(1) தன் ஆன்மாவை
ஒளிப்படுத்தும் மார்க்கத்தைக் காட்டினார் ஈஸ்வராய குருதேவர்
அகஸ்தியன் 27
நட்சத்திரங்களின் தன்மை எடுத்டு உயிரை ஒளியாக மாற்றி முதலில் விண் சென்றவன்.
துருவனாகி துருவ நட்சத்திரமானான் அதன்பின் இன்னொரு உடலுக்குள் போகாதபடி வந்தது.
நம் குருநாதர் ஈஸ்வராய
குருதேவர் கூட உடல் விட்டு உடல் தாவி வந்தவர்தான். கூடு விட்டு கூடு பாய்ந்து
1.முதலில் அபிராமி
பட்டராக இருந்தார்.
2.இப்பொழுது இங்கே
ஈஸ்வரபட்டராக இருக்கிறார்.
3.இதைப்போல ஏனைய
இன்னும் ஒரு ஐந்தாறு உடல்கள் எடுத்து வந்தவர்தான்.
இந்த உடலுக்கும்
சேர்த்து அதிலேயும் பைத்தியக்காரராகத்தான் இருக்கிறார். இதிலேயும்
பைத்தியக்காரர்தான்.
ஆனால் தன்னுடைய காரியம்
எதுவோ அதைச் சாதித்து வந்தவர் நமது குருநாதர்.
இந்த உடலில் மாற்றங்கள்
ஏற்பட்டால் என்ன செய்வது…? என்கின்ற வகையில் அதை எண்ணித்தான் இனி இந்த உடலில்
கடைசியாகத் தான் சேமித்த பிற்பாடுதான்
1.சில ரகசியங்களைச்
சொல்லி
2.எப்படி எடுக்க
வேண்டும் என்பதை எமக்குச் சொன்னார்.
அதைச் சொல்லிவிட்டு
அவர் உடலை விட்டுச் சென்ற பிற்பாடு அந்த ஆன்மாவை எப்படி ஒளியாக வேண்டும் என்று
அதற்குண்டான மார்க்கத்தைக் காட்டினார்.
ஏனென்றால் எதுவும்
உந்துவிசை வேண்டுமல்லவா. அந்த மார்க்கங்களைக் கொடுத்தார்
(2) ஆயிரம் வருடம்
தவமிருந்த ஆன்மாவை விண் செலுத்தச் செய்தார் குருநாதர்
அவர் விண் சென்ற
பிற்பாடுதான் இன்று மற்றவர்களை நாம் செலுத்துகின்றோம். அவரை விண் செலுத்துவதற்கு
முதலில் ஆயிரம் வருடம் தவமிருந்த ஆன்மாவை
விண் செலுத்தும்படி செய்தார்.
இமயமலைக்குப் போய்
ஹரித்வாரில் “ஓ…ம் ஓ…ம்..” என்று ஆயிரம் வருடம் “ஓ…ம் நமச்சிவாய…. ஓ…ம்
நமச்சிவாய…” என்று தவமிருந்த ஒரு ஆன்மா இந்தச் சிறைக்குள் (உடலுக்குள்ளே)
அடைப்பட்டிருந்தது.
அந்த நிலையில் அதையே
ஜெபமாக எடுக்கிறவர்கள் அந்த உணர்வுடன் சேர்த்து அவர்கள் ஆயிரம் வருடம்
வாழ்ந்தவர்கள்.
இனியும் வாழ்ந்து
கொண்டிருப்பார்கள்.
அப்பொழுது அவர்களுக்கு
இந்த விண் செல்லும் மார்க்கத்தைக் காட்டி,
1.என்னை அங்கே
ஹரித்வாருக்குச் செல்லச் செய்து
2.வெள்ளத்தை வரவழைக்கச்செய்து
அதைக் கடக்கச் செய்து,
2.அந்தச் சப்தத்தை
“எதிரொலியாக்கி”
4.மீண்டும் அந்த
எண்ணத்தை அவர்களுக்குச் சொல்லப்படும் போது,
5.சப்தரிஷி
மண்டலத்துடன் இணையச் செய்ய குருநாதர் எம்மைச் செயல்படுத்தினார்.
ஏனென்றால் சப்தரிஷி
மண்டலத்தின் சக்தியைப் பெறவேண்டும் என்கின்ற உணர்வு அவர்களுக்குத் தெரியாது.
அன்றைக்கு ஒரு அரசனாக
இருந்தவன் இந்த நிலையைப் பெற்றவன் இங்கே அடைபட்டிருக்கின்றான் இதற்கு, நீ ஏதாவது
செய்து கலைத்து விட்டாய் என்றால் அவன் உன்னை நினைத்தானென்றால் உன்னைச் சுட்டுப்
பொசுக்கக்கூடிய சக்தி இருக்கின்றது.
ஆகவே சப்தரிஷி மண்டல
ஒளிகளை எடுத்து அந்த விண்ணுலகை எடுத்துக் காட்டு என்றார் குருநாதர்.
அவ்வாறு செய்தவுடன் அது
வந்த பிற்பாடு இந்த ஆன்மா அது கூட்டைவிட்டு வெளியில் வருகின்றது.
1.அப்பொழுது சப்தரிஷி
மண்டல ஒளிகளை இணைக்கப்படும்போது
2.அந்த நட்சத்திர
அலைகளை நுகரும் ஆற்றல் கொடுத்தவுடனேதான்
3.இந்த ஆன்மா
விண்ணுக்குச் செல்கின்றது
4.அந்த முகப்பின்
உணர்வு வரப்படும்பொழுது அது சப்தரிஷி மண்டலத்திற்குள் இணைகின்றது.
(3) உடலை விட்டுப்
பிரியும் ஆன்மாக்களை எப்படி விண் செலுத்துவது? என்று பழக்கப்படுத்தினார் குருநாதர்
குருநாதர் முதலில்
எமக்கு அந்த பழக்கத்தைக் கொடுத்து அடுத்து மற்ற ஆன்மாக்களை எப்படி விண்
செலுத்துவது என்று சொன்னார். பிறகு இப்பொழுது நாம் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் அதைச்
செய்கிறோம்.
சொல்வது
அர்த்தமாகின்றதல்லவா.
இல்லையென்றால் “அந்த
வழி…” தெரியவில்லை என்றால் நாம் என்ன செய்ய முடியும்? சும்மா சொல்லி
வறட்டுத்தனமாகச் சப்தம் போட்டுக் கொண்டு இருப்பதில் பிரயோஜனம் இல்லை.
குருநாதர் அதற்கப்புறம்
என்ன செய்தார். இப்பொழுது நான் இருக்கின்றேன். இந்த உடலை மாற்றி இதற்குச் சரியான
நேரத்திற்குத் தேட முடியவில்லை.
நீ இன்னென்னது செய்ய
வேண்டும் இப்படி, இப்படிச் செய்ய வேண்டும் என்று எம்மைப் பக்குவப்படுத்தி அவருடைய
ஆன்மா உடலை விட்டுப் போகும் போது, அதற்கு என்ன செய்யவேண்டும்? என்றுதான் சில
நிலைகளைச் செய்யச் சொன்னார்.
யாருக்கு…?
அவரை (குருநாதரை) விண்
செலுத்துவதற்கு, அதற்கே ஒரு துணை தேவைப்படுகின்றது. நேரடியாக எங்கேயும் போக
முடியாது. “உந்து விசை வேண்டும்”.
அந்தச் சப்தரிஷி மண்டல
முகப்பை எடுத்து எண்ணத்தை திசை மாறாது கொண்டு போக வேண்டும். ஏதாவது திசை மாறிப்
போனது என்றால் வான் வெளியிலே மிதந்துவிடும் அணுவின் தன்மை அடைந்தால் மற்ற கோளின்
ஈர்ப்புக்குத்தான் போகும்.
சப்தரிஷி மண்டலத்துடன்
இணையாது. இப்பொழுது இங்கிருந்து போய்விட்டது என்றால் மற்ற கோள்கள் அதாவது சந்திரன்
இருக்கிறதென்றால் அங்கே போகும். ஆனால், அங்கே வளர்ச்சியற்ற அணுவாகத்தான்
இருக்கும்.
(4) குரு இல்லாதபடி,
எந்த நிலையும் இருக்க முடியாது
ஏனென்றால் இங்கே
எடுத்துக்கொண்ட உணர்வின் தன்மையில், மீண்டும் அதைக் கடந்து செல்லக்கூடிய திறன்
இருக்காது அதற்குள்ளே அடைபட்டுப்போகும்.
அதில் எத்தனையோ வகைகள்
அவர் சொல்லித்தான் இப்பொழுது நாம் இதைச்செய்கின்றோம்.
அதுதான் குரு இல்லாதபடி
எந்த நிலையும் இருக்க முடியாது, குரு காட்டிய அந்த நிலைகளை நமக்குள்
பதிவாக்கினால்தான் செல்ல முடியும்.
சும்மா அந்த
கிணற்றுத்தவளை மாதிரி சுற்றிக் கொண்டு இருந்து எடுப்பதென்றால் இது முடியாது.
ஏனென்றால் எமக்கு இருபது வருடம் இந்த அனுபவத்தைக் கொடுத்துத்தான இதைப் பெறச்
செய்கிறார். அதனால்தான்
1.உங்களுக்கு அடிக்கடி
இந்த உணர்வுகளைப் பதியச் செய்து பதியச் செய்து,
2.உங்கள் நினைவுகளை
அங்கே கொண்டுபோய்
3.ஒவ்வொன்றாகக் கொண்டு
வருகிறோம்.
அதற்குக் கணவன் மனைவி
நீங்கள் இருவரும் இணைந்து, தியானத்தை இப்படி எடுத்தே ஆக வேண்டும். எதற்கு? உணர்வு
வெளியில் போய்விட்டதென்றால் கருவை உருவாக்க வேண்டும்.
ஆகையினால் காலையில்
துருவ தியானத்தை எடுத்து, அந்த மகரிஷியின் அருள்சக்தி நான் பெறவேண்டும் என் உடல்
முழுவதும் படரவேண்டும் தன் கணவனுக்கு இந்தச் சக்தி கிடைக்க வேண்டும், என்று மனைவி
எண்ணவேண்டும்.
அதே போன்று கணவன் தன்
மனைவிக்கு கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
1.இந்த இரண்டு உணர்வும்
ஒன்றாக்க வேண்டும்.
2.அதை நாம் உருவாக்கி
அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளைப் பெற்று,
3.சப்தரிஷி மண்டலம்
சென்றடையலாம்.
(5) ஒவ்வொரு
உயிரான்மாவிலும் சப்தரிஷி மண்டல முகப்பை இணைக்க வேண்டும்
இங்கே துருவ
நட்சத்திரத்தில் இருக்க முடியாது. அதனுடைய வட்டப்பாதையில் தான் போய்ச்
சேரமுடியும். அப்பொழுது அதற்குண்டான முகப்பை எடுத்து இந்த உணர்வை எடுத்த
பிற்பாடுதான் அங்கு போய்ச் சேரும்.
1.ராக்கெட்டை இங்கே
செய்கிறார்கள்
2.கம்ப்யூட்டரில்
அந்தப் படங்களை எடுக்கிறார்கள்.
3.அந்த உணர்வின்
தன்மையைத் தனக்குள் சேர்த்துக் கொண்டபின், “முகப்பில்” வைக்கிறான்.
4.ராக்கெட்டில்
விண்ணில் சேர்த்த பிற்பாடு அந்த முகப்பைப் பார்த்து,
5.அந்த
ஈர்ப்புக்குத்தான் (செயற்கைக் கோள்) அங்கே கொண்டு போகும்.
அதில் கொஞ்சம் திசைமாறிப்
போனதென்றால் எங்கேயாவது இழுத்துக் கொண்டு போய்விடும். எந்தெந்தக் கோள்களை
எடுக்கின்றானோ அந்த “முகப்பை” இதில் இணைக்க வேண்டும்.
அதே மாதிரித்தான்
ஒவ்வொரு ஆன்மாக்களுக்கும் அந்த சப்தரிஷி மண்டலங்களின் முகப்பை இணைக்கச் சொல்வது.
அப்படி இணைக்காதபடி அந்த இடம் போய்ச்சேர முடியாது.
விலகிப் போனதென்றால்
எங்கேயோ போய்விடுவோம். நாம் நினைக்கின்றோம். ஆனால் இதில் “கரணம் தப்பினால் மரணம்”
என்கிற மாதிரிப் பல வித்தியாசமான நிலைகள் இருக்கின்றது.
(6) எம்மைப்
பழக்கப்படுத்தி, குருநாதரை சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கச் செய்தார்
அதனால்தான் என்ன
செய்கின்றோம்? குருநாதர் போகிறார் என்றால் அவரைச் சரியான எல்லை வைத்து
அனுப்புவதற்குத்தான் எம்மை இப்படிப் பழக்கப்படுத்தினார்.
ஏனென்றால் மற்றவர்கள்
எல்லாம், இந்த உடல் ஆசைக்குத்தான் குருநாதரிடம் வந்தார்கள்.
வந்தவுடனே அதைச்
செய்வேன், பூனையைச் செய்வேன், யானையைச் செய்வேன், என்று சொல்லிக் கொண்டு
ஆசையில்தான் போனார்கள்.
அப்புறம், இவர்கள்
எங்கே? அவர்களால் அவரை விண் செலுத்த முடியாது
ஆனால் எம்மைச் சரியான
முறையில் பக்குவப்படுத்தித்தான் தன்னை அதனுடன் இணைப்பதற்கு நீ எதை எதைச் செய்ய
வேண்டும்? என்று முதலில் அதை ஏற்றச் சொல்கிறார்.
அது சரியாக வந்த
பிற்பாடுதான் உடலை விட்டே குருநாதர் பிரிகின்றார். ஆன்மா போகும் போது இந்த உணர்வை
வளர்த்தபின் இது எப்படிச் சரியான முகப்பில் கொண்டுபோய் இணைகின்றது.
இப்படி உதாரணம்
தெரிந்து கொண்ட பிற்பாடுதான் அங்கே கொண்டு போகின்றார்.
சொல்வது
அர்த்தமாகின்றது அல்லவா? சரியாக இங்கே இருந்து அந்த முகப்பு இல்லையென்றால்
கொண்டுபோக முடியாது.
அப்புறம் உந்தி
குருநாதருடைய ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்த பிற்பாடுதான் அந்தச் சக்தியை
யாம் அதிகமாகப் பெற முடிந்தது
முதலில் என் அம்மா
அப்பாவின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்திற்குக் கொண்டு போகச் சொன்னார்
குருநாதர். அது கொண்டு போனால் அங்கே இரண்டு பேரும் சப்தரிஷி மண்டலத்தில்
இணைகின்றார்கள்.
சப்தரிஷி மண்டலமே
மனிதனின் கடைசி எல்லை.