Tuesday, July 25, 2017

ஆயுள் ஹோமத்தைச் செய்பவரும் “செத்துப் போவார்” என்று தெரியும் தெரிந்தாலும் “நம்முடைய ஆசைக்கு…” அதைச் செய்கிறோம்

ஆயுள் ஹோமம் செய்கின்றார்கள்.

ஆனால் முதலில் ஆயுள் ஹோமத்தைச் செய்து கொடுப்பவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா...! அப்புறம் அவர் இவருக்கு ஆயுள் ஹோமம் செய்தால் ஆயுள் எப்படி விருத்தியாகும்?

நாம் இதைத் தெரிந்து கொள்ளவும் செய்கின்றோம். தெரிந்தாலும் செய்கின்றோம்.

1.ஆயுள் ஹோமம் செய்பவரே இறந்து போகின்றார்.
2.அப்புறம் அவரிடம் போய் ஆயுள் ஹோமம் செய்தால் எப்படி ஆயுள் நீடிக்கும்?
3.”நம்முடைய ஆசை…” இதைச் செய்தால் ஆயுள் நீடிக்கும் என்று செய்கின்றோம்?
4.யாருக்கு ஆயுள் நீடிக்கின்றது...! ஒருவருக்கும் நீடிப்பதில்லை.

சனிப் பெயர்ச்சி… குரு பெயர்ச்சி… இங்கே போ… அங்கே போ… என்று “ஏழரை நாட்டான் பிடித்துக் கொண்டான்…” அப்படி என்று ஜாதகக் குறிப்பு சொல்கின்றது.

ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு சட்டத்தை இயற்றுகின்றது. இயற்றிய அந்தச் சட்டத்தைப் பதிவு செய்து அதையே மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அதுவே நமக்குள் இயக்குகின்றது.

ஜோதிடம் பார்ப்பவனிடம் சென்று பையன் பிறந்திருக்கின்றான். பையனுக்கு “நல்ல நேரம் வருகின்றதா….! கெட்ட நேரம் வருகின்றதா….! என்று அந்த ஆசையில் கேட்கின்றீர்கள்.

அவன் அந்தத் தேதியின் பிரகாரம் சட்டங்களில் எழுதி வைத்த பிரகாரம் படித்துக் கொண்டு வருகின்றான்.

அது நமக்குப் பொருந்தி அதைச் சொன்னவுடன் வரிசைப்படுத்தி அதைச் சிருஷ்டிக்கின்றோம். நம் எண்ணத்தால் எடுத்துக் கொள்கின்றோம்.

பையன் பிறந்திருப்பான். குழந்தை அவனுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லி தந்தையார் இவனின் எதிர்காலம் எப்படி இருக்கின்றதோ என்று எண்ணிக் கேட்பார்.

ஜோதிடம் பார்ப்பவன் எழுதி வைத்த குறிப்பைப் படித்தவுடன் அவன் சொன்னதை மனதில் பதிய வைத்துக் கொள்வார். தாயிடம் வந்து குழந்தை குழந்தை பிறந்த நேரம் ஏழரை நாட்டான் சனி பிடித்திருக்கிறது என்று சொல்வார்.

“ஆ...ஹா...” அந்தப் பிறந்த கருவின் தன்மை இந்த உணர்வின் நினைவை அங்கே கூட்டுகின்றது.
1.ஒன்றும் அறியவில்லை என்றாலும் கூட
2.நம்முடைய அணு செல்களில் பதிவு செய்து கொள்கின்றோம்.

நம் பாசத்தின் நிலைகள் கொண்டு அங்கே பதிவு செய்து கொண்ட பின் இரண்டாவது பையனுக்கும் ஆபத்து…, “அதனால் கொஞ்சம் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்பார்கள்.

அவனை உடனே கூப்பிட்டு…, அங்கே ரோட்டிலே பார்த்துப் போடா… பஸ்ஸில் ஆபத்துடா… போகாதடா…. இதைச் செய்யாதேடா… என்று அவனிடமும்
1.இந்த விதையை விதைத்து விடுகின்றோம். 
2.பஸ்ஸை விட்டுப் போனாலும் வீட்டை விட்டுப் போனாலும் இவன் எங்கே போனாலும்
3.எங்கே போய் அடிபடுகின்றானோ...! என்னமோ...! ஏதோ…! என்ற இந்த சிந்தனை
4.அவன் பின்னாடியே நம் எண்ணங்கள் போய்க் கொண்டிருக்கும்.
5.வெளியிலே போனால் போதும். இப்படித்தான் வரும்

அப்பொழுது ஜோதிடக்காரன் உருவாக்கிக் கொடுத்தது எனக்குள் உருவாகி அதையே நான் சிருஷ்டிக்கின்றேன். அப்புறம் என்ன ஆகின்றது?

ஏழரை நாட்டான் சனி பிடித்ததென்றால் கொடுக்கல் வாங்கலில் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பார்கள்.

வியாபாரத்திற்குச் சென்றால் கொடுக்கல் வாங்கலில் தன்னையே சுருக்கி நாம் உணர்வினுடைய நிலைகளைக் கவர்ந்து நாம் எந்த நினைவு கொண்டு இருக்கின்றோமோ அதற்குத் தக்க தான் வியாபாரம் ஆகும்.

நீ எதை நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய். இந்த வேதனை வரும்… துன்பம் வரும்… என்ற இந்த எண்ணத்தைக் கூட்டி நாம் செலுத்தி அடுத்தாற்போல் நாம் எங்கே சென்றாலும் இந்த உணர்வே வரும்.

என் உணர்வுகள் வாங்க வருவோர் செவிக்குள் பட்டவுடன் நான் எதை நினைக்கின்றேனோ அதன் உணர்வே அதையே எனக்குள் அவரைப் பேச வைக்கின்றது.

ரேடியோவில் எந்த ஸ்டேசனைத் திருப்பி வைக்கின்றோமோ அந்த அலை வரிசையில் வருவதைத்தான் பாடும்.

1.எந்தச் சந்தேக உணர்வை எனக்குள் எடுகின்றேனோ
2.இந்த உணர்வின் ஒலிகள் மற்றவர்கள் செவிகளில் பட்டவுடன்
3.அந்த உனர்வின் நிலைகள் அங்கே இயக்கச் செய்து
4.அந்தப் புலனறிவை எனக்கு அது ஊட்டும் - இது இயற்கை
5.இது தான் இன்றைய நிலைகளில் நாம் ஜாதகம் பார்க்கும் நிலை.

ஆகையினால் மனிதனுக்கு ஜோதிடம் இல்லை. சூரியனுக்கு உண்டு மரத்திற்கு உண்டு மாட்டிற்கு உண்டு ஆட்டிற்கு உண்டு இவைகளுக்கு ஜோதிடம் சொல்லலாம்.

ஏனென்றால் அதெல்லாம் “தன் எண்ணத்தாலே” எடுப்பதில்லை.

இங்கே நீர் இல்லை என்றால் நாம் என்ன செய்கின்றோம்? ஆயிரம் அடிக்குக் கீழ் இருந்தாலும் கீழே தோண்டி நீரை மேலே கொண்டு வருகின்றோம்.

கடலில் உப்பு நீராக இருக்கின்றது. இயந்திரத்தைக் கொண்டு நல்ல நீராக மாறுகின்றோம்.

அப்புறம் இவனுக்கு ஏது ஜோதிடம்...!