன்.
ஒரு விவசாய ஆபீசில் எவ்வளவோ நாள் பக்குவப்படுத்தி ஒரு வித்தைக்
கொடுத்த பின் அதற்கு நீரை ஊற்றிப் பக்குவமாகப் பராமரித்து வளர்த்தால் அது “தக்க பலன்
தரும்…” என்று சொல்வார்கள்.
அது போல் குருநாதர் கூட 12-13 வருடம் பெற்ற உணர்வுகளை வித்தாக
அருள் வாக்காக உங்களுக்குள் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.
அந்த அருள் வாக்குக்குள் மூலம் உங்கள் நினைவலைகளைக் கூட்டி
அதன் மூலம் காற்றில் படர்ந்துள்ள ஆற்றல்மிக்க மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள்
வளர்த்துக் கொள்ளும் முறைதான் யாம் சொல்லும் இந்தத் தியானம்.
“ஞானிகள் சென்ற வழிகள்” அது தான்.
சாமியாரிடம் சென்றால் தலை வலி போகும் வயிறு வலி போகும்
என்று எண்ணினால் அந்த நிலையிலேயே நிற்க வேண்டியது தான்.
சாமி (ஞானகுரு) சொன்ன வழியில் அந்த மகரிஷிகளின் ஆற்றலைப்
பெற்றால்
1.அந்தத் தலை வலியும் வயிற்று வலியும் போக்க முடியும் அது
தன்னாலே போகும்
2.அறியாது வரும் இருள் சூழ்ந்த நிலைகள் விலகும்
3.மெய் ஒளியின் தன்மை வளரும் என்ற இந்த நிலைகளுக்கு வரவேண்டும்.
அதைப் பெறும் பொழுது இருள் நமக்குள் நிற்காது.
இருளை நீக்க வேண்டும் என்று ஓட்டையாக (குறைபாடு) உள்ளதை…
“அதை உடனே தட்டியெறிந்து விட்டு” முழுமையான நிலைகளில் செயல்பட்டால்தான் சரியாகும்.
ஒரு பாத்திரத்தில் ஓட்டை உடைசல் அடைக்கிற மாதிரி அப்பொழுதுக்கு
மட்டும் ஏதாவது சாமியைப் பார்ப்பதோ மந்திரத்தைச் செய்தோ மாயங்கள் செய்தோ சாமியாரைப்
பார்த்தோ செய்வோம்..,
1.“பின்னாடி எல்லாம் சரியாகிப் போய்விடும்” என்றால்
2.எல்லாம் கழன்று ஓடி விடும்.
அந்த மாதிரி இல்லாதபடி மெய் ஒளியின் தன்மையை உங்களுக்குள்
வளர்ப்பதற்கு அந்த மகரிஷிகளின் ஆற்றல் மிக்க சக்திகளை நீங்கள் பெறவேண்டும்.
உங்கள் அனுபவத்தில் பாருங்கள்.