ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 26, 2017

எதிர்பாராது ஏற்படும் விபத்துக்களிலிருந்து “நீங்கள் நிச்சயம் விடுபட முடியும்” – அந்த ரிமோட் கன்ட்ரோல் (REMOTE CONTROL) சக்தியைப் பெறுங்கள்

ஒரு பஸ்ஸில் பயணம் செய்யும் பொழுது வீடு வந்து நாம் சேரும் வரையிலும் நம்பிக்கையில்லை.

பஸ்ஸிலே செல்லும் பொழுது பணத்தை வைத்துச் சென்றாலும் மறுபடியும் பணத்துடன் நாம் வீடு வந்து சேர்வோமா பணத்தைக் கொண்டு போய்ச் சரியான முறையில் ஒப்படைப்போமா என்ற இந்த உணர்வின் நினைவலைகளில் அச்சுறும் உணர்வுகள் கொண்டு தான் நாம் செல்கின்றோம்.

பஸ்ஸிலே நாம் செல்லும் பொழுது பத்திரிக்கை வாயிலாக நாம் பல விபத்துக்களையும் கொடூரமான செயல்களையும் படிக்க நேருகின்றது.

பணம் எடுத்துச் செல்லும் பொழுது நாம் பஸ்ஸில் ஏறி அமர்ந்த பின் பஸ் “துரித வேகத்துடன்” செல்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது
1.பத்திரிக்கையில் படித்த உணர்வுகள் நினைவுக்கு வந்து
2.ரிமோட் கன்ட்ரொல் (REMOTE CONTROL) போல்
3.”டிரைவர் இப்படி வேகமாக ஓட்டுகின்றார்” என்ற நினைவினை அங்கே பாய்ச்சினால் போதும். 
4.அவருடைய கூர்மையினுடைய நிலைகளை மறைத்து அவரை விபத்துக்குண்டான நிலைகளை இயக்கச் செய்யும்.
5.நான்கு பேர் இவ்வாறு செய்தாலும் போதும். 
6.அந்தப் பஸ் விபத்துக்கு நிச்சயம் காரணமாகின்றோம்.

பத்திரிக்கையைத்தான் படித்தோம். அதில் படித்த உணர்வினை நமக்குள் விளைய வைத்தோம்.

இந்த நினைவுகளைக் கூட்டப்படும் பொழுது இது நமக்குள் உணர்ச்சிகள் உந்தி நம் கண்ணின் நினைவலைகளை நாம் டிரைவரைப் பார்க்கப்படும் பொழுது “நம்மை அறியாமலே விபத்துக்குள்ளாக்குகின்றது”.
1.நாம் விபத்திலே சிக்குகின்றோம்.
2.எதனைப் படித்தோமோ அதனின் நிலைகள் கொண்டு நம்மை ஆளாக்குகின்றது.

இதைப் போன்று நம்மையறியாமல் இயக்கும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டுமல்லவா.

இதைப் படிப்போர் அனைவரும் ஆலயங்களில் காட்டிய வழிப்படி அந்த அருள் ஞானிகள் உபதேசித்த அந்த அருள் வழிப்படி அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெறவேண்டும் “ஈஸ்வரா” என்று எண்ணி ஏங்குங்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் உங்களுக்குள் வளர்ந்து
1.தீமையை அகற்றும் ரிமோட் கன்ட்ரோல்
2.அந்த ஞானியின் உணர்வலைகள் உங்களைக் காத்திடும் செயலாக வரும்.

நீங்கள் பஸ்ஸுக்குச் சென்றாலும் செல்லும் பொழுது தன் மனைவி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அவர் பார்ப்பதெல்லாம் நலம் பெறவேண்டும் பார்ப்போரெல்லாம் நலம் பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணித் “தியானித்துவிட்டுச் செல்லுங்கள்”.

நீங்கள் பஸ் ஏறப்படும் பொழுது உங்கள் நினைவலைகள் எங்கே கூர்மையாகச் செலுத்துகின்றீர்களோ இந்த உணர்வுகள் இடைப்பட்ட நேரங்களில் இந்த பஸ் அடுத்து அது விபத்து ஏற்படுமேயானால் உங்களை அந்தப் பஸ்ஸில் ஏறவிடாது.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

“ரிமோட் கன்ட்ரோல்” என்ற நிலைகளில் உங்களைக் காத்திட நீங்கள் எடுத்த ஞானிகளின் உணர்வுகள் இது வரும். யாம் சொல்லும் “தியானம்… என்பது இது தான்”.

ஒவ்வொரு நொடியிலேயும் அந்தத் தியானத்தின் பலன்களை நீங்கள் பெறமுடியும். ஆகவே அந்த அருள் ஞானியின் உணர்வுகளை அடிக்கடி எண்ணி அதை நமக்குள் சேர்த்துத் தீமைகள் நம்மை அணுகாத நிலையில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இந்நேரம் வரை கேட்டுணர்ந்த இந்த உபதேச உணர்வின் அருள் சக்தி உங்களுக்குள் ஆழமான நிலைகளில் “சக்தி வாய்ந்த வித்தாக” மாறும். அதன் துணை கொண்டு அருள் உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.

இதைத் தான் நாம் எண்ணும் நல்ல குணங்களையே…, “நம்மைக் காக்கும் தெய்வமாகத் துதிப்போம்…” என்று சொல்வது.