ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 14, 2017

மற்றவர்களுக்கு நாம் தர்மமோ உதவியோ செய்தாலும் “அவர்களின் கஷ்டத்தைக் கூர்ந்து கவனித்தால்” தர்மம் செய்தும் பலன் இல்லாது போய்விடும் – விளக்கம்

நாம் ஆயிரம் நன்மைகள் செய்தாலும் பிறர் ஏக்க உணர்வுடன் சிரமப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

கொடுத்தவுடன்.., அவர்கள் “அய்யா கொடுத்தீர்களே! மகராசன் நன்றாக இருப்பீர்கள்என்று சொல்லும் பொழுது
1.நாம் கூர்ந்து கவனித்தால் அவர்கள் கஷ்டம் நமக்கு வந்துவிடும்,
2.தர்மம் செய்தும் பயன் இல்லை.

நாம் தவறு செய்யவில்லை. அந்த உணர்வின் ஆற்றல் நமக்குள் பெருகி அவர் வழியில் நமக்குச் சிரமங்கள் வருகின்றது. அதற்காக வேண்டி தர்மங்கள் செய்யாமல் இருக்க முடியுமா?

மனிதன் என்றால் தர்மம் செய்ய வேண்டும். அந்த தர்மம் எதைக் கலந்ததாக இருக்க வேண்டும்?

அவர்கள் வேதனையான நிலைகளை எண்ணினாலும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தாலும் அவர்கள் கஷ்டத்தை நீக்கிவிட்டோம் என்று ஆனந்தப்பட்டாலும் வேதனை உணர்வு கலந்தே…” அவர்கள் சொல் தொடர் இருக்கும்.

பாலில் நஞ்சு பட்டால் ருசியாக இருந்தாலும் குடித்தவுடன் மயக்க நிலை வருவது போலத்தான் அதனின் செயல் இருக்கும். அந்த உணர்வுகள் நமக்குள் சேர்ந்துவிடுகின்றது.

1.”நல்ல மனதுதான்…”
2.ஆனால் நல்ல மனதிற்குள் நஞ்சான அழுக்குச் சேர்ந்துவிடுகின்றது.
3.நாம் தவறு செய்யவில்லை.

அதே மாதிரி வயிறு நிறைய நாம் சாப்பிட்டிருப்போம். அப்படிச் செழிப்பாக இருக்கும்போதுஒரு பையன் விஷமம் செய்கின்றான்…” என்று வைத்துக் கொள்வோம்.

அந்த மகிழ்ச்சியான நேரத்தில் அவனைக் கண்டு “இப்படிச் செய்கிறாயே என்று சொல்லி வேதனைப்பட்டால் அந்த வேதனையான உணர்வு கலந்து நாம் சாப்பிட்ட ஆகாரம் திகட்டலாகி ஜீரணிக்கும் பொழுது சோர்வடையும்.

நாம் ஒரு சுமையை அதிகமாகத் தூக்கிச் சுமக்கும்போது அது முடியாத நிலை வரும்போது நாம் துவண்டுவிடுவது போல நம் உடலின் உறுப்புக்கள் ஜீரணிக்க முடியாத நிலைகளில் அதுவும் துவண்டு விடுகின்றது.

அந்தச் சமயத்தில் மற்ற ஒருவன் தவறு செய்வான் என்றால் அந்தத் தவறான உணர்வை நமக்குள் சுவாசித்துச் சுவைமிக்க உணவாக இருந்தாலும், அதற்குள் துவண்ட நிலைகள் கொண்டு நாம் வேதனை என்ற நஞ்சினைக் கலந்து மயக்க நிலைக்கே வந்துவிடுகின்றோம். 

நாம் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் ஏற்படும் நிலைகள்,

நல்லதை எண்ணும் போது மற்றவர்கள் செய்யக்கூடிய ஒவ்வொன்றிலும் குறையினுடைய உணர்வுகளை நாம் சுவாசித்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

ஒவ்வொரு நிமிடமும் நல்லதை நினைக்கும்போது மற்றவர்கள் செய்யும் தப்பைத்தான் அறிந்து கொள்கிறோம். அந்தத் தப்பை உணர்ந்து அடுத்து
1.“இப்படிச் செய்யாதே…” என்று சொல்லித்தான் ஆக வேண்டும்.
2.பிள்ளையாக இருந்தாலும் யாராக இருந்தாலும் சரி.
3.நாம் சுவாசித்த இந்தத் தப்பான உணர்வுகள் நம் உடலில் சேரத்தான் செய்கின்றது.

அதே சமயத்தில் தப்பு நடந்துவிட்டது என்று அடுத்து ஆத்திரமான நிலைகள் வரப்படும்போது அந்த ஆத்திரமான உணர்வுகள் நம் நல்ல குணங்களுக்குள் பதியத்தான் செய்கின்றது.

இதையெல்லாம் நாம் மாற்றப் பழக வேண்டும்.

நாம் எந்தச் சங்கடமான வார்த்தைகளைக் கேட்டோமோ சங்கடமான செயல்களைப் பார்த்தோமோ இதைப்போன்ற நேரத்தில் எல்லாம் ஆத்ம சுத்தி செய்து சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும்

ஆத்ம சுத்தியைச் செய்து கொள்ள வேண்டுமென்றால் ஒவ்வொரு நாளும் பத்து நிமிடமாவது துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்றால்தான் இப்பொழுது யாம் சொல்லும் ஞானியரின் அருள் சக்தியைப் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.

நீங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரொளியை எடுத்துக் கொண்டால் தான் அந்த ஆத்ம சுத்தி செய்யும் போது அந்த ஆத்ம சுத்தியின் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.

1.அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நாங்கள் பெறவேண்டும்.
2.அது எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும்.
3.எங்கள் செயலிலே நலம் பெறவேண்டும்.
4.எங்கள் பேச்சு மூச்சு எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை நீங்கள் ஒலி பரப்பிக்கொண்டேருக்க வேண்டும்.

அடிக்கடி இவ்வாறு சொல்லும்போது உங்கள் உடலுக்குள் துன்ப அலைகள் இருந்தாலும் இது அதை மாய்த்து ஆற்றல் மிக்க நிலைகளாக உணர்வின் சத்தாக மாற்றுகின்றது.