வேதனை வெறுப்பு எடுத்து விவசாயம் செய்தால்
உங்கள் “கண்களிலிருந்து வெளிப்படும்” அந்த வேதனையான உணர்வுகள் பயிர்களில் பட்டுச் சரியாக
விளையாது. நல்ல பலன்களைக் கொடுக்காது.
குடும்பத்தில் சங்கடப்பட்டுக் கொண்டு விவசாயம்
செய்யட்டும்.
அவர்கள் கண் பார்வை பட்டு அந்த விதைகளை
விதைக்கப்படும் பொழுதே இந்த வேதனை என்ற விஷங்கள் அதிலே கலக்கப்பட்டு அது சரியான பயிராக
வராது.
அதே போல வியாபாரத்தில் வேதனையுடன் ஒரு
பொருளை எடுத்துக் கொடுத்தாலோ இந்த உணர்வு பட்டு வாங்குபவர்கள் நுகர்ந்து பார்க்கும்
பொழுது அந்தப் பொருளை வெறுக்கும் தன்மையே வரும்.
ஒரு புடவையாக இருந்தாலும் அல்லது வேறு
எந்தப் பொருளாக இருந்தாலும் சரி. அதனால் வியாபாரம் மந்தமாகும்.
வியாபாரம் இல்லை என்கிற பொழுது கடைச் செலவு
மற்ற செலவுகள் வீட்டுச் செலவுகள் எல்லாம் தொக்காகும். (குறைவாகிவிடும்)
அப்பொழுது எதை வைத்து வருகின்றது? அதற்கு
என்ன செய்ய வேண்டும்?
நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்ள
வேண்டும். நம் நல்ல குணங்களைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும். அதை நினைவுபடுத்துவதற்காக
வேண்டித்தான் சரஸ்வதி பூஜை என்று வைக்கின்றார்கள்.
1.சரஸ்வதி பூஜை என்றால்
2.ஞானத்தை வளர்க்கும் நாள். அது தான் ஆயுத
பூஜை.
நீங்கள் நன்மை பெறவேண்டும் என்ற உனர்வை
எனக்குள் எடுத்தால் எனக்குள் நன்மை பயக்கும் சக்தி வருகின்றது.
ஆனால் “வெறுமனே...,” நன்மை பயக்க வேண்டுமென்றால்
வராது.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
பெறவேண்டும் என்ற உணர்வுடன் அந்த வலு கொண்ட சக்தியைச் சேர்த்து அந்த உணர்வுடன் கலந்து
நல்லவைகளை எண்ணுதல் வேண்டும்.
நன்மை பெறவேண்டும் உடல் நலம் பெறவேண்டும்
தொழில் நலம் பெறவேண்டும் என்று எண்ணினால்
1.இந்த உணர்வுகள் என் உடலுக்குள்ளும் பாய்கின்றது.
2.இந்த உணர்வின் சொல் உங்களுக்குள்ளும்
இந்த உணர்ச்சியைத் தூண்டுகின்றது.
3.அதையே இயக்குகின்றது.
ஒரு பக்கம் நாம் வெறுப்பாகும்படி ஒருவர்
செயல்படுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவர் வெறுப்பான உணர்வுகள் செயல்படுவதைப்
பார்த்தவுடன் அந்த வெறுப்புடன் நான் இருக்கின்றேன்.
அந்த வெறுப்பின் தன்மை வரப்படும்போது என்
நண்பன் வருகின்றான். நம்மைப் பார்த்து.., “ஏம்ப்பா பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது...!
என்று சொல்லிச் சிரிக்கின்றான்.
நண்பன் சிரிப்பதைப் பார்த்தவுடன் இந்த
வெறுப்பின் தன்மையுடன் இருக்கும் பொழுது “என்ன..! இவன் நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றான்...?”
அவன் அப்படிப் பேசினான்.., ஆனால் இவன் நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றான்.
ஆக சந்தோஷமாகச் சிரித்தாலும் இங்கே வெறுப்பு
வருகின்றது.
அப்பொழுது என்ன செய்கின்றது? அந்த வேதனைப்படுத்தும்
உணர்வுகள் இதனுடன் கலந்தபின் நண்பனின் உணர்வு இங்கே “எதிரியாகத் தெரிகின்றது”.
விஷத்திற்குள் நல்ல பொருளைப் போட்டால்
என்ன செய்யும்? ருசியாக இருக்குமா...? அதுவும் மயக்கத்தான் செய்யும்.
இதைப் போன்று இயற்கையின் நிலைகள் வருவதை
நாம் மனத் தூய்மை செய்ய வேண்டும். அதற்காகத்தான் ஆயுத பூஜை என்று வைத்தது. நம் ஆன்மாவைத்
தூய்மைப்படுத்த வேண்டும்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள்
பேரொளி பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள்
பெறவேண்டும் என்று தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பின் யார் சங்கடப்பட்டார்களோ வேதனைப்பட்டார்களோ
அவர்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் அவர்கள் மன பலம்
பெறவேண்டும் சிந்தித்துச் செயல்படும் திறன் பெறவேண்டும் அவர்கள் செயல்கள் அனைத்தும்
நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
அப்பொழுது அவர்கள் உணர்வை நாம் எடுப்பதில்லை.
ஆனால் நாம் வேதனையாக இருக்கும் பொழுது
நண்பன் சிரித்ததைப் பார்த்தவுடன் இந்த வெறுப்பின் உணர்வை ஊட்டி என்ன செய்கின்றோம்?
1.அந்த நண்பன் மேல் உணர்வு வரப்படும் பொழுது
2.அவனைப் பார்க்கும் பொழுது நம்மைக் கேலி
செய்கின்றான் கிண்டல் செய்கின்றான்
3.நாம் இருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை
போலிருக்கிறது என்ற இந்த உணர்வு வரும்.
சில பேரைப் பார்த்துமே..., “நம்மைப் பிடிக்கவில்லை
போலத் தெரிகிறது...” என்று சொல்வோம். அப்பொழுது எது நம்மை இயக்குகின்றது?
“நாம் நுகர்ந்த உணர்வை நம் உயிர் இயக்குகின்றது”.
தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த உயிர் பூமிக்குள் விஜயம் செய்து பல
கோடிச் சரீரங்கள் பெற்றுத் தீமைகளை நீக்கி ஒளியின் சரீரம் பெறும் நாள் விஜய தசமி. அதை
நினைவு படுத்தும் நாளாக ஞானிகள் வைத்துள்ளார்கள்.
பத்தாவது நிலையாக கல்கியை அடையக் கூடிய
நாம் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை எப்படி நீக்க வேண்டும் என்ற உணர்வைத் தெளிவாக்கி
நம்மை முழுமைப்படுத்தும் நாள் தான் “சரஸ்வதி பூஜை – விஜய தசமி”