நட்சத்திரங்களில்
இருப்பது ஒரு விஷத்தின் இயக்கம். அவைகள் கதிரியக்கப் பொறிகள் கொண்டது.
ஒரு நட்சத்திரத்திலிருந்து
வெளிப்படும் நிலைகள் நம் பூமிக்குள் நேரடியாக வந்தால் இடி மின்னலாக வரும் நிலைகளில்
இவை அனைத்தும் ஊடுருவி நம் பூமியின் “நடு மையம்” செல்கின்றது.
அது கொதிகலனாக
மாற்றி மின் அணுக்களாக மாற்றி அணுத் தன்மையாகி இந்தப் பூமிக்குள்ளே பிளந்து வெளிப்படுத்தும்
நிலை வருகின்றது.
இந்த 27 நட்சத்திரங்களும்
வரிசைப்படுத்தி வரும் பொழுது சூரியனுடன் சேர்ந்து சுழற்சியின் தன்மை “முன்...பின்...”
வரும்.
ஒரு கூண்டை
அமைத்து அதற்குள் ஒரு சைக்கிளை ஓட்டிக் காண்பிப்பது போல் - சுழன்று வரும் நிலைகளில்
மையத்தில் இருந்து கொண்டு சூரியன் இயங்குகின்றது.
பல நட்சத்திரங்கள்
உமிழ்த்தும் நிலைகள் பல பாகங்களிலிருந்து வருவதை இது மாற்றுகின்றது.
இதிலே ஒரு ஐஸ்
பெட்டியில் (REFRIGERATOR) மின்சாரத்தை வைத்து எப்படிக் குளிர்ச்சியை உண்டாக்குகின்றோமோ
அதைப் போன்று
1.சனிக் கோள்
தனக்குள் வருவதை
2.உறையும் தன்மையாகக்
கொண்டு வருகின்றது.
அது சுழற்சியின்
தன்மை அடைந்தாலும் குளிர்ச்சியின் தன்மையாக (ஐஸ் பாறையாக) மாற்றும் தன்மை வருகின்றது.
அப்படி மாற்றி
எடை கூடும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து வெளி வருகின்றது. (சனிக் கோளில்
உள்ள வளையங்கள்)
1.மற்ற அணுக்களுக்குள்
இது எந்த அளவிற்குள் கலந்துள்ளதோ
2.அந்த அணுவிற்குள்
சேர்த்து
3.மற்றொரு பொருளைத்
தன்னுடன் இணைத்து
4.அந்த அணுத்
தன்மை வளர்ச்சி பெறும் தன்மை அடைகின்றது.
மற்ற கோள்களில்
திடப்பொருள்கள் உருவாக வேண்டும் என்றால் அங்கே “நீர் உற்பத்தி கிடையாது”.
இருந்தாலும்
இந்த அணுக்கள் மற்ற கோள்களிலிருந்து வெளிப்படும் சத்தும் மற்ற நட்சத்திரங்களிலிருந்து
வரக்கூடிய பொறிகளும் ஒன்றாகச் சேர்க்கப்படும் பொழுது இதை இந்தக் காந்தம் தனக்குள் இழுத்து
வைத்துக் கொண்டு சேமிப்பு என்ற நிலைகள் வெப்பமல்லாத நிலைகள் குளிர்ச்சியை
உண்டாக்கி (கண்ணுக்குத் தெரியும்) ஒரு பொருளாக உறையச் செய்கின்றது.
ஏனென்றால் அது
திடப்பொருளாக அது உருவாக்கப்பட்டது.., இதனுடன் சேர்த்தவுடன் அந்தத் திடப்பொருளாக
1.நீரை தன்னுள்
இருந்து மோதப்படும் பொழுது
2.ஆவியாக மாற்றி
3.இதனுடன் இணையும்
பொருளாக மாறுகின்றது.
இப்பொழுது
(1997) யாம் சொல்வதைப் பிற்காலத்தில் விஞ்ஞானிகள் சொல்வார்கள். ஏற்கனவே யாம் சொன்னதையெல்லாம்
சொல்லிக் கொண்டேதான் வந்துள்ளார்கள்.
அணுக்களுக்குள்
எப்படி நீர் கிடைக்கின்றது? நீர் இல்லை என்றால் எதுவும் வாழ முடியாது. நீர்
சக்தியைக் கொடுப்பது சனிக் கோள் தான்.
ஆகவே நம்
பிரபஞ்சத்திற்குச் சனிக்கோள் முக்கியமானது. இவைகள் எல்லாம் ஆதியிலே அகஸ்தியர்
கண்டுணர்ந்த பேருண்மைகள்.
அகஸ்தியர்
கண்டுணர்ந்த இந்த உண்மைகளை பிற்காலத்தில் வந்த ஞானிகள் சிவனுக்கு இரண்டு
சக்திகளாகக் காட்டியுள்ளார்கள். சிவம் என்றால் “திடம்” கண்ணுக்குப் புலப்படக்
கூடியது.
ஒரு பொருள்
உருவாக வேண்டும் என்றால் வெப்பம் அவசியம். நீர் அவசியம். அந்த இரண்டு சக்திகளையும்
நாமெல்லாம் தெரிந்து கொள்வதற்காக வெப்பத்தைப் "பராசக்தி" என்றும் நீரைக் "கங்கையாகவும்" காட்டினார்கள்.
நாம்
இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.