ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 29, 2017

பல ஆயிரம் கோடிப் பணம் வைத்திருக்கின்றார்கள் ஆனால் மன நோய்க்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்கள் – “நிம்மதி இல்லை”

இந்த வாழ்க்கையில் நாம் எப்படியும் வாழ வேண்டும் என்று வேகத் துடிப்புடன் பல கோடிகளை இணைத்துப் பொருளாகச் சம்பாரித்து வைக்கின்றோம்.

சம்பாரித்து வைத்தாலும் அந்தப் பணத்தைப் பார்க்கலாம். பணம் கோடி கோடியாக இருந்தாலும் என்ன சொல்கிறார்கள்.
1.இவ்வளவு வைத்திருக்கின்றேன்... ஆண்டவன் என்னை ஏன் சோதிக்கின்றான் என்று தெரியவில்லை...!
2.இந்த வேதனையைத்தான் எடுக்கின்றார்கள்.
3.இதற்கும் அதற்கும் உடலுக்கும் மனதிற்கும் சீரற்ற நிலைகள் ஆகி
4.கடைசியில் மன நிம்மதியற்ற நிலையில் தான் இருக்கின்றார்கள்.

பல ஆயிரம் கோடி ரூபாயைச் சம்பாரித்த பின்
1.இன்றைக்குப் பொய் சொல்லி “எப்படிடா தப்பிக்கலாம்...” என்று ஷேர் மார்க்கெட்டிலோ
2.மற்ற தெரியாத வகைகளிலோ கொண்டு போய் அந்தக் கோடிகளைப் போடுகிறார்கள்.

இவ்வளவும் இருந்தாலும் “மன நோய்க்கு...” மருந்து வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

சொத்துக்களைக் காக்க வேண்டும் என்று சென்றாலும் இந்த மனதிற்கும் உடலுக்கும் நிம்மதி இல்லை. நிம்மதியற்ற உணர்வே நஞ்சாக மாறுகின்றது.

உடலை விட்டுச் சென்றால் இந்தக் கோடிச் சொத்து எங்கே வருகின்றது? வருமா...!

இன்றைக்கு முதல் மந்திரியாக இருப்பவர் பிறர் மேல் பழியைத் தூக்கிப் போட்டுப் “பல கோடி நான் அவருக்குக் கொடுத்தேன்... இவருக்காக இதைச் செய்தேன்...” என்பார்.
1.இப்படி இருப்பவருக்குத் தன் நாட்டைக் காக்க வேண்டும் என்றால்
2.“நிம்மதி... எங்கிருந்து வரும்?

நாட்டிற்கு முதல் மந்திரியாக இருக்கலாம். அதிகாரத்தின் நிலைகளில் தட்டிக் கேட்கும் நிலையும் இங்கே இருக்கலாம். ஆனால் இவருக்கு நிம்மதி ஏது?

அதைப் போலத்தான் இன்றைய நிலைகள் கொண்டு பெரிய பதவிகளில் இருப்போருக்குப் பேரும் புகழும் இருக்கலாம்.
1.ஆனால் அதன் மறைவிலே நஞ்சு கொண்ட உணர்வின் தன்மைகள்
2.”இணைந்தே” இருக்கின்றது.
3.இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்

அந்த நஞ்சற்ற நிலையாக நாம் திகழ வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் சேர்க்கும் தன்மையை நாம் பழக வேண்டும்.

ஆகவே அத்தகைய நஞ்சின் தன்மை வரும் நிலையிலிருந்து தப்ப “தனி மனிதன் - எதுவும் செய்ய முடியாது”,

அதற்குத்தான் ஆலயங்களிலே விநாயகரை முன்னிறுத்திக் காட்டினார்கள் ஞானிகள்.

நம் வாழ்க்கையில் எத்தகைய கஷ்டம் வந்தாலும் அந்த விநாயகரைப் பார்த்தவுடனே மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் எங்கள் உடலிலுள்ள உறுப்புகள் முழுவதும் படர்ந்து அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் எல்லாம் பெறவேண்டும் என்று உயிருடன் ஒன்றச் செய்து உணர்வின் ஆற்றலை உடலுக்குள் உள் செலுத்துதல் வேண்டும்.

தினசரி வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரை நாம் கண்டறிந்த கேட்டுணர்ந்த நம்மையறியாது வந்த நஞ்சான உணர்வுகள் நம் ஆன்மாவாக நிற்கும்.

நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உள் செலுத்தும் பொழுது உள் நின்று வரும் குழம்பின் தன்மை இந்தத் தீமைகளைப் பிளக்கச் செய்யும்.

அந்த விநாயகர் தத்துவத்தின்படி
1.அருள் மகரிஷிகளின் உணர்வை நம்மை நுகரச் செய்து
2.அறிந்திடும் உணர்வாக உயிர் இயக்கி அந்த உணர்வின் ஆற்றலாக
3.நாம் செயல்படும் தன்மையை உருவாக்கினார்கள் ஞானிகள்.

நாம் ஆலயங்களுக்குச் சென்று இந்த முறைப்படி எண்ணினால் இது தான் ஆத்ம சுத்தி என்பது.

கோடிப் பணம் நம்மை ஒரு பொழுதும் காக்காது. நம் உடலையே நம்மால் காக்க முடியவில்லை என்கிற பொழுது சேர்த்து வைத்த செல்வம் நம்மைக் காக்குமா...!

அருளைச் சேர்த்தால் ஞானம் வரும். “ஞானத்தால் தான்…” செல்வத்தைக் காக்க முடியும். இந்த வாழ்க்கையில் மகிழ்ந்து வாழவும் முடியும்.
1.உடலுக்குப் பின் இனி பிறவி இல்லை என்று
2.கல்கி - ஒளியின் சரீரமாக
3.பறக்கும் நிலை அடைய முடியும்.