ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 24, 2017

ஒவ்வொரு தெய்வத்திற்கும்… “ஒவ்வொரு வாகனம்” ஞானிகளால் போட்டுக் காட்டப்பட்டுள்ளது – விளக்கம்

ஆயிரெத்தெட்டு குணங்களை ஆயிரெத்தெட்டு தெய்வங்களாகக் காட்டப்பட்டு அதற்கு முன் ஒவ்வொரு வாகனமும் வைக்கப்பட்டுள்ளது.

நாம் முந்திப் பரிணாம வளர்ச்சியில் புழுவிலிருந்து மனிதனாக வந்தோம் அல்லவா..!

1.நாம் எந்தெந்தக் குணத்தில் வந்தோமோ
2.அந்த (பிறவியில்) உடலுக்குள் தான் இட்டு
3.இந்த உணர்வின் குணம் இருக்கும் பொழுது அதை நாம் பெற்றோம்.

இந்தக் குணத்தின் தன்மை கொண்டு அந்த உடலாக இருக்கும் பொழுது தான் சுவாசித்துத் தனக்குப் பாதுகாப்பான நிலைகள் உறையச் செய்து அதன் உணர்வுக்கொப்ப அந்தந்தச் சரீரத்தைப் பெற்றோம்.

தனித்து அந்தக் குணத்தின் தன்மை நாம் பாதுகாக்கும் நிலைகளுக்கு வரும் பொழுது இதே நிலைகள் இன்று நான் அந்த நிலை ஆகின்றேன்.

எது…?

கோபம் கோபம் என்றால் “காரம்” அந்தக் காரம் கோபத்தைத்தான் காக்கும். சலிப்பு சஞ்சலம் என்றால் நைப்பு - “உப்பின் தன்மை” சலிப்பான உணர்வைக் காக்கும். வேதனை வேதனை என்றால் “விஷம்” அந்த வேதனையைத்தான் காக்கும்.

அடிக்கடி நான் கோபமான உணர்வை எடுத்துக் கொண்டால் (காளியாக எடுத்துக் கொண்டால்)
1.எனக்குள் இருக்கும் நல்ல குணங்களை அழித்துவிட்டு
2.இந்த உயிருக்குள் கோபம் கோபம் என்று சேர்க்கப்படும் பொழுது
3.ஒன்றை அடித்துக் கொல்லும் அந்த உருவத்தின் நிலைகள்
4.மீண்டும் அந்த உணர்வின் ஈர்ப்பிற்குள் நான் செல்வேன்.
5.அதாவது இரக்கமற்று மற்றொன்றைக் கொல்லும் புலியாகப் பிறப்பேன்.
6.இப்படி “நீ அடுத்த பிறவி எதுவாக நீ ஆவாய்…!” என்று நிர்ணயித்துப் பார்த்துக் கொள் என்பதைக் காட்டுகின்றார்கள்.
7.அதனால் தான் “ஒவ்வொரு தெய்வங்களுக்கு முன்னாடியும் வாகனங்கள்” படைக்கப்பட்டது.

இதெல்லாம் அந்தந்த வாகனம் என்றால் அந்தந்தச் சரீரமாக நாம்  பரிணாம வளர்ச்சியில் வந்தோம். அதுவே மீண்டும் இன்றைய இந்த மனித உடலுக்குள் நாம் வந்த பின் “இந்தப் பிள்ளை யார்…?” நீ யார்?

இந்தக் “கேள்விக்குறி போட்டு” நாம் இன்றைய மனித உடலில் எந்தக் குணத்தை முன்னனியில் வைக்க வேண்டும் என்று நீ கேட்டுப் பார் என்ற நிலையைக் காட்டுகின்றார்கள்.

முன்னனியில் வைத்த அந்தக் குணமே கணங்களுக்கு அதிபதி கணபதி என்று ஆகின்றது.

இந்த உடலுக்குள் இருக்கக்கூடிய குணங்களுக்கெல்லாம் முன்னனியில் எந்தக் குணத்தை வைக்கின்றோமோ அதை அதிகமாக இன்றைய வாழ்க்கையில் நாம் சேர்த்துக் கொண்டால் இன்றைய செயல் நாளைய சரீரம் என்று காட்டுகின்றார்கள்.

ஏனென்றால் முந்தைய செயல் இன்றைய சரீரம் இன்று மனிதனாக உள்ளோம். ஆகவே இந்தப் பிள்ளை யார்? என்று இந்தக் கேள்விக்குறி போட்டு
1.மனிதனாக சிருஷ்டிக்கும் வல்லமை கொண்ட நாம்
2.இதைச் செயலிழக்கச் செய்தால் நாம் எங்கே செல்வோம்? என்று
3.நம்மைச் சிந்திக்கும்படி செய்கின்றார்கள்.

இயற்கையுடன் ஒன்றி வளர்ந்த நாம் இன் வரும் எத்தகையை தீமைகளாக இருந்தாலும் அவை அனைத்தையும் வென்று ஒளியின் சுடராக நீ ஆகவேண்டும் என்று உணர்த்துகின்றார்கள் ஞானிகள்.

நீ ஒளியின் சரீரமாக ஒளியாகப் போகின்றாயா…! அல்லது மறுபடியும் இன்னொரு உடலுக்குள் செல்லப் போகின்றாயா…! இந்தப் பிள்ளை யார்? நீ சிந்தித்துப் பார்…! என்பதைக் கண்ணுற்றுப் பார்த்து
1.நாம் அடைய வேண்டிய எல்லையைக் காட்டவே

2.தெய்வங்களுக்கு பல வாகனங்களைப் படைத்தார்கள் ஞானிகள்.