ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 11, 2017

கோப உணர்வை அதிகமாக வளர்த்துக் கொண்டால் அதனுடைய பின் விளைவுகள் எப்படிப்பட்டதாகும்?

 
நாம் எதனெதன் உணர்வுகளை நம் உடலாக இணைத்துச் சிவமாக்கி அதன் உணர்வின் இயக்கமாக வித்தாக வைத்திருக்கின்றோமோ “வினை” - விநாயகா.

நம் உடலிலே எதன் எதன் வழியில் சுவாசித்து உணர்வின் தன்மை உடலில் சேர்க்கின்றோமோ அந்தக் கணக்கின் பிரகாரம் வினைக்கு நாயகனாக அது அது இயங்கத் தொடங்குகின்றது.

1.கோபமான உணர்வின் தன்மையை நாம் சுவாசித்து
2.அந்த உணர்வின் ஞானமாக அதனின் உணர்ச்சிகள் நமக்குள் செயல்படும் பொழுது
3.கோபமான உணர்வின் அணுக்கள் பெருக்கமாகின்றது.
4.கோபத்தின் அணுக்கள் பெருக்கமானபின் அதனின் ஞானத்தைக் கொண்டு
5.அதையே உணவாக உட்கொள்ளும் ஞானத்தைப் பெருக்குகின்றது.

தன் உணவைச் சாப்பிட வேண்டும் என்ற கோப உணர்ச்சிகள் வருகின்றது. அதற்குச் சாப்பாடு கிடைக்கவில்லை என்றால் என்ன செய்யும்...!

அதே கோப உணர்ச்சியைத் தூண்டச் செய்து
1.பையனைத் திட்டச் சொல்லும்.
2.நண்பனை வெறுக்கச் சொல்லும்.
3.வியாபாரம் செய்து கொண்டிருந்தோம் என்றால் அதை மறக்கச் செய்யும்.
4.பொருள்களைக் கோபத்தால் வீசி எறியச் செய்யும்.

அந்த உணர்ச்சிகள் உணர்வான பின் அந்தச் சூட்சம உணர்வை எடுத்து அந்த அணுக்கள் விளைந்து இந்தக் கணக்குகள் நமக்குள் கூடினால் அந்த வினைக்கு நாயகனாக “இரத்தக் கொதிப்பாக” உருவாகின்றது.

இரத்தக் கொதிப்பான பின் எல்லோரையும் நாம் வெறுக்கும் நிலையாகி நம் உடலுக்குள்
1.நல்ல குணங்களை வெறுக்கும் உணர்ச்சிகளைத் தூண்டிச் செயலற்ற நிலைகள் வரும் பொழுது
2.நம் உடலின் அங்கங்கள் குறுக்கப்படும்.
3.நரம்பு சம்பந்தப்பட்ட (வாத) நோய்கள் வரும்
4.அந்த நிலையான பின் நம்மால் உடலால் நடந்து செல்ல முடியாது.

முடியவில்லை என்றால் ஒருவரை எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்போம். எதிர்பார்த்தவுடன் வரவில்லை என்றால் அவன் மீது சீறிப் பாயும் நிலைகள் வரும்.

“நம்மால் முடியவில்லை...” என்று அவர் சிரமப்பட்டுக் கொண்டு நமக்காக வந்தாலும்
1.நினைத்த மாத்திரத்தில் வரவில்லை என்றால்
2.வெறி கொண்ட நாயைப் போலத் தாக்கிப் பேசும் உணர்வுகள் தான் வருகின்றது.

நம்மால் முடியவில்லை. ஆனால் கோபத்தின் நிலை வரும். அதுவும் முடியவில்லை என்றால் “அழுகை” வரும்.

முந்தைய வாழ்க்கையும் இன்றைய நிலைகளும் முடியவில்லை என்ற நிலைகள் சேர்ந்து வெகு நேரம் ஆகிவிட்டால் தேம்பித் தேம்பி அழுகும் நிலை ஆகின்றது.

இப்படி இரத்தக்கொதிப்பாகச் சுருங்கிவிட்டால் நண்பன் என்ற நிலைகள் பழகிய உணர்வு பட்டபின் நண்பனைப் பார்க்கும் பொழுது - என் நிலை இப்படி ஆகிவிட்டது... சொல்லால் பேச முடியவில்லை என்றால்..., “அழுகையால் காட்டும் ஞானம்” வருகின்றது.

இதெல்லாம் இயற்கையின் நியதிகள்.

நாம் பல கோடிச் சரீரங்களில் தீமையை நீக்கி நீக்கி இன்று மனிதனாக வந்துள்ளோம். மனிதனான பின்
1.நன்மை பயக்கும் நல்ல குணங்களைப் பக்குவப்படுத்துதல் வேண்டும்.
2.அதுதான் சரஸ்வதி பூஜை - ஆயுத பூஜை.
3.நம் மனதைத் தெளிவாக்கினால் அந்த உணர்ச்சிகள் அந்த ஆயுதமாக மாறி நண்பனைக் காக்கும். அந்த நண்பனும் நம்மைக் காப்பான்.

அதே சமயத்தில் ஆறாவது அறிவு கொண்டு “கார்த்திகேயா” நாம் தெரிந்து கொள்ளும் அறிவு வருகின்றது. தீமைகளை நீக்கிய உணர்வின் தன்மையை இந்த ஆறாவது அறிவால் அறிய முடிகின்றது.

தீமைகளை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரம் பெற்றவர்கள் பத்தாவது நிலையில் (விஜய தசமி) துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் உள்ளார்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியையும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியையும் நாம் பெற்று இந்த வாழ்க்கையில் வரும் இன்னல்களை அகற்றி அவர்களைப் போன்று பத்தாவது நிலை அடையும் தன்மையை நினைவுபடுத்தச் செய்யும் நாள் தான் “விஜய தசமி”.