நாடி சாஸ்திரங்கள் அரசர் வழி வந்தது. அரசர்கள் தன் சுகபோகங்களுக்காகப் பல முறைகளைச்
செய்தார்கள்.
ஆனால் அவர்கள் தன் சுகபோகங்களுக்காக இதைச் செய்தாலும் இந்த உண்மையின் தன்மையை அறிந்து
கொண்டபின் இதை மாற்ற முடியவில்லையே
என்று “கடைசி நிலைகளில்
உணர்ந்து” பின் திருந்தி
விண் செல்லும் நிலைகளுக்கு வருகின்றார்கள்.
நாடி சாஸ்திரத்தில் பார்த்தால் காசைக் கொடுத்துவிட்டு கோடீஸ்வரன் ஆக வேண்டும் நல்ல நேரம்
வந்தால் கல்யாணத்தைப்
பண்ண வேண்டும் என்று எண்ணுகின்றார்கள்.
1.எவரும் எதுவும் செய்ய முடியாது.
2.உங்களுக்குள் இருக்கும் உயிரான ஈசனிடத்தில் சுவாசிக்கும் உணர்வின் தன்மை விளைய
வைத்து
3.அதனை உங்களுக்குள் சேர்த்து
4.சேர்ந்த உணர்வின் தன்மை உயிராத்மாவாகச் சேர்த்துச் சென்றபின் அவனே நம்மை உருவாக்குகின்றான்.
5.அவனுக்குள் (உயிருக்குள்) சேர்ந்த உணர்வின் தன்மைக்கொப்ப உடலை உருவாக்கிவிடுவான்.
6.அதிலிருந்து யாரும் தப்ப முடியாது.
“இரு நான் உன்னைப் பார்க்கின்றேன்” என்று நான் உங்களைத் திட்டலாம், ஆனால் அது எனக்குள் பதிந்துவிடும்.
கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அரசனுடைய நிலைகளில் பழி தீர்க்கும் உணர்வுகளை மனிதனுக்குள் பதியச் செய்து பழி தீர்க்கும் உணர்வினைக் கூட்டிக் கூட்டி ஒருவனை அழிக்கும்
உணர்வு கொண்டு செயல்பட்ட நிலையில் இன்று அதே அலைவரிசை கொண்டு “கம்ப்யூட்டர்” வந்துவிட்டது.
ஏனென்றால் இது மனிதனுக்குள் விளைய வைத்த நிலைகள். புழுவிலிருந்து எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை மனிதனானபின் எண்ணத்தைக் கூட்டிக் கூட்டி மற்ற உணர்வின் சத்தைத்
தனக்குள் எடுத்து விஞ்ஞான அறிவு கொண்டு தனக்குள் பதிவு செய்த நிலைகள்.
மீண்டும் காந்த அலைகளில் பரவச் செய்து சுலபமான நிலைகளில் அந்த அலைவரிசை கொண்டு
இன்று கம்ப்யூட்டரை உருவாக்குகின்றான்.
1.மனித எண்ணத்திற்குள் விஞ்ஞான அறிவின் நிலைகள் கொண்டு உருவான ரேடியோவோ T.V.யோ தொலைபேசியோ
2.இவைகளைப் புகழந்து பேசிய உணர்வின் தன்மை தனக்குள் கலந்தபின் அலைவரிசையாக எடுத்து
3.மனித எண்ணத்திற்குள் தோற்றுவித்த இந்த உணர்வுகள் “சிலிகனாக” வடிக்கப்பட்டது.
இந்த சிலிகன் நிலைகள் கொண்டு ஒவ்வொரு நிலைகளும் மாறி மாறி மனிதருடைய எண்ணத்திற்குள்
வந்து இன்று இருக்கக்கூடிய சூரிய வெப்ப காந்தம் எடுத்துக் கொண்ட கெமிக்கலின் தன்மைகள்
சுழற்சியாகி கம்ப்யூட்டராகச் செயல்படுத்தினான்.
மனிதனின் எண்ணம் கொண்டு கம்ப்யூட்டர் செயல்படும் பொழுது கம்ப்யூட்டர் நிலைகள்
கொண்டு திரைப்படங்களை வெளியிடுகின்றான். அப்படி வெளியிடும் நிலைகளை நாம் கேட்டுக் கொண்டு இருக்கும்
பொழுது சிறுகச் சிறுக அலை வரிசைகளை மாற்றுகின்றான்.
மாற்றிய நிலைகள் கொண்டு உயிர் அணுக்களில் பதிவு செய்தபின் உயர் அழுத்த நிலைகளில் அங்கிருந்து பாய்ச்சப்படும் பொழுது
1.மனிதன் புத்தி பேதம் ஆகக் கூடிய நிலைகளுக்கும்
2.நாடே சூனியமாகக் கூடிய நிலைக்கும் ஆக்கிவிட்டார்கள்.
3.இதிலிருந்தெல்லாம் நாம் தப்ப வேண்டும்.
பழனியில் நாடியினுடைய தத்துவத்தைப் பற்றிய உண்மைகளை நமது குருநாதர் முதன் முதலில்
கொடுக்கும் பொழுது போகருடைய தத்துவத்தைத்தான் கொடுத்தார்.
நாடித் துடிப்புகள் பற்றிய உண்மைகளையும் நாடிகளுக்கு உண்டான வெப்பத்தைப் பற்றிய
உண்மைகளையும் அன்று போகமா மகரிஷிகள் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.
“நாடி…” என்பது ஒவ்வொருவரும்
தம்முள் வடித்துக் கொண்ட உணர்வின் தன்மைகள். ஒருவர் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மைகள்
உடலில் நரம்பு மண்டலத்தில் அமிலமாக மாற்றப்பட்டு நுகர்ந்த அந்த உணர்வின் தன்மைகள் உடல்
முழுவதற்கும் செருகு செய்யப்பட்ட நிலை.
ஒருவர் எந்த உணர்வின் தன்மையைக் கூட்டுகின்றாரோ
1.அந்த எண்ணத்தின் உணர்வலைகள்
2.உடலின் நரம்பு மண்டலத்தில் “அமிலமாக” வடிக்கப்படுகின்றது.
ஒருவர் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மைகள் அமிலமாகச் செருகப்பட்டு நாடி நரம்புகளில்
துடிக்கப்படும் பொழுது அது உடல் முழுவதற்கும் ஆற்றல்மிக்க நிலைகளின் துடிப்பாக இயக்கப்படுகின்றது.
ஒருவர் எத்தனை விதமான குணங்களை எண்ணுகின்றாரோ இவையனைத்தும் உடலின் “நரம்பு மண்டலத்திலுள்ள அமிலச் சக்திக்குள்” அணுக்களின் கருக்களாகச் சுழன்று வருகின்றது.
1.ஒருவர் எண்ணும் எண்ணத்தின் உணர்வினுடைய நிலைகள் உயிரில் மோதும் பொழுது
2.நரம்பு மண்டலங்களில் கலந்துள்ள நிலைகள் எதுவோ
3.அந்த உணர்வின் தன்மை கொண்டு ஆணையிட்டு
4.உடல் முழுவதற்கும் இயக்கும் நிலையாகின்றது.
பொது நிலைகளில் எந்த உணர்வின் தன்மை நமக்குள் இயங்குகின்றதோ அந்த நாடித் துடிப்பிற்கொப்பத்தான்
நமது எண்ணம் கொண்டு… “நாம் ஒன்றை ஏற்றுக்
கொள்வதும்… ஒன்றை வெறுப்பதும்…” போன்ற நிலைகள் வருகின்றது.
மனித உடலில் எடுத்துக் கொண்ட உணர்வின் அமிலச் சக்திகள் வடிக்கப்பட்டு இறுகிவிட்டால் உடலின் இயக்கத்திற்குள் தொடர்ந்து செயல்படும் ஒருவர் தனக்குள்
சேர்த்து வளர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையை மாற்றுவது என்பது மிக மிகக் கடினம்.
அதை மாற்ற வேண்டும் என்றால் குருவின் துணை மிகவும் அவசியம்
தேவை.
நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நாம் ஈஸ்வரா என்று நம் உயிரை எண்ணி
1.உயிர் வழியாக அந்தத் துருவ நட்சத்திரத்துடன்
தொடர்பு கொண்டு
2.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளி உணர்வுகளை நமக்குள்
இணைத்துக் கொண்டே இருந்தால்
3.எத்தகைய கடுமையான தீமைகளையும் நீக்க முடியும்,
இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை என்ற நிலை அடைந்து, சப்தரிஷி மண்டலத்துடன்
இணைந்து பேரின்பப் பெரு வாழ்வு வாழ்ந்திடலாம்.