ஒரு
மனிதனுக்கு நாம் உதவி செய்திருந்தாலும் அந்த உணர்வின் எண்ணம் கொண்டு
1.அந்த
மனிதன் நம்மை (உயிரான்மாவை) இழுத்துவிடக் கூடாது
2.அல்லது
இன்னொரு மனிதனின் உயிராத்மா நமக்குள் வந்துவிடக் கூடாது.
3.நாம்
இந்த உடலை விட்டுச் சென்றபின் யார் ஈர்ப்பிற்குள்ளும் சிக்கக்கூடாது.
குடும்பத்தில்
குழந்தைகளின் மேல் பாசமாக இருந்தாலும் ஒருவன் மட்டும் சொன்னபடி கேட்காமல்
இருப்பான். அவன் நன்றாக வாழ வேண்டும் என்று நாம் எண்ணியிருப்போம்.
ஆனால்
அவன் சொன்னபடி கேட்கவில்லை எனும்போது
1.மற்ற
எல்லாக் குழந்தைகளும் பிழைத்துக் கொள்வார்கள்.
2.இவனோ
என்ன செய்வான்...! என்ற ஏக்கத்துடன் அவன் மீது எண்ணத்தைச் செலுத்தும் பொழுது
3.அவன்
செய்யும் சேஷ்டைகளைக் (தவறான செய்கைகளைக்) கண்டவுடன்
4.நாம்
வேதனைப்பட்டு அந்த வேதனை கொண்டே நாம் வாழ்வோம்.
கடைசியில்
அந்த வேதனை உணர்வு கொண்டு நாம் இறக்கும் போது அந்தக் குழந்தையின் நினைவே
வருகின்றது. அவன் நினைவு கொண்டு வெளி வரும் பொழுது அவன் உடலுக்குள் நாம்
சென்றுவிடுகின்றோம்.
சென்ற
பின்..., அவன் தீயதைச் செய்தான் அதே உணர்வு கொண்டு தீமையின் நிலைகள் கொண்டே நமக்குள் எடுத்து அவன் உடலிலே மீண்டும்
தீமையைச் செய்து அவனையும் அழிக்கும் நிலைக்கே வந்து விடுகின்றது.
இதைப்
போன்று தான் அவனுக்குள் சென்று அங்கேயும் வேதனையைக் கூட்டி நமக்குள் மனித
சிந்தனைகள் அனைத்தும் அழிந்து உடலை விட்டுச் சென்ற பின் நாம் எங்கே செல்வோம்?
எந்த
விஷத்தின் தன்மை கொண்டு மிருகங்கள் இருந்ததோ அதனின் ஈர்ப்புக்குச் சென்று நாம்
மிருகத்தின் ஈர்ப்புக்குள் சென்று மிருகமாகத்தான் பிறக்க வேண்டும். இது தான்
முடிவு.
எதையும்
யாரையும் காக்க முடியாது.
இதைப்
போன்று நாம் பாசத்தால் பரிவால் இருந்தாலும் நாம் உடலை விட்டு வெளியில் வந்தபின்
எந்த உடலும் நம்மைக் கவர்ந்து விடக் கூடாது.
அதற்கு
நாம் என்ன செய்ய வேண்டும்?
இந்த
உடலில் இருக்கும் பொழுதே மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று இந்த
உணர்வை நமக்குள் செலுத்தி இந்த உணர்வின் எண்ண ஓட்டத்தைக் கூட்டினால் “எட்டாவது
நிலை”.
நம்
உடலில் ஒவ்வொன்றும் சலிப்பு கோபம் வேதனை ஆத்திரம் வெறுப்பு போன்ற உணர்வின் தன்மை
வரும் பொழுது இங்கே வெளியில் இருக்கும் இந்த உணர்வுகள் “எந்தத் திக்கிலிருந்தும்”
நமக்குள் ஊடுருவி அந்த விஷத்தின் தன்மை நம்மை மாய்த்துவிடுகின்றது.
நம்
வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வேதனையான எண்ணங்கள் உணர்ச்சியைத் தூண்டும்
பொழுதெல்லாம் அடுத்த நிமிடமே அதை அடக்கிப் பழகுதல் வேண்டும். எதை வைத்து...?
அந்த
மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் பெறவேண்டும் என்ற
உணர்வினைக் கலந்து கலந்து நம் உணர்வின் அறிவுகளை மாற்றப்படும் பொழுது
1.இந்த
உணர்வின் ஒளிச் சுடராகத் தனக்குள் வளர்ச்சி பெற்று எட்டாவது நிலை அடைந்து
2.ஒன்பதாவது
உயிருடன் ஒளிச் சரீரமாகச் சேர்கின்றது.
இந்த
உடலை விட்டு உயிராத்மா வெளி வரும் பொழுது எந்த உடலும் தன்னைக் கவராத வண்ணம் தீமையை
நீக்கி ஒளிச் சுடராகி
1.எட்டாவது
எந்த விஷத்தன்மை வந்தாலும் அதனின் ஈர்ப்பின் சக்தியை இழக்கச் செய்து
2.உணர்வை
ஒளியாக வளர்க்கச் செய்து விண்ணின் தன்மை எட்டுவது விஜய தசமி.
3.ஆக
“ஈரெட்டு பதினாறு – என்றும் பதினாறு”.
உடலுக்குள்
விஷத்தின் தன்மை எட்டு. உடலை விட்டு வெளியில் சென்ற பின் எட்டு. மற்ற கோள்களின்
சக்திகள் எதையும் தன்னை நாடாவண்ணம் இந்த உணர்வின் தன்மை கொண்டு ஒளியாக மாறி விண்
செல்வதே கடைசி நிலை.
அதுதான்
பத்தாவது நிலை.
மகாபாரதத்தில்
பதினெட்டாம் நாள் போர் என்று காண்பித்திருப்பார்கள்.
நம்
உடலுக்குள் நின்று பத்தானாலும் வெளியில் வந்து எட்டுக் கோள்களின் எதிர்ப்பு
சக்தியான விஷத்தின் தன்மையை முறியடித்து தன் உணர்வின் தன்மை ஒளியாகச் சேர்ந்து
என்றும் பதினாறு ஈரெட்டு பதினாறு.
உடலுக்குள்
வரும் தீமையை மாய்த்து ஒளியின் உணர்வை வளர்த்து வெளியில் சென்றபின் தீமை தன்னை
அணுகாத நிலைகள் கொண்டு அந்த உணர்வின் ஒளியின் சுடராகச் செல்வது பதினெட்டு.
பதினெட்டாம்
நாள் போர் என்று மகாபாரதப் போரின் தத்துவத்தில் இந்தப் போரை வென்றவன் தான் விண்ணை
அடைகின்றான். பத்து + எட்டு = பதினெட்டு
இந்தப்
பூமிக்குள் விளைந்த உணர்வின் ஆற்றல்மிக்க நிலை ஒவ்வொன்றையும் மனிதனான பின்
1.சிருஷ்டிக்கும்
தன்மையாக மனித உடலுக்குள் நாம் பெறும் ஆற்றல் மிக்க சக்திகளை அன்று
உணர்த்தினார்கள்.
2.அந்த
நிலை பெறுவதற்குத்தான் இதை உபதேசிக்கின்றோம்.
நான்
(ஞானகுரு) படித்தது மூன்றாம் வகுப்புதான். நான் இதைப் பேசுகிறேன் என்றால் அந்த
உணர்வின் அலை கொண்டு தான் இதை நான் உணர முடிகின்றது. பேச முடிகின்றது. செயலாக்க
முடிகின்றது.
ஏன்
உங்களால் முடியாதா...! முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.