ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 22, 2017

எப்பொழுது பார்த்தாலும் சும்மை நம்மைத் திட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்று வேதனைப்படுகின்றோம் – “அதைத் தடுக்கும் உபாயம்”

ஒவ்வொரு நிமிடமும் நம்மை அறியாமல் பிறர் கோபமாகப் பேசினாலும் “ஈஸ்வராஎன்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கி உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இப்படி உடலுக்குள் நினைவைச் செலுத்திவிட்டு உங்களைத் திட்டியவர்கள் அவர்கள் எங்களைப் பார்க்கும் பொழுது நல்ல சொல்லாகச் சொல்லும் ஆற்றல் பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.

அவர்கள் எதையெல்லாம் பேசி எதையெல்லாம் உங்களுக்குச் சங்கடமாக எண்ணுகின்றனரோ அந்த சமயம் நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு
1.அவர்கள் எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகின்றனரோ அது அவர்களுக்கு நடந்து
2.“அவர்கள் உணரும் ஆற்றல் பெறட்டும்என்று நீங்கள் எண்ணுங்கள்.

இப்பொழுது உங்களை ஒருவர் திட்டிக் கொண்டே இருக்கிறார் என்று சொன்னால் நாம் சுத்தமாகக் கேட்டுக் கொண்டே இருந்தபின்
1.“திட்டியது அனைத்தையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்,
2.”எனக்கு வேண்டாம்…” என்று நாம் அவரிடம் சொல்லிவிட்டால் அது நம்மைப் பாதிக்காது.

நீங்கள் ஆத்ம சுத்தியைச் செய்துவிட்டு திட்டியவரிடம் நீங்கள் எப்படியெல்லாம் திட்டினீர்களோ அதையெல்லாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் எனக்கு வேண்டாம்என்று
1.சிரித்த முகத்துடன் சொல்லுங்கள்
2.அந்த உணர்வுகள் உங்களை ஆட்டிப் படைக்காது.

நாம் ஆத்ம சுத்தி செய்து இவ்வாறு சொன்னவுடன் “ஆ…” என்று அவர்கள் இழுதால் போதும், அவர்கள் அறியாமல் செய்த தவறை நாம் விட்ட மூச்சலைகள் அவருக்குள் ஊடுருவிச் சென்று அவர்கள் செய்த தவறை உணர்த்தும்.

இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

இதைப் போன்று ஒவ்வொருவரும் குடும்பத்திலோ மற்ற நிலைகளிலோறியாமல் அடிக்கடி பேசுகின்றனர். அவர்கள் உடலில் சேர்த்துக் கொண்ட இந்த உணர்வின் சத்துக்கள் அவர்கள் உடலில் வேலை செய்துவிடுகின்றது. அவர்கள் கட்டுப்படுத்த வேண்டுமென்றாலும் முடியவில்லை.

இப்பொழுது ஒவ்வொருவரும் நம் அனுபவத்தில் பார்க்கலாம். பையன் மேல் நாம் வெறுப்பாக இருப்போம். அவன் நல்லது செய்துவிட்டு வந்தாலும்கூடலேட்டாகிவிட்டது…” என்கிற பொழுது நாம் என்ன நினைக்கின்றோம்?

அவனை நினைத்தவுடன் “அவன் எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான் இருக்கிறான்ஒரு காரியத்திற்குப் போனால் லேட்டாகி அந்தக் காரியத்தை முடித்தவிட்டு வருவான் என்று சொல்வோம்.

ஜெயித்துவிட்டு வந்தான் என்றால் கூட ஏற்றுக் கொள்ள மாட்டோம். அவன் சென்று வந்த காரியம் என்ன என்று கேட்காதபடிஅவன் இப்படித்தான் எப்பொழுது சென்றாலும் லேட்டாக வருவான்…” என்று அவனைத் திட்டவும் பேசவும் ஏசவும்தான் செய்வோம்.

அவன் உண்மையைச் சொன்னாலும் கூட ஏற்றுக் கொள்ள மாட்டோம். பொய் சொல்கின்றான் என்ற எண்ணம்தான் தோன்றும். அதைக் கேட்டு அறிவதற்கு தாமதமாகும்.

1.நாம் நல்லது நினைத்தாலும் கூட
2.நம்மையறியாமல் அந்த உணர்வுகளை நிற்கச் செய்வோம்.
3.அந்த உணர்வின் தன்மை அவனைக் கெட்டவனாக மாற்றச் செய்யும்.

இதைப் போன்று ஒருவர்பால் கெடுதலான எண்ணங்களை வைத்துவிட்டால் அந்த உணர்வின் பார்வையிலேயே அவர் பேசும் பொழுது
1.நாம் எவ்வளவு நல்லது செய்தாலும்,
2.அந்த எண்ணங்களுக்குத் (அவருக்கு) தப்பாகத்தான் தெரியும்.

ஆகையினாலே அதைப் போன்ற நிலைகளை மாற்ற வேண்டுமென்றால் “ஆத்ம சுத்தியைநாம் முதலில் செய்து கொள்ள வேண்டும்.

ஆத்ம சுத்தி செய்து முடித்தபின் அவர்கள் பேசிய முறைகள் அவர்கள் செய்த முறைகள் அவர்கள் உணர்ந்து அவர்களே அதை அனுபவித்துத் தெரிந்து கொள்ளும் ஆற்றல் பெறட்டும் என்ற இந்த உணர்வின் நிலைகளை நீங்கள் மனதில் எண்ணிக் கொள்ளுங்கள்.

வாயிலே சொல்லிவிடாதீர்கள். சொன்னால் வம்பு வந்துவிடும்.

உங்கள் எண்ணத்தால் இப்படி வளர்க்கச் செய்யும் பொழுது அந்த உண்மையின் தன்மையை அவர்கள் அறியும் தன்மை வந்துவிடும். ஏனென்றால், அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு சோர்வோ மனச் சஞ்சலமோ வெறுப்போ அடைந்தால் இதைப் போன்ற உணர்வுகள் நம்மைப் பாதிக்காது.

நாம் எடுத்துக் கொண்ட இந்த ஆத்ம சுத்தியின் நிலைகள் நம்மை அறியாமையிலிருந்து மீட்க நமக்கு அந்தச் சக்தி உதவும்.

குடும்பத்திற்குள் இதைப் போன்ற நிகழ்ச்சிகள் நிறைய உண்டு. மாமியாருக்கும் மருமகளுக்கும் பிடிக்காது. மகனுக்கு அப்பாவைக் கூடப் பிடிக்காது. அந்த அளவிற்கு இன்று பெரும் பகுதி ஆகிவிட்டது.

இன்றைக்குக் குழந்தைப் பருவத்திலிருந்தே அந்த நிலைதான். இதைப் போன்ற நிலைகளெல்லாம் நாம் ஒவ்வொரு நிமிடமும் நம் உணர்வலைகளை மாறாமல் இருப்பதற்கு இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை ஒவ்வொரு நிமிடமும் பயன்படுத்தத் தவறாதீர்கள்.

யாம் வெறும் வார்த்தையில் சொல்கிறோம்என்று எண்ணி விடாதீர்கள்.

ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்கு வாக்காகக் கொடுத்து உங்களுக்குள் வரக்கூடிய துன்பத்தைப் போக்குவதற்கு இப்பொழுது உங்களுக்குள் பதிவு செய்கிறோம்.

இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்திற்குள் பல "இரகசியங்கள்" உண்டு.