ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 24, 2017

விஷத் தன்மைகளைக் கலந்து விஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்ட “வேலிகாத்தான் முள்ளின் தீய விளைவுகள்”

மலை மீது பாறைக்குள் சில நிலைகள் இருந்தாலும் தனக்குள் அந்த பாறையாவதற்கு முன் மேகங்களைக் கவர்ந்து அது தன்னிச்சையாக நீரைத் தான் பருகி அதன் அருகிலே எந்த மலை இருக்கின்றதோ, அதனை ஊடுருவிச் செல்லும் தன்மை பெற்றது போன்ற நிலைகள் சில பகுதிகளில் உண்டு.

அவ்வாறு பெற்ற நிலைகளில் மேகங்கள் படர்ந்து சென்றால்
1.தனது காந்தப்புலனால் அந்த மேகங்களைக் கவர்ந்து,
2.உச்சி மலையாக இருப்பது கவர்ந்து அதற்குள் நீராகச் சுரக்கச்செய்து வடிவதை,
3.சில மலை உச்சிகளில் நாம் பார்க்கலாம்.
4.இவையெல்லாம் பாறைக்குள் இருக்கக்கூடிய காந்தப்புலனும்
5.அதனுள் கலந்து கொண்ட உணர்வின் சத்தின் துணை கொண்டுதான்
6.அந்தப் பாறையே அதை வளர்க்கின்றது.

அதைப்போன்று அந்த பாறையில் இருந்து வெளிப்படும் ஆவியின் தன்மையும் பாறைக்குள் நீரினில் கலந்து அதனின் தன்மை கொண்டு ஒரு கருவாக உருவாகுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

அப்படிக் கருவான அத்தகைய மரங்களின் செடிகளை நாம் எங்கேயாவது ஊன்றி வளர்த்தால் “அந்த மரம்” அதிலிருந்து வரக்கூடிய காந்தப்புலன் நீரை எப்படிக் கவர்கின்றது?

1.விண்ணிலே நுண் அணுக்களாக கலந்து கொண்டு இருக்கும் துருவப் பகுதியிலிருந்து வரும் (அல்லது)
2.கடல் நீரிலிருந்து வெளிப்படும் ஆவியின் சத்தை சூரியனின் காந்தசக்தி கவர்ந்து இருந்தால்
3.அதனின் சக்தியை இந்த மரத்தின் காந்தப்புலன் தனக்குள் குவித்து
4.மேகங்களாகக் கூடச் செய்து நீராக வடியச்செய்து,
5.அந்த நீரின் சத்தை அது வளர்த்துக் கொள்கின்றது.

விஞ்ஞான அறிவால் உருவாக்கப்பட்ட வேலி காத்தான் முள் செடியானது காற்றிலே இருக்கும் நீரின் சத்தினைக் கவர்ந்து அந்த உணர்வின் சத்து செடியாக விளைகின்றது.

வேலி முள் மேலே விண்ணை நோக்கி “நீரின் சக்தியைக் கவரும் காந்தப்புலனை”இந்தச் செடி வளர்த்துக் கொண்டாலும் எந்த அளவிற்கு ஈர்க்கின்றதோ அதனின் நிலைகள் கொண்டு “பூமிக்குள் இருக்கும் நீரை” இழுக்கும் தன்மையைப் பெறுகின்றது.

அப்பொழுது இந்தச் செடிக்குள் இருக்கும் விழுதின் தன்மை கூர்மையாகப் பாறையையும் பிளந்து விழுதினை ஊடுருவச் செய்து தனக்கு வேண்டிய ஆகாரத்தை எடுத்துக் கொள்கின்றது.

இது விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது.

அதாவது மழை நீரே இல்லாத காலங்களில் அந்தச் செடி செழித்து ஓங்கி வளர்கின்றது. எரி பொருளாக உபயோகிக்கவும் அதனின் துணை கொண்டு இயந்திரங்களை இயக்குவதற்காக இதனைக் கண்டுபிடித்தனர்.

விஞ்ஞான அறிவு கொண்டு உருவானதுதான் இந்த நிலை.

ஆனாலும் இந்த வேலி முள்ளில் விஞ்ஞான அறிவால் கலந்த விஷச் சத்தான தன்மைகள் அதனில் ஊடுருவி இருக்கின்றது. அந்த விஷ முள் மனிதரின் உடம்பிலோ, காலிலோ குத்திவிட்டால் அதனின் விஷத்தின் தன்மைகள் மனிதரிடத்தில் நுழைகின்றன.

அந்த விஷச் செடி தன்னுடைய விஷத்தின் தன்மையால் துடிப்பின் நிலைகள் அதிகமாகி அதனின் உணர்வின் துணைகொண்டு காற்றிலே இருக்கும் நீரை கவர்ந்து காற்றிலே உள்ள விஷத்தின் துணை கொண்டு தன் இனமான சத்தை அது வளர்த்துக்கொண்டு தன் உணவாக எடுத்துக்கொண்டு மரம் விளைகின்றது.

1.அந்த விஷச்செடியில் இருக்கும் முள் நம் உடம்பிலோ காலிலோ குத்திவிட்டால்
2.அதனுடைய விஷத்தன்மை நம் ரத்தத்தில் கலந்து
3.உடலில் கடுகடுப்பான உணர்ச்சிகளைத் தூண்டிக்கொண்டே இருக்கும்.

ஒரு தரம் முள் குத்தினாலும் இனம் புரியாமல் “பளீர்”என்று வலி எடுப்பது போன்று அந்த உணர்வின் நிலை தூண்டப்பெற்று இரத்தத்துடன் கலந்து வரப்படும்போது மற்ற நல்ல குணத்துடன் தசைகளிலே மோதப்படும் பொழுது “பளீர்…”என்று குத்துவது போன்று வலிக்கும்.

அந்த முள் மிக அழுத்தமாகக் குத்தியிருந்தால் அதனால் கை கால் குடைச்சல் மற்றும் எரிச்சல் என்ற நிலையும் வந்து விடுகின்றது.

இங்கு பஞ்சம் ஏற்பட்டு நீர் நிலைகள்  வறண்டு, விறகு விலை ஏற, அடுப்பு எரிப்பதற்கு எளிதாக விறகுகள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும், என்று மக்கள் நலன் கருதி விஞ்ஞானத்தில் கண்டறிந்து உருவாக்கப்பட்ட விஷ முள் செடியின் விதைகள் அனைத்துப் பகுதிகளிலும் விமானத்தின் மூலம் தூவப்பட்டது.

மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்று இந்த விஷ முள் செடிகளை விதைத்தனர் என்றாலும் அந்த முள் செடியினால் எவ்வளவு தீமைகள் இருக்கின்றன? என்பதை விஞ்ஞானிகள் அறியவில்லை.

இயற்கையில் உருவாவதை மாற்றி மனிதன் விஷத்தின் தன்மையை அதிக அளவில் பயன்படுத்தப்படும் பொழுது மனிதன் சுகமாக வாழும் நிலையையே அது பாழ்படுத்திவிடுகின்றது.

இன்று பல இடங்களில் நீருக்காகத் தவிக்கும் நிலை வந்திருக்காது. இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

1.அந்த அகஸ்தியமாமகரிஷிகளை எண்ணி
2.அவருடையை அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வைக் கூட்டி
3.நாம் வாழும் இடங்களில் அந்த அருள் சக்திகளைப் படரச் செய்தால் தான்
4.நல்ல மழை நீர் பெய்யும்.
5.அதே சமயத்தில் விஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்ட விஷத்தின் தன்மைகளையும் முறியடிக்க முடியும்.