நமது உயிர் ஓரு நெருப்பைப் போன்றது.
நெருப்பில் ஒரு பொருளைப் போட்டால் அதன் மணம்
வெளிப்படுகின்றது. இதைப் போன்று வெப்பத்தால் ஒரு சத்தின் தன்மை கலந்தால் அதை உயிரணு
நுகரும்பொழுது எண்ணங்கள் உருவாகின்றது.
சுவைக்கு ஒப்ப எண்ணங்கள் உருவாகின்றது. அதற்கு “சீதா ராமா” என்று பெயரை
வைக்கின்றார்கள். “சீதா” என்றால் சுவை “ராமா” என்றால் எண்ணங்கள்.
எண்ணங்கள் உருவானாலும்,
1.எந்தச் சத்தினை எடுத்துக் கொண்டதோ,
2.அந்தச் சத்தினை மணமாக வெளிப்படுத்தும் சக்தி பெறுகின்றது.
3.அந்த மணம்தான் அணுவிற்குப் பாதுகாப்பு.
இப்படித்தான், அணுக்களின் இயக்கமாகும் பொழுது அது ஒரு “இயக்க அணுவாக” மாறுகின்றது. அதை நாம் நுகரப்படும் பொழுது எந்தச் சத்தியைக்
கவர்ந்து கொண்டதோ அது உயிரிலே பட்டு “அந்த உணர்ச்சிகளும்… அதற்குத்தக்க எண்ணங்களும்…” வருகின்றது.
அந்தச் சுவைக்கொப்ப எண்ணங்கள் நம் சொற்களாக வெளிப்படுகின்றது. அந்த உணர்ச்சிக்கொப்ப சொல்லாகவும் செயலாகவும் செயலாக்கப்படுகின்றது. நுகர்ந்த
உணர்வுகள் உயிரில் பட்டு அந்த உணர்வின் சத்து உமிழ்நீராக மாறி நம் ஆகாரத்துடன் கலந்து
அது இரத்தமாக மாற்றப்படுகின்றது.
இவ்வாறு இரத்தமாக மாற்றப்படும் பொழுது,
1.ஒரு சத்தினை இயக்க அணுவாக மாற்றிய கவர்ந்து கொண்ட “இயக்க அணு”
2.நம் இரத்தத்தில் கலந்தால் ஜீவ அணுவாக மாறி,
3.அதனுடைய மலம் நம் உடலாக மாறுகின்றது.
இதை நாம் புரிந்து கொள்வதற்காகத்தான் காவியங்களில், “விஷ்ணுவின் மறு அவதாரம் சீதா ராமன்” என்று காட்டினார்கள். உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ அந்தச் சுவைக்கொப்ப ஜீவ அணுவாக மாறி எண்ணங்களை இயக்குகின்றது.
நட்சத்திரங்களின் சத்து பூமியில் மண்ணுடன் கலந்து புவி ஈர்ப்பில் அது சிறுகச்
சிறுக வளர்ந்து வைரமானபின் அது வெடித்து தனித்தன்மையாக வெளி வந்துவிடுகின்றது.
இதைப் போன்றே அந்த ஜீவ அணுக்கள் நாளுக்கு நாள் அது வெளிப்படும் பொழுது, “அறிவின்
வளர்ச்சி… அறிந்திடும்
வளர்ச்சி…”வருகின்றது.
ஒரு வெளிச்சத்தைக் கண்டபின் பொருள் தெரிவதைப் போன்று நமது ஜீவ அணுக்களின் துணை
கொண்டு கண்களின் வழி
ஒரு உணர்வின் அறிவினை அறியும் “ஞானமாக” வளர்கின்றது.
1.நட்சத்திரங்கள் எப்படி மின்னுகின்றதோ அதைப்
போன்று
2.நமது உயிர் “மின் அணு” போன்று இயங்கிக் கொண்டே இருக்கின்றது, 3.அந்த உயிரின் இயக்கத்தைக் கொண்டு நமது ஜீவ அணுக்கள்
4.”மின் அணுக்களாக” இயங்குகின்றது.
எப்படி மின் நிலையங்களில் மின் அணுவினை உருவாக்கும் பொழுது நம் வீட்டில் எந்தெந்தப்
பொருள்களில் அதை இணைக்கின்றோமோ அந்த மின் அணு அதை இயக்கி அதன் வழி காண்கின்றோம்.
இதைப் போன்றுதான் நமது உயிரின் துணை கொண்டு உடலுக்குள் ஜீவ அணுக்கள் இயங்குகின்றது. சூரியனின்
இயக்கத் தொடரில் நாம் வாழ்ந்தாலும் நமது உயிரே சூரியனின் தொடர்பு கொண்டுதான் இயங்குகின்றது.
நாம் எப்படி ஊருக்கு ஒரு துணை மின் நிலையம் வைத்துள்ளோமோ அதைப் போன்றே நமது உயிரும் அந்த நிலை பெறுகின்றது.
சூரியனின் துணை கொண்டு அந்த மின் அணுக்கதிர்கள் நம் உடலில் உள்ள மின் அணுக்களை
இயக்குகின்றது.
இருப்பினும் பல உணர்வின் தன்மை கொண்டு அனைத்தையும் அறிந்திடும் ஆற்றல் கொண்டு
மனித உடலில் விஷத்தினை வென்றவன் “அகஸ்தியன்”.
விஷத்தை வென்றிடும் ஆற்றல் கொண்டு உணர்வினை ஒளியாக்கும் திறன் பெற்று ஒளியாக இருக்கும் அகஸ்தியன் துருவனாகி, திருமணமாகி, கணவனும்
மனைவியும் இரு மனமும் ஒரு மனமாகி அருள் மணம் பெற்று ஒளியாக இருக்கும் உயிரைப் போலவே
உயிரணுக்களை வளர்த்து துருவ நட்சத்திரமாக இருக்கின்றனர்.
27 நட்சத்திரங்களும் கடும் விஷத்தன்மை
கொண்டது. அதன் துகள்கள் பூமியில் பட்டால் வைரங்களாக விளைகின்றது. அந்த வைரத்தினைப்
பொடி செய்து சாப்பிட்டால் மனிதனைக் கொன்றுவிடும், அவ்வளவு விஷம் கொண்டது.
ஆனால் விஷத்தின் உணர்வினை ஒளியாகக் காண முடிகின்றது. வெளிச்சமாக அது தெரிகின்றது. விஷமே
உலகத்தை இயக்குகின்றது.
இன்றைக்கும் சூரியன் இயங்குகிறது என்றால் விஷத்தின் தாக்குதலால் தான் வெப்பத்தின் தன்மை கொண்டு இயங்குகின்றது.
1.நமது உயிரும் விஷத்தின் தாக்குதலால்தான் துடிக்கும் தன்மை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
2.இதைப் போன்று ஒவ்வொரு அணுக்களிலும் கலந்திருப்பதால்தான்
3.இயக்க அணுக்களாகவும் ஜீவ அணுக்களாகவும் மாறிக் கொண்டுள்ளதை நாம் அறிதல் வேண்டும்
நமது ஆறாவது அறிவால் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை யாரும் எளிதில் பெறுவது என்றால் மிகவும் கடினம். “குருவின் துணை…” இல்லாமல் எடுப்பதென்றால் மிக மிகக் கடினம்.
நமது குருவின் மூலம் எத்தகைய கடும் விஷத்தையும் ஒளியாக மாற்றிடும் சக்தியைப் பெற முடிந்தது. நமது
குரு விஷத்தையும் தாங்கி அதை ஏற்றுக் கொள்ளும் பருவத்தினை ஏற்படுத்தினார்.
ஆகவே தான் உங்களுக்கும் அந்த ஆற்றல் மிக்க சக்தியாக விஷத்தை ஒளியாக
மாற்றும் திறனைப் பெறச் செய்வது.
நாம் ஒவ்வொரு நாளும்
1.”உயிரின் முகப்பில்” ஈர்க்கப்படும் பொழுது,
2.இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உடல் முழுவதும் பரவுகின்றது.
இதைப் போன்று உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களின் முகப்பின் இயக்கத்தில் உயிரின் துணை கொண்டு
துருவ நட்சத்திரத்தின் உணர்வினை ஈர்க்கச் செய்யும் பொழுது,
1.என் குரு எப்படிச் செய்தாரோ அதைப் போன்று
2.உங்களில் ஈர்க்கச் செய்யும் பொழுது
3.நாம் அனைவரும் “ஒளியின் சரீரம்” பெறும் தகுதி பெறுகின்றோம்.